மகாபாரத்தில் சகுனி நல்லவனா ? கெட்டவனா ? பாகம் – 4 முழு விளக்கம் இதோ!

மகாபாரதத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரமான சகுனியை பற்றி நாம் தொடர்ந்து பேசி வருகிறோம் அதில் சகுனிக்கு நடந்த கொடுமையும் அந்த கொடுமைகளால் சகுனி எப்படி மகாபாரத போரை தொடங்கி வைக்கிறான் என்பதை பார்த்து வருகிறோம் கடைசியாக பாண்டவர்கள் உறங்கிக் கொண்டிருந்த அரக்கு மாளிகையை தீ வைத்து எறிக்கு

By Prem Kumar · 13/10/2023

மகாபாரதத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரமான சகுனியை பற்றி நாம் தொடர்ந்து பேசி வருகிறோம் அதில் சகுனிக்கு நடந்த கொடுமையும் அந்த கொடுமைகளால் சகுனி எப்படி மகாபாரத போரை தொடங்கி வைக்கிறான் என்பதை பார்த்து வருகிறோம் கடைசியாக பாண்டவர்கள் உறங்கிக் கொண்டிருந்த அரக்கு மாளிகையை தீ வைத்து எறிக்கும் படி ஒரு கொடூர செயலை செய்தான் சகுனி அதன் பின் என்ன நடந்தது என்று பார்க்கலாம்!

சகுனி பாகம் – 4 பஞ்சாலி சுயம் வரம்

மாளிகையில் உறங்கு கொண்டிருந்த பாண்டவர்கள் சித்தப்பா விதுரரின் உதவியுடன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்கள் தப்பி சென்ற பாண்டவர்கள் யாரு கண்ணுக்கு தெரியாமல் மறைந்து பிராமணர்களாக வாழ தொடங்கி விட்டனர். அஸ்த்தினாபுரத்திலயோ பாண்டவர்கள் மாளிகையில் பற்றிய நெருப்புக்கு இறையாகி இறந்துவிட்டன என்ற செய்தியாள் அனைவரும் சோகக் கடலில் மூழ்கி இருந்தனர் அந்த சோகக்கடலிலும் சகுனி, துரியோதனன், துச்சாதனன் போன்றோர் மகிழ்ச்சியாக இருந்தனர். பாண்டவர்கள் இறந்து விட்டார்கள் என்ற நினைப்புடன் சந்தோஷத்துடன் இருந்து சகுனி அடுத்த வேலையாக துரியோதனனுக்கு முடி சூட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான் அதனால் திருதிராஷ்டரிடம் துரியோதனுக்கு பட்டத்து இளவரசனாக முடி சூட வேண்டும் என சொல்கிறார். என்னதான் சகுனி துரியோதனனை அரசனாக்குவதற்கு சூழ்ச்சி செய்தாலும் இது அங்கு இருந்து அனைவருக்கும் சரியாக பட்டதால் அந்த சோகக்கடலிலும் துரியோதனனுக்கு பட்டாபிஷேக விழா சிறப்பாக நடந்தது. இந்த நேரத்தில் தான் துருபத நாட்டில் அரசர் தன் மகள் பாஞ்சாலிக்கு திருமணம் நடத்தி வைக்க சுயம் வரம் ஒன்று நடத்த போகிறார். இந்த செய்தியை அறிந்த சகுனி தூரியோதனிடம் நீ போய் அந்த சுயம் வரத்தில் கலந்து கொண்டோல் இப்போது இருக்கும் அஸ்த்தினாபுரத்துடன் சேர்ந்து துருபத நாடும் உனக்கே சொந்தம். சுயம் வரத்தில் கலந்துகொண்டு பாஞ்சாலியை திருமணம் செய்து கொண்டால் அழகின் மறுஉருவமான பாஞ்சாலியும் உனக்கு மனைவியாக மாறுவாள் எனவும் துரியோதனிடம் கூறி அவன் ஆசையை தூண்டி சுயம்வரத்திற்கு துரியோதனனை அனுப்பி வைத்தார். அந்த சுயம் வரத்தில் கீழே இருக்கும் தண்ணீரில் மீனை பார்த்துவாறு மேலே இருக்கும் மீனை சரியாக குறி வைத்து வில்லால் தாக்க வேண்டும். இந்த இந்த போட்டியில் வெல்வதற்கு இரண்டு பேரால் மட்டுமே முடியும் ஒன்று மாவீரன் கர்ணன் இன்னொன்று மாவீரன் அர்ஜுனன் துரியோதனனுக்கும் வில்லுக்கும் சம்பந்தமே இல்லை அதனால் துரியோதனன் அந்த போட்டியில் தோல்வியை தழுவினான், கர்ணண் ஒரு தேரோட்டியின் மகன் என்று அவமானப்படுத்தப்பட்டார், யாராலும் இந்த போட்டியில் வெல்ல முடியவில்லை அப்போது பாஞ்சாலியின் சகோதரன் இந்த போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் நாங்கள் எங்கள் வீட்டு பெண்ணை ஒரு சுத்தமான வீரனுக்கு திருமண செய்து வைக்க தான் விரும்புகிறோம் அதனால் யார் வேண்டுமானாலும் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம் என்று ஒரு அறிக்கை விடுகிறான்.

