மகாபாரத்தில் சகுனி நல்லவனா ? கெட்டவனா ? பாகம் – 8 கிருஷ்ணரே விளக்கம் தருகிறார்!

மகாபாரதப் போர் நடந்ததற்கு முக்கிய பங்கு ஆற்றியது காந்தரின் சகோதரன், தூரியோதனனின் தாய் மாமாவாகிய சுகுனி தான். அந்த சகுனியின் முழு வாழ்க்கையை பற்றி நாம் தொடர்ந்து பேசிக் கொண்டு வருகிறோம் அந்த விதத்தில் பிதாமகர் பீஷ்மரால் நல்லவனாக, சுத்தமான வீரனாக இருந்த சகுனி ஒரு சூழ்ச்சிக்காரனாக,

By Prem Kumar · 17/10/2023

மகாபாரதப் போர் நடந்ததற்கு முக்கிய பங்கு ஆற்றியது காந்தரின் சகோதரன், தூரியோதனனின் தாய் மாமாவாகிய சுகுனி தான். அந்த சகுனியின் முழு வாழ்க்கையை பற்றி நாம் தொடர்ந்து பேசிக் கொண்டு வருகிறோம் அந்த விதத்தில் பிதாமகர் பீஷ்மரால் நல்லவனாக, சுத்தமான வீரனாக இருந்த சகுனி ஒரு சூழ்ச்சிக்காரனாக, நயவஞ்சகனாக மாறி அஸ்தினாபுரத்தை அழிப்பதற்காக என்னென்ன முயற்சிகள் எடுத்தான் அந்த முயற்சியில் நான் என்னென்ன நடந்தது கடைசியில் எப்படி மகாபாரத போர் ஆரம்பித்தது அந்த போரின் போது சகுனி எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது வரை நாம் பார்த்து இருக்கிறோம். இப்போது சகுனி நல்லவனா கெட்டவனா என்று பார்த்தால் அவன் பக்கம் இருக்கும் நியாய படி அவன் பக்கத்தில் இருந்து பார்த்தால் சகுனி நல்லவனாகத்தான் தெரிவான் ஆனால் மகாபாரதத்தின் படி நாம் பாண்டவர்களை நல்லவராக பார்ப்பதால் அவர்களின் எதிரியான சகுனியும் நம் கண்களுக்கு வில்லனாகவே தெரிவான். இதற்கான தெளிவான விளக்கத்தை கிருஷ்ணரை ஒரு முறை பாண்டவர்களுக்கு கொடுத்துள்ளார் அது என்னவென்று பார்க்கலாம்.

சகுனி பாகம் 8 (கிருஷ்ணரின் விளக்கம்)

