மகாபாரத்தில் சகுனி நல்லவனா ? கெட்டவனா ? பாகம் – 7 முழு விளக்கம் இதோ!
நாம் மகாபாரத போர் நடப்பதற்கு ஒரு முக்கியமான காரணமாக இருந்த சகுனி தன் குலத்திற்கு இழைக்கப்பட்ட அநீயாயத்திற்காக எப்படி அஸ்தினாபுராத்தை பழிவாங்குகிறான் என்பதை பற்றி விரிவாக பார்த்து வருகிறோம். அதில் கடந்த பகுதியில் பாண்டவர்கள் 13 வருடம் வனவாசம் சென்றதும் அவர்கள் வனவாசத்தில் இருக்கும
நாம் மகாபாரத போர் நடப்பதற்கு ஒரு முக்கியமான காரணமாக இருந்த சகுனி தன் குலத்திற்கு இழைக்கப்பட்ட அநீயாயத்திற்காக எப்படி அஸ்தினாபுராத்தை பழிவாங்குகிறான் என்பதை பற்றி விரிவாக பார்த்து வருகிறோம். அதில் கடந்த பகுதியில் பாண்டவர்கள் 13 வருடம் வனவாசம் சென்றதும் அவர்கள் வனவாசத்தில் இருக்கும் போது கௌரவர்கள் பாண்டவர்கள் அழிக்க தீட்டிய திட்டங்களை எல்லாம் பற்றி பார்த்தோம். இனி என்ன நடக்கப் போகிறது என்பதை பார்க்கலாம் வாருங்கள்
சகுனி – பாகம் 7 சகுனியின் மரணம்
பாண்டவர்கள் வனவாசம் செல்ல துரியோதனன் ஆனையிடும் போது அவர்களுக்கு ஒரு நிபந்தனை விதித்திருப்பான் வனவாசத்தில் 13 வது வருடம் நீங்கள் மறைந்து வாழ வேண்டும் அதை மீறி எங்கள் கண்ணில் பட்டால் நீங்கள் மேலும் 12 வருடம் வனவாசம் செல்ல வேண்டும் என்று கூறியிருப்பான். அந்த 13 வது வருடமும் வந்து விட்டதால் சகுனி தூரியனிடம் சொல்லி பாண்டவர்களை கண்டுபிடிக்கும் செயலை துரிதப்படுத்த சொல்கிறான். அவர்களை கண்டுபிடித்துவிட்டால் அவர்கள் மேலும் 12 வனவாசம் வருடம் சென்றுவிடுவார்கள் அஸ்தினாபுரத்தை நமக்கே சொந்தமாக்கிக் கொள்ளலாம் யாரும் உரிமை கொள்ள முடியாது என்ற துரியோதனிடம் கூறி. மாமா சகுனியின் ஆலோசனை படி ஒவ்வொரு நாட்டின் காடுகளிலும் ஒவ்வொரு நாட்டிலும் துரியோதனன் பாண்டவர்களை தேடி அலைந்து கொண்டிருந்தான் அப்போது சகுனி துரியோதனனுக்கு ஒரு யோசனை கூறினார் பாண்டவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று பீஷ்மருக்கு நன்றாகவே தெரியும் அதனால் நீ அவரிடம் சென்று கேள் என சொல்கிறார். தூரியனும் பீஷ்மரிடம் சென்று பாண்டவர்கள் எங்கு இருக்கிறார்கள் என கேட்க. அதற்கு பீஷ்மர் அவர்கள் இங்கு தான் இருக்கிறார்கள் என்று தெளிவாக சொல்லாமல் மும்மாதிரி மழை பெய்யும் ஒரு நாட்டில் அவர்கள் இருக்கிறார்கள் என்று ஒரு புதிர் மட்டும் போட்டு சென்று விட்டார். சகுனியும் தூரியனும் மும்மாதிரி மழை பெய்யும் ஒவ்வொரு நாடுகளாக பார்த்து பாண்டவர்களை விடாது ஒற்றர்களை வைத்து தேடிக் கொண்டே தான் இருந்தார்கள். அந்த கடைசி வருடம் முழுவதும் தேடியும் பாண்டவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. 14 வது வருடம் தொடங்கியதும் பாண்டவர்கள் அஸ்தினாபுரத்தில் எங்களுக்கு உரிய பங்கு எங்களுக்கு தர வேண்டும் என்று முதலில் இரண்டு நாட்டில் இருந்து தூது அனுப்புகிறார்கள் அந்த தூதுக்கு பதில் கிடைக்காததால் மூன்றாவது கிருஷ்ணரையே தூதாக அனுப்புகிறார்கள் கிருஷ்ணரை தூதாக செல்கிறார் அவையில் கிருஷ்ணரை அவமரியாதை செய்கிறார்கள் கடைசியில் மகாபாரத போர் என்று முடிவாகிறது. மகாபாரத போருக்காக இருபுறமும் அவர்களுடைய படைகளை வலுவாக்குகிறார்கள் அந்த சமயத்தில் சகுனி துரியோதனிடம் சென்று நீ யாதவர்கள் குலத்தை சேர்ந்த கிருஷ்ணரிடம் போய் அவர்களுடைய படயை உன் பக்கம் இருந்து போரிடுவதற்காக கேட்டுப்பார் என கூற துரியனும் கிருஷ்ணரின் உதவிய கேட்டு செல்கிறார் அதே நேரத்தில் அர்ஜுனனும் கிருஷ்ணகிரின் உதவியை கேட்டு வர அப்போது கிருஷ்ணர் கூறுகிறார் நான் இரண்டு பேருக்கும் உதவி செய்வேன் என்னுடைய படைகளும் ஒருவர் பக்கம் நின்று யுத்தம் செய்யும் நான் ஒருவர் பார்க்கும் நிற்பேன் ஆனால் கையில் ஆயுதம் ஏந்த மாட்டேன் உங்களுக்கு எது வேண்டும் என்று முடிவெடுத்துக் கொள்ளுங்கள் எனக் கூற துரியோதனன் உங்கள் படைகளை எனக்கு தரும்படி கூறினான் அர்ஜுனன் நீங்கள் எங்கள் பக்கம் இருந்தால் மட்டும் போதும் அதுவே எங்களுக்கு பெரும் பலம் என்று கூறினார். துரியோதனன் கிருஷ்ணரின் படை தன் பக்கம் நிற்க சம்மதித்து விட்டார் என்ற செய்தி மாமா சகுனியிடம் சொல்ல சகுனியும், கர்ணணும் சேர்ந்து துரியோதனனிடம் கூறுகிறார் கிருஷ்ண்ணன் மட்டும் நம் பக்கம் இருந்தால் நான் இந்த போரில் நாம் வெற்றி பெறுவது உறுதியாகிருக்கும் நீ இப்படி முட்டாள்தனமாக தவறு செய்து விட்டாய் எனக் கூறினார்கள்.