இந்த நேரத்தில் தான் தீ விபத்தில் இருந்து தப்பி பிரமணர்களாக மறைந்து வாழும் பாண்டவர்களில் ஒருவன் அர்ஜுனன் அந்த இடத்திற்கு வருகிறான் அவனும் போட்டியில் கலந்து கொள்கிறான் போட்டியில் வெற்றியும் பெறுகிறான். அதன் பின்பு பாஞ்சாலியை திருமணம் செய்து கொள்கிறான் அவன் மட்டும் திருமணம் செய்யாமல் ஐந்து சகோதரர்கள் ஒரு பெண்ணை மணந்து கொள்கிறார்கள் திருமணமான கையோடு பாண்டவர்கள் மீண்டும் அஸ்தினாபுரத்திற்கு வந்து அஸ்தினாபுரத்தில் எங்களுக்கு உண்டான பங்கு எங்களுக்கு பிரித்து தர வேண்டும் என்றும் கேட்கிறார்கள். அவர்களுக்கு உண்டான பங்கை கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் திருதிராஷ்ட்ரர் இருந்ததால் அஸ்தினாபுரத்தில் எதற்கு உதவாமல் இருந்த காண்ட வணம் என்ற இடத்தை பாண்டவர்களுக்கு பிரித்து கொடுக்கிறார்கள். பாண்டவர்களும் அந்த இடத்திற்கு சென்று அந்த இடத்தை ஒழுக்குப்படுத்தி, அந்த இடத்தை செழுமையாக்கி அங்கே இந்திர பிரஸ்பம் என்ற ஒரு நாட்டையே உருவாக்கி மிகப்பெரிய செல்வத்தையே சேர்த்து வைக்கிறார்கள். அதன் பின்பு இந்திர பிரஸ்பத்தில் பாண்டவர்கள் நடத்தும் அஸ்வமேதை யாகத்தின் அழைப்பு அஸ்தினாபுரத்திற்கும் வருகிறது. இந்த அழைப்பு வந்தவுடன் சகுனி துரியோதனனிடம் நாம் இந்த விழாவிற்கு நாம் செல்ல வேண்டும் எனக் கூறுகிறார் இதைக் கேட்ட துரியோதனன் சகுனியிடம் கோபப்படுகிறான் பாஞ்சாலி சுயவரத்தில் தோற்ற நான் அங்கு சென்றால் அது எனக்கு அவமானமாக இருக்கும் என்று சொல்ல. அதற்கு சகுனி இல்லை மகனே அவர்கள் எவ்வளவு செல்வம் சேர்த்து வைத்திருக்கிறார்கள் அவர்கள் எப்படி மாளிகை கட்டி இருக்கிறார்கள் என்பதை பார்ப்பதற்காக செல்ல வேண்டுமென்று என சகுனி கூற துரியோதனன் அந்த விழாவிற்கு செல்வ ஒப்புக்கொள்கிறான். இரண்டு பேரும் அந்த விழாவிற்கு செல்கின்றனர் அங்கு பாண்டவர்கள் கட்டி வைத்திருந்த மாயாஜால அரண்மனையை பார்த்து பிரமிக்கிறார்கள் அவர்கள் சேர்த்து வைத்துள்ள செல்வத்தை எல்லாம் பார்த்து வாயை திறக்கிறார்கள் இந்த அத்தனையும் நமக்கு சொந்தமாக வேண்டும் என்ற ஒரு யோசனை சகுனிக்கு வருகிறது இந்த யோசனை தான் மகாபாரதப் போருக்கு ஒரு முக்கிய பங்கு அற்ற போகிறது அரண்மனைக்கு சென்று வந்த துரியோதனனுக்கும் அவர்கள் சேர்த்து வைத்திருந்த செல்வத்திற்கும் அவர்கள் கட்டி வைத்திருந்த மாளிகையின் மீது ஒரு ஆசை வருகிறது அந்த ஆசையை புரிந்து கொண்ட சகுனியும் துரியோதனிடம் சென்று பொறுமையாக அவர்கள் நாட்டையும் அவர்கள் செல்வத்தையும் நாம் அபகரிக்க வேண்டும் அதற்கு என்னிடம் ஒரு யோசனை உள்ளது சொல்லவா என்று கேட்க துரியோதனனும் சொல்லுங்கள் என்று கேட்கிறான் பாண்டவர்களுடன் சூதாடி அவர்கள் செல்வத்தையும் நாட்டையும் நமக்கு சொந்தமாக வேண்டும் என்று சகுனி ஒரு யோசனை கூற அவர்கள் எப்படி நம்முடன் சூதாட வருவார்கள் எனி தூரியோதனன் கேட்க சகுனியோ கண்டிப்பா வரமாட்டார்கள் ஆனால் அவர்கள் கட்டியது போல் ஒரு மாளிகையோ ஒரு கட்டிடமும் புதியதாக கட்டு அங்கே அவர்களை விருந்துக்கு ஆழை என்று சகுனி கூற அதே போல துரியோதனன் ஒரு மாளிகையை கட்டுகிறான்.

