பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய அரச இலை பரிகாரம்!!

பிரச்சனை இல்லாத மனிதன் என்று இந்த உலகத்தில் யாருமே இல்லை இந்த உலகத்தில் உள்ள அனைவருக்குமே ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும். அந்த பிரச்சனை தீர்வதற்கு பல விதங்களில் நாம் முயற்சி செய்தாலும் தெய்வத்தின் அருள் இருந்தால் அந்த முயற்சிகள் வெற்றி அடையும். எப்பேர்ப்பட்ட பிரச்சன

By Prem Kumar · 5/8/2025

பிரச்சனை இல்லாத மனிதன் என்று இந்த உலகத்தில் யாருமே இல்லை இந்த உலகத்தில் உள்ள அனைவருக்குமே ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும். அந்த பிரச்சனை தீர்வதற்கு பல விதங்களில் நாம் முயற்சி செய்தாலும் தெய்வத்தின் அருள் இருந்தால் அந்த முயற்சிகள் வெற்றி அடையும். எப்பேர்ப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் அந்த பிரச்சனை தீர்வதற்கு சனிக்கிழமை அன்று ஆஞ்சநேயரை வழிபாடு செய்தால் பிரச்சனைகள் தீர்ந்து போகும். அந்த ஆஞ்சநேயர் வழிபாட்டை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.

ஆஞ்சநேயர் வழிபாடு

சனிக்கிழமையில் ஆஞ்சநேயர் வழிபாடு பெருமாள் வழிபாடு என்பது மிகவும் சிறப்பானது. எந்த ஒரு காரியத்திற்கும் ஆஞ்சநேயரிடம் வேண்டுதல் வைத்தால் நிச்சயமாக அந்த வேண்டுதல் அனைத்தும் விரைவிலேயே நிறைவேறும் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக காரிய தடையை நீக்கக்கூடிய அற்புதமான தெய்வமாகத்தான் ஆஞ்சநேயர் திகழ்கிறார். அப்படிப்பட்ட ஆஞ்சநேயர் இடம் பிரச்சனைகள் தீர்வதற்கு வழியை கேட்கலாம். அதற்கு அவரை முழுமனதோடு வழிபாடு செய்ய வேண்டும்.

அரச இலை பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவைப்படுவது அரசு இலை. சனிக்கிழமை என்று காலையில் ஒரு சொம்பு தண்ணீரை எடுத்து அரச மரத்திற்கு அடியில் செல்ல வேண்டும். அரச மரத்திற்கு தண்ணீரை ஊற்றி விட்டு முழு மனதோடு வழிபாடு செய்து அந்த அரச மரத்தில் ஒன்பது அல்லது 21 என்ற எண்ணிக்கையில் அரசியலைகளை பறித்துக் கொண்டு வீட்டிற்கு வரவேண்டும். வீட்டில் அந்த இலைகளை சுத்தம் செய்து துடைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு சிறிய கிண்ணத்தில் மஞ்சளை போட்டு அதனுடன் ஜவ்வாது பற்றிய கற்பூரம் சேர்த்து பன்னீரும் சேர்த்து கெட்டியாக குலைத்து கொள்ள வேண்டும். இந்த கலவையை எடுத்து ஒவ்வொரு இலையிலும் “ஸ்ரீராமா” என்று எழுத வேண்டும் . பிறகு அதை அனைத்தையும் சுருட்டி சிவப்பு நிற நூலால் கட்டி ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று ஆஞ்சநேயருக்கு சாற்ற வேண்டும். உங்களுடைய பிரச்சினைகளை கூறி ஆஞ்சநேயரை முழு மனதோடு வழிபட்டு விட்டு வர வேண்டும்.

பரிகாரம் செய்ய வேண்டிய நேரம்

இந்த வழிபாட்டை ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை செய்ய வேண்டும் தொடர்ச்சியாக 5 சனிக்கிழமை செய்தாலே உங்களுடைய பிரச்சனை தீர்வதற்காக வழிகள் கிடைக்கும். ஐந்து வாரங்கள் முடிந்த பிறகு மறுபடியும் வேறு ஏதாவது ஒரு வேண்டுதலுக்கும் நீங்கள் இந்த வழிபாட்டையும் மேற்கொள்ளலாம் நிச்சயமாக உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

இதனையும் படியுங்கள் : கடனை முழுமையாக அடைக்கும் கோ பரிகாரம்

Recipes AMP · Quick view
View full