மகாபாரதத்தில் சகுனி நல்லவனா ? கெட்டவனா ? பாகம்-3 முழு விளக்கம் இதோ!
மகாபாரதத்தின் முக்கிய வில்லன் சகுனிக்கு நடந்த கொடுமைகளால், அவன் ஏற்ற சபதத்தின் விளைவாக எப்படி மகாபாரத போரை தொடங்கி வைக்கிறான் என்று பார்த்துக் கொண்டே வருகிறோம். அந்த வகையில் நாம் கடைசியாக தன் சகோதரி காந்தாரியின் மகன் துரியோதனன் மனதில் பாண்டவர்கள் உங்களுடைய எதிரிகள் என்ற எண்ணத்தை
மகாபாரதத்தின் முக்கிய வில்லன் சகுனிக்கு நடந்த கொடுமைகளால், அவன் ஏற்ற சபதத்தின் விளைவாக எப்படி மகாபாரத போரை தொடங்கி வைக்கிறான் என்று பார்த்துக் கொண்டே வருகிறோம். அந்த வகையில் நாம் கடைசியாக தன் சகோதரி காந்தாரியின் மகன் துரியோதனன் மனதில் பாண்டவர்கள் உங்களுடைய எதிரிகள் என்ற எண்ணத்தை விதைத்தது வரை பார்த்திருக்கிறோம் அதை தொடர்ந்து இந்த பகுதியில் பார்க்கலாம்…
சகுனி பாகம் – 3 பீமனை கொல்ல சதி
துரியோதனன் மனதிற்குள்ளும் பாண்டவர்கள் நம் எதிரிகள் என்ற எண்ணம் உருவானது பாண்டவர்களின் மீது அவனுக்கு வெறுப்பு வந்தது. மேலும் சகுனி துரியோதணனிடம் இவர்கள் ஐவர் இருக்கும் வரை அடுத்த அரசர் என்ற பட்டம் உனக்கு கிடைப்பதற்கு தடையாகவே இருப்பார்கள் அதனால் இந்த ஐவரில் பலசாலியான ஒருவனை நாம் கொல்ல வேண்டும் என்ற ஒரு யோசனையை துரியோதனிடம் கூறுகிறார். நாம் கொல்ல வேண்டியவர் யார் என்றும் எதற்காக அவனை கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து சகுனி துரியோதனனுக்கு எடுத்துரைக்கிறார். பாண்டவர்களின் ஐவரில் அதிக பலசாலியானவன் பீமன் அவனிடம் ஆயிரம் யானைகளின் பலம் உண்டு அதனால் அவனைத்தான் நான் முதலில் கொலை செய்ய வேண்டும் என்று துரியோதனுடன் சேர்ந்து கொண்டு சகுனியும் திட்டம் ஒன்றை தீட்டுகிறார். அதன்படி முதலில் பீமன் குளிக்கும் கிணற்றின் கூர்மையான ஈட்டிகளை ஊன்றி வைத்து அவனை கொலை செய்ய பார்கிறார்கள் ஆனால் அதிலிருந்து தப்பி விடுகிறான். பீமனுக்கு பாயாசம் என்றால் மிகவும் பிடிக்கும் அதனால் இரண்டாவதாக அவனை கொலை செய்ய அவன் சாப்பிடும் பாயாசத்தில் விஷத்தை கலந்து கொடுக்கிறார்கள். இது போதாது என்று விஷ பாம்பை வைத்து கடிக்க செய்கிறார்கள் அப்போதும் பீமன் உயிர் பிழைத்துக் கொள்கிறான் அதன் பின்பு பீமனின் கை கால்களையும் கட்டி அவனை நாகலோகத்திற்குள் தூக்கிப் போடுகிறார்கள் அங்கிருந்தும் பீமன் மீண்டு வருகிறான். இப்போது சகுனிக்கு புரிய வருகிறது நம்மால் பீமனை கொல்லவே முடியாது என்று இப்போதுதான் சகுனி இந்த மகாபாரத கதையில் முழு வில்லனாக செயல்பட வேண்டிய நேரம் வருகிறது நாம் இவ்வளவு நாட்கள் பார்த்த சகுனி சிறு சிறு சூழ்ச்சிகள் மட்டும் செய்து வந்தானன. இப்போது ஒரு மிகப்பெரிய கொடூர செயலை அரங்கேற்ற போகிறான் அதுவும் அரசரின் உதவியுடன், நம்மாள் ஒருவனை மட்டும் தனியாக கொள்ள முடியாது அதனால் பாண்டவர்கள் ஐந்து பேரையும் ஒன்றாக தீர்த்த கட்ட வேண்டும் என்ற ஒரு யோசனையை துரியோதனனுக்கு சகுனி கொடுக்கிறான் அதற்கு துரியோதனன் எப்படி அது சாத்தியமாகும் அவர்கள் அனைவரையும் கொன்றால் அந்த பழி சந்தேகமே இல்லாமல் நம் மீது தான் விழும். இந்த நாட்டு மக்கள் அதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள் அதையும் தாண்டி பீஷ்மர், விதுரர் இருக்கிறார்கள் இவர்களுக்கு எல்லாம் தெரிந்தால் என்ன நடக்கும் என்ற சந்தேகத்தை மாமா சகுனியிடம் கேட்கிறான்.