இப்போது அவர்களை விருந்து அழைக்க வேண்டும் நான் போய் அழைத்தால் அவர்கள் வர மாட்டார்கள் அதனால் இதை அரசர் அழைப்பாக மாற்ற வேண்டும் என்று சகுனி அரசரிடம் சென்று வெகு நாட்களாக உங்கள் மகன் சரியாக சாப்பிடவில்லை உடை அணி சரிவர அணிந்து கொள்வதில்லை எதையோ யோசித்துக் கொண்டே இருக்கிறான் என்று சகுனி திருதிராஷ்டரிடம் கூறுகிறான் இதைக் கேட்ட திருதிராஷ்டரர் ஏன் துரியோதனனுக்கு இந்த நிலைமை ஏன் அவன் இப்படி இருக்கிறேன் என கேட்கவே சகுனியோ அவனுக்கு பாண்டவர்களின் மாளிகை மீதும் செல்வத்தின் மீதும் ஆசை வந்துவிட்டது அதை அடைய வேண்டும் என நினைத்துக் கொண்டே இருக்கிறான் என சகுனி கூற திருதராஷ்டிரர்க்கும் இந்த ஆசை இருக்க தான் செய்கிறது இருந்தாலும் வெளிகாட்டிக் கொள்ளாமல்அது முடியாது என கூறவே சகுனியோ நாம் இதற்காக போர் செய்ய வேண்டாம் உங்கள் மகன் துரியோதனன் ஒரு மாளிகை கட்டி இருக்கிறான் அதற்கு அவர்களை விருந்து அழைத்து அவர்களுடன் சூதாடி அவர்களிடம் இருந்து அத்தனையும் நாம் அபகரித்துக் கொள்ளலாம் எனக் கூற அமைச்சரவையில் இருந்த விதுரர் இது சரியாக படவில்லை வேண்டாம் என்றார் உடனே சகுனி உங்களுக்கு எதைப் பற்றி தான் கவலை இருக்கிறது நீங்கள் பேச வேண்டாம் எனக் கூற திருதிராஷ்ட்ரர் பாண்டவர்கள் அழைக்க உத்தரவிடுகிறேன் எனக்கு கூறி விடுகிறார் அந்த அரசனை ஏற்றுக்கொண்டு விதுரர் இந்திர பிரஸ்பம் செல்கிறார் அங்கு வந்த சித்தப்பா விதுரர் அவர்களை பாண்டவர்கள் வரவேற்றார்கள் இப்போது விதுரர் பாண்டவர்களிடம் அரசாணையை பற்றி சொல்கிறார் இது போல் துரியோதனன் கட்டிய மாளிகைக்கு நீங்கள் விருந்துக்கு வர வேண்டும், விருந்து முடிந்தவுடன் சூதாட்டங்கள் விளையாடலாம் எனவும் கூற பாண்டவர்களில் பீமன் முதலில் முடியாது என கூறினாலும் பாண்டவர்களின் மூத்தவன் தர்மனுக்கு சூதாடுவது மிகவும் பிடித்தமான ஒன்று அதனால் தர்மன் பாண்டவர்களிடம் நம்மை அழைத்தது பெரியப்பா அழைக்க வந்தது சித்தப்பா அதனால் நாம் கண்டிப்பாக அங்கு செல்ல வேண்டும் என சொல்லி நாங்கள் வருகிறோம் என்று சித்தப்பாவது விதுரரிடம் சொல்கிறான். விதுரர் இந்த செய்தியை அஸ்தினாபுரம் சென்று பாண்டவர்கள் வர ஒப்புக் கொண்டார்கள் என திருதிராஷ்ட்ரரிடம் கூற சகுனிக்கு மிகவும் சந்தோஷம் துரியோதனனை கட்டியணைத்து நாம் வெற்றி பெறுவது உறுதியாக போகிறது அவர்களின் செல்வத்தை அவர்களிடம் இருக்கும் அனைத்தையும் நாம் அபகரிக்க போகிறோம் என்று மகிழ்ச்சியாக இருந்தார்கள் இதற்கு அப்புறம் என்ன நடந்தது காத்திருங்கள் தொடர்ந்து பார்க்கலாம்…தொடரும்…..

Recipes AMP · Quick view
View full