மகாபாரத போர் முடிந்து அஸ்தினாபுரத்தில் மெல்ல மெல்ல அமைதி திரும்பி கொண்டிருந்தத அந்த நேரத்தில் போரில் வீர மரணம் அடைந்த வீரர்களின் ஆத்ம சாந்தி அடைய ஒரு யாகம் ஒன்று நடத்திக் கொண்டிருந்தார்கள். அந்த யாகத்திற்கு பாண்டவர்கள் கிருஷ்ணரையும் அழைத்து இருந்தார்கள் அதே நேரம் கிருஷ்ணர் வருகைக்காக அவர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். கிருஷ்ணரும் அந்த யாகத்திற்கு வந்துவிட்டார் அனைத்தும் தயாராக இருக்கிறதா என்று கிருஷ்ணர் கேட்க பாண்டவர்களில் மூத்தவன் தர்மன் அனைத்துமே தயாராக இருக்கிறது கிருஷ்ணா இதோ இங்கு பார் போரில் வீர மரணம் அடைந்தவர்களுக்கு வேண்டுதல் கொடுப்பதற்காக முதல் பங்கை பீஷ்மருக்கு இருக்கும் இரண்டாவது பங்கை குரு துரோணாச்சாரியருக்கும் கொடுத்துள்ளோம் என பாண்டவர்கள் கூற. அதற்கு கிருஷ்ணர் உங்களால் முதல் பங்கை சகுனிக்கு கொடுக்க முடியுமா என்று கேட்டார் அங்கிருந்த பாண்டவர்களுக்கு கோபம் தலைக்கு ஏறியது எப்பொழுதும் போல் முதலில் பீமனே பேச ஆரம்பிக்கிறான் என்ன கிருஷ்ணா சொல்கிறாய் ஒரு நயவஞ்சகனுக்கு சூழ்ச்சிக்காரனுக்கு முதல் பங்கு கொடுக்க சொல்கிறாய் முதல் பங்கு என்பது எவ்வளவு பெருமை வாய்ந்தது அதை இவ்வளவு காலம் எங்கள் குலத்தை காத்த பீஷ்மருக்கு அதுவும் போரில் வீர மரணம் தழுவிய அவருக்கு கொடுப்பது தானே நியாயம் என பீமன் கூற. அதற்கு கிருஷ்ணர் நீங்கள் சொல்லும் வீர மரணம் என்பது போரில் சண்டையிடுவது மட்டுமல்ல எவன் ஒருவன் தன் கையில் எடுத்த சபதத்திற்காகவும் லட்சியத்திற்காகவும் வாழ்நாள் முழுவதும் அதற்காக உழைத்து கடைசி வரை அந்த லட்சியத்திற்காகவே மரணமடைகிறானோ அவனுடைய மரணம் தான் வீர மரணம் அந்த வகையில் பார்த்தால் பீஷ்மரை விட சகுனியே சிறந்தவர் என கிருஷ்ணர் கூறுகிறார். அதற்கு அர்ஜுனன் அது எப்படி மாதாவா பீஷ்மர் போரில் கௌரவர்களை வெற்றி அடைய வைக்க வேண்டும் என நினைத்து மரணம் அடைந்தார் அதனால் அவர் லட்சியம் நிறைவேறவில்லை. அதுபோல தானே சகுனியும் துரியோதனனை வெற்றி பெற செய்ய நினைத்தேன் ஆனால் அவனும் அதில் தோற்று விட்டான் தானே பிறகு எப்படி சகுனி வெற்றி பெற்றான் என்று நீங்கள் கூறுகிறீர்கள் எனக்கு கேட்க அதற்கு கிருஷ்ணர் நீங்கள் உங்கள் உற்றார் உறவினர்கள் உங்கள் சொந்த பந்தங்களை எல்லாம் இழந்து இப்படி உடம்பில் உயிர் இருந்து நடை பிணமாக இருப்பதே சகுனிக்கு கிடைத்த வெற்றி தானே என கிருஷ்ணர் கூற. அர்ஜுனன் எனக்கு புரியவில்லையே என கூற கிருஷ்ண்னன் தெளிவாக எடுத்து கூறுகிறார் நீங்கள் ஐந்து பேர் மட்டும் வதம் செய்ய வேண்டும் எனபது சகுனியின் லட்சியம் கிடையாது கௌரவர்கள் 100 பேரும் கூட சகுனிக்கு எதிரிகள் தான். அதனால் உங்களை ஐவரையும் அழிப்பதற்கு கௌரவர்கள் 100 பேர் கொண்ட மற்றொரு எதிரிகளுடன் உறவாடினான். அவன் சூழ்ச்சிப்படி பாண்டர்களான உங்களை அழிப்பதற்கு கௌரவர்கள் 100 பேரையும் உங்களுக்கு எதிரியாக்கி உங்கள் கைகளால் அவர்களை அழிக்க வைத்தான் என கிருஷ்ணர் கூற. அங்கிருந்த துரியோதனனின் தந்தை திருதிராஷ்டரர் குறிக்கிட்டு எனது மகன்களின் சாவுக்கு சகுனி தான் காரணமா நயவஞ்சகன் பாம்பு போல என் கூடவே இருந்து என்னை ஏமாற்றி விட்டான் என திருதராஷ்டிரர் கூற கிருஷ்ணர் சகுனியை பாம்பு என்று சொல்லாதீர்கள் சகுனி ஒரு அடிபட்ட புலி நீங்கள் சகுனியின் குலத்தை அழித்ததற்காக அவன் உங்கள் குலத்தை அழிக்க வேண்டும் என்று நினைத்தான்

