மகாபாரத்தில் சகுனி நல்லவனா ? கெட்டவனா ? பாகம் – 6 முழு விளக்கம் இதோ!
மகாபாரதத்தில் வரும் ஒரு முக்கிய கதாபாத்திரமான சகுனிக்கு அவன் பக்கம் இருக்கும் நியாயத்தின் காரணமாக அவன் ஏற்ற சபதத்தின் காரணமாக எப்படி உலகம் பார்க்காத ஒரு மகாயுத்ததை தொடங்கி வைக்கிறான் என்பதை பற்றி தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் சென்ற பாகத்தில் சூதாட வந்த தர்மன் பாண்டவர
மகாபாரதத்தில் வரும் ஒரு முக்கிய கதாபாத்திரமான சகுனிக்கு அவன் பக்கம் இருக்கும் நியாயத்தின் காரணமாக அவன் ஏற்ற சபதத்தின் காரணமாக எப்படி உலகம் பார்க்காத ஒரு மகாயுத்ததை தொடங்கி வைக்கிறான் என்பதை பற்றி தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் சென்ற பாகத்தில் சூதாட வந்த தர்மன் பாண்டவர்களில் அவன் தம்பி நால்வரையும், தன் மனைவி பாஞ்சாலி முதற்கொண்டு அனைவரும் இழந்துவிட்டான் அதன் பின் பாஞ்சாலிரை அரசபைக்கு வர சொல்லி துரியோதனன் தூச்சாதனனை அனுப்பி வைத்தான்.இனி என்ன நடந்தது என்று பார்க்கலாம் வாருங்கள்.
சகுனி – 6 வன வாசம் செல்லும் பாண்டவர்கள்
துரியோதனன் ஆணையின் பேரில் துச்சாதனன் பாஞ்சாலி அறைக்கு சென்று சபைக்கு நீ வரவேண்டும் என்று அழைக்கும் போது வரமாட்டேன் என் வாக்குவாதம் செய்யகிறாள். பாஞ்சாலிக்கு இந்த இடத்தில் துச்சாதனன் ஒரு கொடூர செயலை செய்கிறான் தன் கைகளால் பாஞ்சாலியின் தலை முடியை சுற்றி வளைத்து பாஞ்சாலியை அவள் அறையில் இருந்து சபை வரைக்கும் தரதரவென இழுத்து வருகிறான் அங்கிருந்து அனைவரும் அதை மௌனமாக பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள் யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை கடைசியாக பாஞ்சாலியும் சபைக்கு இழுத்து வரப்பட்டாள். இதை நம் கதாநாயகன் சகுனி சிரித்த முகத்துடன் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தேன். இந்த கொடுமைகள் எல்லாம் பார்த்த பாண்டவர்களில் பீமன் சற்றும் யோசிக்காமல் தன் மூத்த சகோதரர் தர்மரையே திட்ட ஆரம்பிக்கிறார் உடனே அர்ஜுனர் பீமா என்ன செயல் செய்கிறாய் நம் எதிரிகள் முன்னாடி நம் சகோதரர்களை திட்டுவதா என்று கூறவே பீமன் அமைதியாகிறான். அதன் பின்பு அவையில் இருந்தவர்கள் அடிமைகளுக்கு எதற்கு மேலாடை என்று கூற துரியோதனன் பாண்டவர்களின் மேலாடையை கழட்ட சொல்கின்றன இது ஒரு பக்கம் நடக்க அடுத்தது நம்மளுடைய மேலாடையும் கழட்ட சொல்லுவார்களோ என்று ஆடிப் போயிருந்தாள் பாஞ்சாலி. இந்த சபையில் தான் தர்மம் என்ற ஒன்று இல்லையே அப்புறம் எப்படி பாஞ்சாலி மற்றும் இதற்கு விதிவிளக்காக அமைவாள் அவளுடைய துகிலும் உரிக்கப்படுகிறது. இந்த நேரத்தில் தான் கிருஷ்ணர் பாஞ்சாலிக்கு சீலை கொடுத்து உதவிய சம்பவம் எல்லாம் நடக்கும். இதெல்லாம் நடந்து முடிக்கும் போது இதற்கெல்லாம் காரணமாக இருக்கும் ஒவ்வொருவரையும் நாங்கள் வதம் செய்வோம் என்று பாண்டவர்கள் சபதம் ஏற்க. பாஞ்சாலியும் அப்படி வதம் செய்தவர்களுக்கு ரத்தத்திலேயே நான் குளிப்பேன் என சபதம் செய்ய. ஒரு நிமிடம் இவர்கள் செய்யும் சபதத்தில் பூமியே ஆடியது. இதை கண்ட திருதராஷ்டிர் திகைத்துப் போகிறான் செய்வதறியாமல் பாண்டவர்களிடம் சென்று நீங்கள் சூதாடி தோற்ற அனைத்தையும் நான் உங்களுக்கு திருப்பி தருகிறேன் நாம் எல்லாம் ஒன்றுக்குள் ஒன்றாக இருப்பவர்களுக்கு இப்படி நீங்களே ஒருவரை ஒருவர் ஒருவர் வதம் செய்வோம் என்று சபதம் போடலாமா என திருதிராஷ்டரர் பாண்டவர்களிடம் மண்ணிப்பு கேட்கிறார், இந்த இடத்தில் குறிக்கிட்ட சகுனி துரியோதனிடம் ஏன் உன் தந்தை இவ்வாறு செய்கிறார் அவர் மேலும் ஏதாவது செய்வதற்குள் நீ ஏதாவது செய் தூரியோதனா என்று சகுனி சொல்ல. பாண்டவர்களிடம் சென்ற துரியோதனன் சரி இதை ஒரு முடிவு கொண்டு வருவோம் நான் உங்களுக்கு அனைவருக்கும் விடுதலை அளிக்கிறேன் நீங்கள் 12 ஆண்டு காலம் வண வாசம் செல்ல வேண்டும் அதன் பின் ஒரு ஆண்டு மறைந்து வாழ வேண்டும் அந்த ஆண்டில் நான் உங்களை கண்டுபிடித்து விட்டால் மேலும் 12 ஆண்டுகள் வன வாசம் செல்ல வேண்டும் என்று ஒரு நிபந்தனையை போட்டு அவர்களை அனுப்பி வைக்கிறான். அதன் பின் பாண்டவர்களும் பிராமணர்களாக மாறி வன வாசத்தை துவங்கினார்கள்.
