மகாபாரத்தில் சகுனி நல்லவனா ? கெட்டவனா ? பாகம் – 5 முழு விளக்கம் இதோ!

நாம் தொடர்ந்து இந்த மகாபாரத பதிவில் சகுனிக்கு நடந்த கொடுமையால், அவன் எப்படி இந்த உலகம் கண்டிராத ஒரு மகாயுத்தத்தை தொடங்கி வைத்தான் என்பதை வரிசையாக பார்த்துக் கொண்டே வருகிறோம் அதில் நாம் கடைசியாக சென்ற பாகத்தில் சகுனியும் துரியோதனனும் அவர்கள் போட்ட திட்டப்படி சூதாட பாண்டவர்களுக்கு

By Prem Kumar · 14/10/2023

நாம் தொடர்ந்து இந்த மகாபாரத பதிவில் சகுனிக்கு நடந்த கொடுமையால், அவன் எப்படி இந்த உலகம் கண்டிராத ஒரு மகாயுத்தத்தை தொடங்கி வைத்தான் என்பதை வரிசையாக பார்த்துக் கொண்டே வருகிறோம் அதில் நாம் கடைசியாக சென்ற பாகத்தில் சகுனியும் துரியோதனனும் அவர்கள் போட்ட திட்டப்படி சூதாட பாண்டவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்கள் அவர்களும் விளையாட வருகிறோம் என்று சொல்லி இருந்தார்கள். இனி என்ன நடக்கப் போகிறது பார்க்கலாம்

சகுனி – 5 சூதில் சகுனிய மிஞ்ச யாரும் இல்லை

துரியோதனின் புதிய மாளிகைக்கு விருந்துக்கு வந்த பாண்டவர்கள் உணவு உண்டு முடிந்தது எல்லோரும் களைப்பாற அமர்ந்து இருந்தனர். அந்த நேரத்தில் சூது விளையாட ஆரம்பிப்போமா இன்று சகுனி பேச்சை ஆரம்பிக்கிறேன் அதன்படி தருமனும் ஆடலாம் என்று கூற முதலில் சகுனி தன் பகடைக்காயை கையில் எடுக்கிறான் சகுனியின் கையில் இருக்கும் பகடைக்காய் யார் உடையது அது எப்படி உருவானது என்பதெல்லாம் நாம் முன் கதையில் பார்த்திருப்போம். அந்த பகடைக்காயை சகுனி எடுத்து விளையாட ஆரம்பிக்கும் போது தர்மன் சகுனியை உங்களிடம் சூது விளையாடுவதற்கு பொருள் இருக்கிறதா என்று கேள்வி எழுப்புகிறான். தருமன் இப்படி கேட்டவுடன் பொங்கியெழுந்த துரியோதனன் அவருக்கு பொருள் நான் கொடுக்கிறேன் என்று துரியோதனன் கூறுகிறான். தருமன் அது எப்படி ஒரு ஒரு விளையாடுவதற்கு இன்னொருவர் பொருள் தரலாம் என்று கூற என் மாமா தோற்றால் அதற்கு உன்டான பொருட்களை நான் தருகிறேன் நீ ஒன்றும் கவலைப்பட வேண்டாம் தர்மா நீ விளையாட்டை ஆரம்பி என்று துரியோதனன் கூற சூது விளையாட்டு ஆரம்பிக்கிறது. சகுனியும் பகடைக்காயை உருட்டுகிறான் அவன் என்ன நினைக்கிறானோ அதெல்லாம் அந்த பகடைக்காயில் விழுகிறது எதிர்ப்புறம் இருக்கும் தருமனும் ஒவ்வொன்றாக தோற்றுக்கொண்டே வருகிறான் முதலில் செல்வங்களை தோற்றான் அடுத்து தன் நாட்டை பறிகொடுக்கிறான் இப்படி தன்னிடம் இருக்கும் சொத்துக்கள் அனைத்தையும் பறிகொடுத்து விட்டார். இனி விளையாட ஒன்னும் இல்லை என்ற பொழுது சகுனி உன் தம்பிகளை வைத்து ஆட வேண்டிய தானே எனக் கூறு தயங்காமல் தருமன் அதையும் செய்கிறான் தன்னுடைய ஒவ்வொரு தம்பிகளாக வைத்து சூது ஆடுகிறான் இப்படி தன் தம்பிகள் அனைவரையும் வைத்து சூது ஆடியும் தருமன் தோற்று விட்டார். கடைசியாக சகுனியும் நான் உனக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன் உன்னை வைத்து நீயே சூது ஆடு நீ ஜெயித்தால் நீ தோற்ற மொத்தத்தையும் உனக்கு தருகிறேன் என்று கூற தன்னை வைத்து சூது ஆடியும் தர்மர் அங்கு தோற்றுவிடுகிறார். இறுதியில் பாண்டவர்கள் தனக்கு அடிமையாக மாறிவிட்டார்கள் என்று கௌரவர்கள் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்கின்றார்கள் இதை சபையில் இருந்து அனைவரும் சோகமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கிருந்து கொதித்து எழுந்த சகுனி அனைவரும் கொண்டாடுவதை நிறுத்துங்கள் எனக்கூறிவிட்டு துரியோதனனை பார்த்து பாண்டவர்கள் யார் உன் தம்பிகள் அவர்கள் தோற்று விட்டார்கள் என்று இப்படி கொண்டாடுகிறாயே உனக்கு வெட்கமாக இல்லையா என்று சகுனி கேட்க அவையில் இருந்த அனைவரும் ஆடி போய்விட்டார்கள். யார் இது சகுனியை இப்படி கேட்கிறது சகுனி யார் என்று நமக்கும் தெரியும் அவர் இப்படி கேட்டால் அதற்குள் ஏதாவது ஒரு உள் அர்த்தம் இருக்கும் என்றும் நமக்கும் தெரியும் சகுனி மறுபடியும் ஆரம்பிக்கிறார் உன் சகோதரன் தோற்று விட்டால் இப்படியா சந்தோஷப்படுவாய்.