சகுனியோ மேலும் சரி விடு பார்த்துக் கொள்ளலாம் இப்போது நம்முடைய படையை மேலும் வலுவாக்க வேண்டும் பாண்டவர்களுக்கு தாய் மாமன் ஒருவன் இருக்கிறான் அவன் பெயர் சல்லியன். இந்த சல்லியின் பாண்டவர்களுக்கு உதவி செய்வதற்காக பெரும்படையை திரட்டி கொண்டு வந்து கொண்டிருக்கிறான் அவனை நாம் நம் பக்கம் இழுத்துக் கொள்ள வேண்டும் அதற்காக வேண்டி ஏற்பாடுகளை நாம் செய்ய வேண்டும் என்று அதற்கு சகுனி ஒரு ஆலோசனையும் கூறுகிறார் சல்லியன் வரும் வழியெல்லாம் உணவு பந்தல்கள் தண்ணீர் பந்தல்களுக்கு போடுங்கள் என கூற சல்லியனும் பாண்டவர்கள் தான் வழிநெடுக்க நமக்கு உணவு பந்தல் தண்ணீர் பந்தலும் போட்டிருக்கிறார்கள் என்று ஒவ்வொரு இடத்திலும் அமர்ந்து வயிறார உணவு உண்டு கொண்டே வருகிறேன். கடைசியாக அஸ்தினாபுரம் அருகே வரும்பொழுது துரியோதனன் சல்லியனை பார்த்து மாமா அவர்களை வருக வருக என வரவேற்கிறேன் சல்லியன் தூரியனை பார்த்து நலமுடன் வாழவாய் என் ஆசீர்வாதம் செய்துவிட்டு என்ன வேண்டும் என கேட்க அதற்கு துரியோதனன் வழிநெடுக்க தண்ணீர் பந்தலும், உணவு பந்தலும் போட்டது நான் தான் உங்களை வரவேற்க வேண்டும் என்பதற்காகவே இப்படி செய்தேன் என்று கூறுகிறேன். சல்லியன் உங்கள் வரவேற்பில் நான் மகிழ்ச்சி அடைந்தேன் என கூற துரியோதனன் இப்போது சல்லியனிடம் உங்களிடம் இருந்து எனக்கு வரம் வேண்டும் என கேட்க சல்லியனோ கேள் தூரியோதன என கூற தூரியன் நீங்கள் போரில் எங்கள் பக்கம் இருந்து போர் செய்ய வேண்டும் என கேட்க சாப்பிட வயிறார உணவு போட்டவர்கள் இப்போது முடியாது என்று சொல்வது தர்மம் அல்ல அதனால் உனக்கு வரம் தருகிறேன் உன் பக்கம் நின்று போர் செய்கிறேன் சன சல்லியன் வாக்கு தருகிறார். உலகம் கண்டிராத ஒரு மகாயுத்தமும் ஆரம்பிக்கிறது போர் ஆரப்பித்து நாட்கள் செல்ல செல்ல இரு பக்கமும் ஒவ்வொருத்தராக இறந்து போகிறார்கள். பிதாமகர் பிஷமர், குரு துரோணாச்சாரியார், அபிமன்யு என இரண்டு பக்கத்திலும் இழப்புகள் ஏற்பட்டு கொண்டே வருகின்றது 17ஆம் நாள் போரில் கர்ணணும் வதம் செய்யப்படுகிறான் கடைசியாக 18 ஆம் நாள் போர் வரும் பொழுது கௌரவர்கள் பக்கம் துரியோதனனனும் சகுனியும் மட்டுமே மிஞ்சி இருக்கிறார்கள். அப்போது பாஞ்சாலியின் துகில் உரிப்பு சம்பவத்தின் போது சகுனியின் வதம் செய்னே் என்று சகாதேவன் தான் சபதம் போட்டு இருந்தான் அந்த சபதத்தை நிறைவேற்ற சகுனியுடன் சகாதேவன் போர் செய்கிறான் போரின் இறுதியில் சகுனியின் தலையை கொய்கிறான் சகாதேவன். அதன் பின்பு துரியோதனனை பீமன் வதம் செய்கிறான் இப்படியாக இந்த மகாபாரத போரன ஒரு முடிவுக்கு வந்தது கடைசியாக சகுனி அஸ்திணாபுரத்தை நான் பழி தீர்பேன் என்று போட்ட சபதத்தில் வெற்றி பெற்றானா ? இல்லையா ? என்பதை அடுத்த பகுதியில் காண்போம் அதுவரை காத்திருங்கள்……