ஈரல் பெப்பர் ஃப்ரை இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!

ஒரு சிலர் மட்டன் குழம்பு வச்சாலும் சரி சிக்கன் குழம்பு வச்சாலும் சரி, அதுல இருக்கிற கறிய சாப்பிடாமல் ஈரல்தான் தேடுவாங்க. ஈரல் தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அந்த மாதிரி ஈரல் ரொம்ப பிடிச்சவங்களுக்கு ஈரல் எடுத்து இந்த மாதிரி ஒரு தடவை பெப்பர் ஃப்ரை செஞ்சு கொடுத்தீங்கன்னா ரொம்ப ரொம்ப வ

By ·

ஒரு சிலர் மட்டன் குழம்பு வச்சாலும் சரி சிக்கன் குழம்பு வச்சாலும் சரி, அதுல இருக்கிற கறிய சாப்பிடாமல் ஈரல்தான் தேடுவாங்க. ஈரல் தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அந்த மாதிரி ஈரல் ரொம்ப பிடிச்சவங்களுக்கு ஈரல் எடுத்து இந்த மாதிரி ஒரு தடவை பெப்பர் ஃப்ரை செஞ்சு கொடுத்தீங்கன்னா ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. ஈரல்ல நிறைய ஆரோக்கியமான நன்மைகள் இருக்கு. ஈரல் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடம்புல ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடம்புக்கு தேவையான சத்துக்கள் அனைத்துமே கிடைக்கும். அதனால இரு கண்டிப்பா வாரத்தில் ஒரு தடவையாவது வாங்கி சமைச்சு சாப்பிடுங்க. அந்த ஈரல்ல கிரேவி மாதிரி சாப்பிட பிடிக்கலைன்னா இந்த மாதிரி பெப்பர் ஃப்ரை செஞ்சு சாப்பிடுங்க.

இந்த குளிர் காலத்துக்கு எல்லாருக்கும் அடிக்கடி காய்ச்சல் இருமல் சளி என்று வரும். அந்த சமயத்துல ஈரல் வாங்கி அத இந்த மாதிரி ஒரு பெப்பர் ஃப்ரை மாதிரி செஞ்சு சாப்பிட்டீங்கன்னா கண்டிப்பா இருமல் சளி காய்ச்சல் எல்லாமே பறந்து போயிடும் நீங்க மருத்துவமனைக்கு போகணும் அப்படின்ற அவசியம் கிடையாது. மருத்துவமனையில் போய் மாத்திரை மருந்துகள் வாங்கி சாப்பிடுவதற்கு பதிலா வீட்டிலேயே இந்த மாதிரி சூப்பரான டேஸ்டியான ரெசிபிய செஞ்சு சாப்பிடலாம். ருசிக்கு சாப்பிட்ட மாதிரியும் இருக்கும் அதே சமயத்துல உடம்பு சரியில்லாததுக்கு சாப்பிட்ட மாதிரியும் இருக்கும்.

இனிமேல் காய்ச்சல் இருந்தால் யோசிக்காம இந்த மாதிரி ஈரல் வாங்கி அதை பெப்பர் ஃப்ரை போட்டு சாப்பிடுங்க. கார் சாரமா ரசம் வச்சு அது கூட இதை சைட் டிஷ்ஷா வச்சு சாப்பிட்டீங்கன்னா அவ்வளவு ருசியா இருக்கும். வெறும் சாதத்தில் கூட போட்டு பெரட்டி சாப்பிடலாம். தோசை இட்லி ஊத்தி அதுக்கு சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம். தோசையை சுட்டு அதுக்கு மேல இந்த ஈரல் பெப்பர் ஃப்ரை வச்சு தோசையை மடிச்சு மசாலா ஈரல் பெப்பர் ஃப்ரை தோசை மாதிரி சாப்பிடலாம். நமக்கு எப்படி பிடிக்குதோ அந்த மாதிரி சாப்பிட்டுக்கலாம். அவ்ளோ ருசியான ஆரோக்கியமான ஈரல் பெப்பர் ஃப்ரை ஈஸியாக எப்படி செய்யறதுன்னு வாங்க பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : ஈரல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

Recipes AMP · Quick view
View full