அதை அவன் சூழ்ச்சியின் மூலமாகவும் செய்தும் காட்டினான் கிடைத்த அனைத்து வாய்புபுகளையும் பயன்படுத்தி கொண்டான், மேலும் கிருஷ்ணர் விளக்கமா தருகிறார் தன் மகனை கொன்ற பீமனை கொல்ல நினைத்த திருதிராஷ்டரர் நல்வர் என்றால், பஞ்சாலி துகில் உரிப்பில் பீமன் போட்ட சபதத்தால் பீமன் தூரியனை கொன்ற நல்லவன் என்றால், பஞ்சாலிக்கு நடந்த கொடுமைக்கு சகாதவேன் சகுனியை கொன்ற நல்வன் என்றால், சகுனி கண்முன்னே பீஷ்மர் சகுனியின் குடும்பத்திற்கு செய்ய கொடுமைகளுக்கு சூழ்ச்சியால் பழி தீர்த்த சகுனியும் நல்லன் தான் என்கிறார். உடனே திருதிராஷ்டரர் என்னது சகுனியின் குலத்தை நாங்கள் அழித்தோமா என கூற அதற்கு கிருஷ்ணரோ அது எனக்கும் பீஷ்மருக்கும் தெரிந்த உண்மை அதைப்பற்றி இப்போது சொல்வதற்கு நேரமில்லை எனக் கூறி தற்போது சகுனிக்கு முதல் பங்கு வைப்பீர்களா மாட்டீர்களா என கிருஷ்ணர் மீண்டும் கேட்க கிருஷ்ணரின் வார்த்தையை மதிக்காதவர் என்ற பெயர் எங்களுக்கு வேண்டாம் சகுனிக்கு முதல் பங்கு கொடுக்கிறோம் என்று பாண்டவர்கள் சகுனிக்கு முதல் பங்கையும் கொடுக்கிறார்கள். அந்த யாகம் முடிந்ததும் கிருஷ்ணரும் அங்கிருந்து செல்கிறார் உடனே சகாதேவன் வேகமாக ஓடி கிருஷ்ணரிடம் மாதவா நீங்கள் சகுனிக்கு முதல் பங்கு கொடுக்க வேண்டும் என்று சொன்னதற்கு எனக்கு வேற ஒரு காரணமும் இருக்கிறது போல் தெரிகிறது அதனால் சகுனியின் தலையை கொய்தவன் என்பதால் மட்டும் கேட்கிறேன் அதற்கு என்ன காரணம் என்று சகாதேவன் கேட்க கிருஷ்ணா அதற்கு விளக்கம் தருகிறார் உங்களைப்போல சகுனியும் என்னுடைய சிறந்த பக்தன், சகுனி எப்படி என்னை தோற்கடிப்பது நான் அடுத்த கட்டமாக என்ன காரியம் செய்யப் போகிறேன் என்னுடைய அடுத்த கட்ட நகர்வு எப்படி இருக்க போகிறது இன்று என்னைப் பற்றிய நினைத்துக் கொண்டிருப்பான், அவன் பக்தியோடு என்னை நினைக்காவிட்டாலும் சகுனியம் என்னோடு ஒரு சிறந்த பக்தன் தான் அவன் உயிரோடு இருக்கும்போது தான் என்னால் அவனுக்கு ஒன்றும் செய்ய முடியவில்லை அதனால் அவன் இறந்த பிறகாவது முதல் மரியாதை அவனுக்கு கிடைக்க வேண்டும் என்று நினைத்தேன் அதனால் தான் உங்களிடம் அதற்காக சகுனியின் பக்க நியாத்தை சொல்லி பேசினேன் என்று கிருஷ்ணர் கூறுனார். சகுனியின் பக்கத்தின் நியாயத்தையும் அவன் மாவீரன் என்பதற்கான விளக்கத்தை அந்த பரமாத்மா நாரயணரை கடைசியில் கொடுத்துவிட்டார். மேலும் மகாபாரதத்தில் உள்ள ஒரு சிறந்த கதாபாத்திரத்தை பற்றி பேசுவோம் அதுவரை காத்திருங்கள்….

Recipes AMP · Quick view
View full