இப்படி வனவாசம் போன பாண்டவர்களை அப்படியே வனவாசத்தில் இருக்கும் போது அழித்திட வேண்டும் என்று சகுனி ஒரு யோசனையை துரியோதனிடம் சொல்கிறார்கள் அதற்கு துரியோதனன் என்ன செய்வது என்று கேட்க சகுனி ஒரு முனிவரை கூட்டி வந்து ஒரு சக்திவாய்ந்த யாகம் ஒன்றை நடத்தி அந்த யாகத்தில் இருந்து ஒரு அரக்கனை தோன்ற வைத்து அந்த அரக்கனை அனுப்பி இது போல் காட்டிலும் இருக்கும் பாண்டவர்கள் மற்றும் அவர்கள் மனைவி பாஞ்சாலியை நீ வதம் செய்ய வேண்டும் என்று கூற இந்த அரக்கனும் செல்கிறான். இப்படி தன் பிள்ளைகளை தீர்த்துக்கட்ட அந்த அரக்கன் செல்வதை பார்த்த எம தர்மராஜா அவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அவர்கள் தண்ணீர் குடிக்கும் ஆற்றில் மயக்கம் மருந்தை கலந்து விடுகிறார் அந்த தண்ணீரை குடித்த பாண்டவர்கள் மற்றும் பாஞ்சாலி என அனைவரும் அங்கே மயக்கம் போட்டு விடுகிறார்கள். இந்த இடத்திற்கு வந்த பார்த்த அரக்கன் ஏற்கனவே அனைவரும் இறந்து கிடக்கிறார்கள் இவர்களை எப்படி கொல்வது என்று கோபத்துடன் வந்து யாகம் செய்த முனிவரையே கொன்று விடுகிறது இந்த திட்டம் நிறைவேறாமல் போகிறது. அதன் பின்பு அர்ஜுனன் சிவபெருமான நோக்கி தவம் இருக்க தொடங்கினான் அதுவும் எதற்காக பாசுபாஸ்திரம் வேண்டி தவம் இருக்கிறான். இந்த செய்தி துரியோதனனுக்கு தெரியாது அதனால் நாரதர் இந்த செய்தியை கொண்டு வந்து துரியோதனனிம் காட்டில் அர்ஜுனன் இப்படி பாசுபாஸ்த்திரம் பெற வேண்டி சிவபெருமானை நோக்கி தவம் இருக்கிறான் என்ற விஷயத்தை நாரதர் துரியோதனின் காதில் போட்டுவிட்டு அவர் சென்று விடுகிறார். இந்த செய்தியை அறிந்த சகுனி கர்ணணிடம் திக் விஜயம் மேற்கொண்டு பலம் வாய்ந்த நாடாக மாறுவதற்கான முயற்சியில் இறங்குகிறார் சகுனி. அதோட மட்டுமில்லாமல் அர்ஜுனனின் தவத்தையும் கலைக்க வேண்டும் என்று நினைத்தது மீண்டும் ஒரு யாகம் செய்கிறார் அந்த யாகத்தில் இருந்து பன்றி போல ஒரு மிருகத்தை வர வைத்து இந்த மிருகத்தை ஏவி விட்டு அர்ஜுனனை கொல்ல என்று நினைக்கிறார்கள் அந்தப் பன்றியை அர்ஜுனனை போய் தாக்குவதற்கு முன்பாக சிவபெருமான் அங்கு புகையை போட்டு வந்து விடுகிறார் பன்றி அர்ஜுனன் தாக்க வர சிவபெருமானும் அர்ஜுனனும் சேர்ந்து அந்த பன்றியை ஒரே நேரத்தில் அம்பு விட்டு தாக்குகிறார்கள் யார் இந்த பன்றியை முதிலில் தாக்கியது என்று மாறு வேடத்தில் வந்த சிவபெருமானுக்கு அர்ஜூனனுக்கும் இந்த இடத்தில் வந்த சிறிது நேரம் கை கலகளப்பாகிறது கடைசியில் தன்னுடன் சண்டை இடுவது சிவபெருமான் தான் என்று தெரிந்ததும் அவரின் முன் தலை குணிந்து நிற்கிறான் சிவபொருனும் அர்ஜூனனுக்கு பாசுபாஸ்திரத்தை கொடுக்கிறார். நீங்கள் நீங்கள் நன்றாக கவனித்து பார்த்து இருந்தால் தெரியும் முதலில் சகுனி செய்யும் ஒவ்வொரு சூழ்ச்சியும் அவனுக்கு வெற்றியாக மட்டுமே அமைந்திருக்கும் ஆனால் இப்போது சகுனி செய்து ஒவ்வொரு சூழ்ச்சியும் அவனுக்கு தோல்வியில் முடிகிறது இது கௌரவர்களின் அழிவு ஆரம்பம் என்பதை நமக்கு உணர்த்துகிறதா என்பது தெரியவில்லை இனி வரும் பாகங்களில் பார்க்கலாம் காத்திருங்கள்….