தர்மன் இப்பொழுது நினைத்தால் கூட அவன் மனைவி பாஞ்சாலியை வைத்து சூது ஆடுவான் அதில் அவன் வெற்று பெறுவானன் அவன் இழந்த பொருட்கள், நாடு, செல்வங்கள் அனைத்தையும் அவன் மீட்டு எடுப்பான் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று கடைசியில் பாஞ்சாலியை வைத்து ஆட வைக்கிறான் சகுனி . சகுனி இப்படி சொன்னதும் அவையில் இருக்கும் அனைவரும் மீண்டும் ஆடி போய்விட்டார்கள் அனைவரும் இதை ஒரு விவாதமாக பேசும்போது தர்மன் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்து சற்றும் சலனம் இல்லாமல் பஞ்சாலியை தை்து சூது ஆட நினைத்தான் சூது ஆடினான் மறுபடியும் தர்மன் வழக்கம் போல் தோற்றான் இப்பொழுது பாஞ்சாலியையும் அவன் இழந்துவிட்டான். இப்போது பாண்டவர்களும் அவர்களின் சொத்துக்களும் அவர்களுடை நாடும் அவர்கள் ஏன் அவர்களுடைய மனைவியும் கூட இப்போது கௌரவர்களுக்கு அடிமையாக மாறிவிட்டனர். கௌரவர்கள் இப்படி உச்சகட்ட சந்தோஷத்தில் இருக்கும் பொழுது தான் தருமன் எதையெல்லாம் வைத்து இங்கு சூது ஆடி தோற்றனோ அனைத்தும் இருக்கிறது ஆனால் பாஞ்சாலியை தவிர என சகுனி கூற. அதனால் கௌரவர்கள் பாஞ்சாலியை சபைக்கு வரவழைக்க எண்ணினார்கள் அதனால் துரியோதனன் அங்கிருந்து ஒரு அரண்மனை வேலைக்காரனை வரவழைத்து பாஞ்சாலியை சபைக்கு அழைத்து வருமாறு ஆணையிட்டான். அவனும் பாஞ்சாலியிடம் போய் நடந்ததை சொல்லி சபைக்கு வருமாறு கேட்டுக் கொண்டேன் அதற்கு பாஞ்சாலி தர்மன் அவனை வைத்து சூது ஆடி தோற்று விட்டான் என்றால் அதன் பிறகு என்னை வைத்து அவனால் ஆட முடியாது ஏனென்றால் ஒரு அடிமைக்கு அரசியின் மீது எந்த வித உரிமையும் கிடையாது என்று பாஞ்சாலி சொல்லி வேலைக்காரனை அனுப்பி விட்டாள். அந்த அரண்மனை வேலைக்காரன் பாஞ்சாலி சொன்னதை துரியோதனனிடம் வந்து சொல்ல தூரியன் அதெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது அவளை அழைத்து வர நாம் மறுபடியும் ஆணையிட பாஞ்சாலி சொன்னதையே சொல்ல கடுப்பான தூரியோதனன் இம்முறை தன் தம்பியில் ஒருவனான துச்சாதனனை அனுப்பி பாஞ்சாலியை இழுத்து வரச் சொல்கிறான் இந்த இடத்தில் இருந்து தான் மகாபாரத போர்க்கான விதை விதைக்கப்படுகிறது அடுத்து என்ன நடந்தது காத்திருங்கள் பார்க்கலாம்….தொடரும்…

Recipes AMP · Quick view
View full