கடன் தீர்க்கக்கூடிய எலுமிச்சம் பழ பரிகாரம்!!
இன்றைய காலகட்டத்தில் கடன் என்ற ஒன்று இல்லாத நபரை இருக்க முடியாது ஏதாவது ஒரு ரூபத்தில் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டு கொண்டே தான் இருக்கும் மாதம் மாதம் அந்த கடனை கட்டிக் கொண்டே இருப்பார்கள். வட்டிக்கு கடன் வாங்கினாலும் சரி இஎம்ஐ போன்ற கடனாக இருந்தாலும் சரி மிகவும் கஷ்டப்பட்டு அ
இன்றைய காலகட்டத்தில் கடன் என்ற ஒன்று இல்லாத நபரை இருக்க முடியாது ஏதாவது ஒரு ரூபத்தில் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டு கொண்டே தான் இருக்கும் மாதம் மாதம் அந்த கடனை கட்டிக் கொண்டே இருப்பார்கள். வட்டிக்கு கடன் வாங்கினாலும் சரி இஎம்ஐ போன்ற கடனாக இருந்தாலும் சரி மிகவும் கஷ்டப்பட்டு அந்த கடனிலிருந்து வெளியேறுவதற்கு படாத பாடுபடுவார்கள். வாழ்க்கையில் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட எலுமிச்சம் பழத்தை வைத்து இந்த வழிபாட்டை செய்து பாருங்கள்.
ராஜகனி
ராஜகனி என்று அழைக்கக்கூடிய எலுமிச்சம்பழத்திற்கு அதிகப்படியான ஈர்ப்பு சக்தி உள்ளது. தெய்வீக சக்தி நிறைந்த பழமாகவும் கருதப்படுகிறது. இந்த பழத்தை வைத்து நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றலை நீக்கலாம் மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த பழத்தை வைத்து நம்முடைய கடனை அடைப்பதற்கு சில வழிபாட்டு முறைகளையும் பரிகாரத்தையும் செய்யலாம்.
எலுமிச்சம் பழ பரிகாரம்
நம்முடைய கடன் பிரச்சினைகள் தீர்வதற்கு முதலில் நல்ல மஞ்சள் நிறத்தில் இருக்கக்கூடிய எலுமிச்சம்பழத்தை வாங்க வேண்டும். அந்த பழத்தை ஒரு டம்ளரில் சேர்த்து பன்னீர் ஊற்ற வேண்டும் குறைந்தது இரண்டு மணி நேரம் பன்னீருக்குள் அந்த பழம் ஊற வேண்டும். பிறகு ஒரு வெள்ளை நிற பேப்பர் எடுத்து அதில் நீங்கள் யாருக்கு கடன் தரவேண்டும் என்பதை எழுத வேண்டும். மஞ்சள் நிற துணியில் எலுமிச்சம் பழம் மற்றும் அந்த பேப்பரை ஒரு மூட்டையாக கட்டி தலையணைக்கு பக்கத்தில் வைத்துக் கொண்டு உறங்க வேண்டும். மூன்று நாட்களுக்கு பிறகு அந்த முடிச்சை எடுத்துக் கொண்டு போய் ஓடுகின்ற தண்ணீரில் விட வேண்டும். இல்லையென்றால் பெரிய மரங்களின் அடிப்பகுதியில் பள்ளம் தோண்டி அதில் புதைத்து வைக்க வேண்டும்.
துர்க்கை அம்மன் வழிபாடு
ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்று கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்ட 51 எண்ணிக்கையில் எலுமிச்சம் பழங்களை வாங்கி மாலையாக கோர்த்து அம்மனுக்கு சாற்ற வேண்டும். 9 எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி 18 எலுமிச்சம் பழம் தீபம் போட வேண்டும். தொடர்ந்து ஒன்பது வாரங்கள் துர்க்கை அம்மனை வழிபாடு செய்து வந்தாலும் கடன் பிரச்சனை தீர்ந்து பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இந்த எலுமிச்சம் பழ பரிகாரங்களை முழுமனதோடு செய்து பாருங்கள் நிச்சயமாக கடன் பிரச்சனை தீரும்.
இதனையும் படியுங்கள் : குடும்பத்தில் நன்மைகள் நடக்க துர்க்கை அம்மன் வழிபாடு!!