சகுனி நம் மீது பழி வீழாமல் இதை நாம் செய்ய வேண்டும் அதற்கான திட்டம் திட்டமும் என்னிடம் இருக்கிறது என்று மேலும் தன் யோசனைகளை தூரியோதனிடம் கூறுகிறான் நாம் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை வைத்துக்கொண்டு ஒரு அரக்கு மாளிகையை உருவாக்க வேண்டும் அந்த மாளிகைக்கு பாண்டவர்கள் ஐவர் மட்டுமில்லாமல் அவர்களுடைய தாய் குந்தியையும் சேர்த்து அனுப்ப வேண்டும் அவர்களுக்கு வயிறார உணவு போட்டே அந்த உணவிலே மயக்க மருந்தும் சேர்த்து பறிமாற வேண்டும் அவர்கள் மயக்கியது அந்த மாளிகையை எரிக்க வேண்டும் என்ற ஒரு கொடூரமான திட்டத்தை சகுனி துரியோதனிடம் கூறுகிறார் அதன்படி ஒரு மிகப்பெரிய அரக்கு மாளிகையும் கட்டி அரசர் திருதிராஷ்டரின் உதவியுடன் பாண்டவர்களை அந்த மாளிக்கு சென்று சில நாட்கள் தங்க சொல்லி உத்தரவிடுகிறார்கள். அரசவையில் ஒரு அமைச்சராக இருக்கும் பாண்டவர்களின் சித்தப்பா விதுரர்க்கு இந்த திட்டங்களைப் பற்றி நன்கு தெரியும். விதுரர் யார் என்றால் திருதாராஷடரின் 2வது சகோதரர் அவர்கள் மிகவும் நல்ல மனம் கொண்டவர் அதே நேரம் அரசருக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்ற நோக்கமும் உடையவர். அதனால் பாண்டவர்களை மாளிகைக்கு சென்று விடப்போகிற விதுரர் இவர்களிடம் உண்மையையும் சொல்லிவிடக்கூடாது அதே நேரம் இந்த கொடூர சம்பவத்தில் மாட்டியும் சொள்ளக்கூடாது என்பதற்காக ஒரே ஒரு வார்த்தையை மட்டும் கூறுகிறார். அது என்ன வார்த்தை என்றால் காடு தீப்பற்றி எரியும் போது எலிகள் தப்பித்து விடும் இந்த வார்த்தையை கேட்ட பாண்டவர்கள் முதலில் இதை சரியாக புரிந்து கொள்ளவில்லை, இருந்தாலும் இந்த வார்த்தை அவர்கள் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது அப்படியே மாளிகைக்குள் செல்கிறார்கள் மயக்க மருந்து கலந்த உணவு அவர்களுக்கு பரிமாறப்படுகிறது உணவு சாப்பிட்டு விட்டு பாண்டர்வர்கள் அனைவரும் மயக்கம ஆகிறார்கள். மாளிகைக்கு ஒருவன் தீ வைத்துக் கொண்டிருக்கிறான் அந்த அரக்கு மாளிகை நெருப்பு என்று சொன்னாலே தீப்பற்றி தெரியும் அந்த அளவிற்கு நெருப்பால் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை வைத்து கட்டி இருக்கிறார்கள்.அதனால் மாளிகையில் தீ வைத்த சில வினாடிகளிலே அந்த மாளிகை முழுவதும் தீ மடமடவென பற்றி எரிகிறது அதிலிருந்து வெளிவந்த வெப்பத்தின் காரணமாக முதலில் பீமன் எழுந்து கொள்கிறான் அவன் தனது தாய் மற்றும் சகோதரர்களை எழுப்பி விடுகிறான் இப்பொழுதுதான் அவர்களுக்கு சித்தப்பா விதுரர் கூறியது நினைவுக்கு வருகிறது காடு தீப்பற்றி எரியும்போது எலி தப்பித்துக் கொள்ளும். இப்போது அவர்களுக்கு புரிந்து விடுகிறது இந்த மாளிகையில் இருந்து தப்பிப்பதற்கு ஏதோ ஒரு வழியில் இருக்கிறது என்று அந்த வழியை தேடுகிறார்கள் கடைசியாக அந்த வழியையும் பீமன் கண்டுபிடிக்கிறான். அந்த வழியில் பீமன் எல்லாரையும் தூக்கிக் கொண்டு தப்பிக்கிறான். அடுத்த நாள் ஊர் மக்கள், அரசர், பீஷ்மர் என அனைவருக்கும் பாண்டவர்கள் மாளிகையோடு சேர்த்து இறந்து விட்டன என்ற செய்தியும் சென்றடைந்தது அஸ்தினாபுரமே சோகத்தில் ஆழ்ந்தனே. அடுத்து என்ன நடந்தது பொறுத்து இருந்து பார்க்கலாம்.
தொடரும்….