பண பிரச்சனையை தீர்க்கக்கூடிய குபேர சனீஸ்வரர் வழிபாடு!!
வாழ்க்கையில் நமக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கக்கூடியது பல பிரச்சனை தான் இந்த பண பிரச்சனைக்கு காரணமாக திகழக்கூடியவர் சனீஸ்வர பகவான். பணப் பிரச்சனை மட்டும் இல்லாமல் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பல பிரச்சனைகளுக்கு சனீஸ்வர பகவான் காரணமாக திகழ்கிறார். ஒருவருடைய ஜாதகத்தில் சனீஸ்வர பக
வாழ்க்கையில் நமக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கக்கூடியது பல பிரச்சனை தான் இந்த பண பிரச்சனைக்கு காரணமாக திகழக்கூடியவர் சனீஸ்வர பகவான். பணப் பிரச்சனை மட்டும் இல்லாமல் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பல பிரச்சனைகளுக்கு சனீஸ்வர பகவான் காரணமாக திகழ்கிறார். ஒருவருடைய ஜாதகத்தில் சனீஸ்வர பகவானின் பார்வை இருந்தால் அவர்களுடைய வாழ்க்கை தலைகீழாக மாறிவிடும். ஒவ்வொருவரின் கர்ம வினைகளுக்கு ஏற்றார் போல் பலன்களை அள்ளிக் கொடுக்கக்கூடியவர் சனீஸ்வர பகவான். சனி திசை ஒருவருக்கு நடக்கும் போது பல பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டு தவிப்பார்கள் அப்படிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கு சனீஸ்வர பகவானை வழிபாடு செய்வதை விட குபேர சனீஸ்வர பகவானை வழிபாடு செய்தால் பலன்கள் அதிகமாக கிடைக்கும்.
குபேர சனீஸ்வர பகவான்
சனீஸ்வர பகவான் ஒவ்வொரு ஆலயங்களிலும் ஒவ்வொரு பெயர் கொண்டு அழைக்கப்படுவார். பொதுவாக சனீஸ்வரபகவானை வழிபாடு செய்தால் அவரால் ஏற்பட்ட அனைத்து பிரச்சினைகளும் நீங்கும். சனீஸ்வர பகவான் திசை நடக்கக்கூடிய நேரத்தில் கஷ்டங்களிலிருந்து விடுபட முடியும். அவர் கொடுக்கக்கூடிய கஷ்டங்களில் பெரிய கஷ்டமாக திகழ்வது பல பிரச்சனை அப்படிப்பட்ட பண பிரச்சனையை குபேர சனீஸ்வர பகவான் வழிபாடு தீர்த்துவிடும்.
குபேர சனீஸ்வரர் ஆலயம் இருக்கும் இடம்
சிவகாசியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் வழியில் குபேர சனீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. குகன் பாறை என்ற இடத்தில் வீற்றிருக்கக்கூடிய வேறு சனீஸ்வரர் ஆலயம் இரண்டாவது காசி என்று அழைக்கப்படுகிறது. அங்கு காசி விஸ்வநாதரும் அன்னபூரணி அம்பாளும் வீற்றிருக்கிறார்கள் அந்த ஆலயத்தில் இருக்கக்கூடிய சனீஸ்வரரை தான் குபேர சனீஸ்வரர் என்று அழைக்கிறோம். இந்த ஆலயத்திற்கு தொடர்ந்து மூன்று பிரதோஷங்கள் சென்று வழிபாடு செய்தால் திருமண தடை நீங்கும் திருமண வரன் அமையும்.
நெய் தீப வழிபாடு
வியாழக்கிழமை அன்று குபேரரை வழிபாடு செய்யக்கூடிய நேரம் ஆன 5.30 மணியிலிருந்து 7.30 மணிக்குள் அந்த ஆலயத்தில் இருக்கக்கூடிய சனீஸ்வர பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்வது நல்லது. இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வழிபடுவது சிறந்தது அப்படி வழிபட்டால் பணம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். அந்த ஆலயத்திற்கு போக முடியாதவர்கள் வீட்டின் அருகில் இருக்கக்கூடிய சிவன் கோவிலுக்கு சென்று இரண்டு நெய் தீபங்களை ஏற்றலாம். தீபம் ஏற்றும் போது “ஓம் குபேர சனீஸ்வராய நமஹ” என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் இதுவரை இருந்த பண பிரச்சனைகளும் நீங்கிவிடும். முழு மனதோடு நம்பிக்கையோடு இதனை செய்து பாருங்கள்.
இதனையும் படியுங்கள் : கஷ்டம் தீர சனி பகவானுக்கு செய்யும் பரிகாரம்