தீபாவளி ஸ்பெஷலாக இந்த மக்கானா லட்டுவை செய்து அசத்துங்கள்!!
தீபாவளி பண்டிகை வரப்போகிறது. தீபாவளி என்றால் வீட்டில் புத்தாடை, பட்டாசு, பலகாரங்கள் என முழு கொண்டாட்டம் நடக்கும். அந்த கொண்டாட்டங்களில் முக்கிய இடம் பிடிப்பது இனிப்பு வகைகள். அனைவரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீட்டில் பலவிதமான பலகாரங்களை செய்ய திட்டமிட்டுக் கொண்டிருப்பார்கள்.
தீபாவளி பண்டிகை வரப்போகிறது. தீபாவளி என்றால் வீட்டில் புத்தாடை, பட்டாசு, பலகாரங்கள் என முழு கொண்டாட்டம் நடக்கும். அந்த கொண்டாட்டங்களில் முக்கிய இடம் பிடிப்பது இனிப்பு வகைகள். அனைவரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீட்டில் பலவிதமான பலகாரங்களை செய்ய திட்டமிட்டுக் கொண்டிருப்பார்கள். பொதுவாக தீபாவளியன்று அனைவரது வீட்டிலும் லட்டு, அப்பம், அதிரசம், ஜிலேபி, மைசூர் பாக் ஆகியவை தான் மிகவும் முக்கியமாக செய்வார்கள். உங்களின் பலக்கார பட்டியலில் லட்டுவும் இடம் பெற்றுள்ளதா? அப்படியானால் எப்போதும் செய்வதை போல் இல்லாமல் வித்தியாசமான இந்த மக்கானா லட்டுவை தீபாவளி ஸ்பெஷலாக செய்து பாருங்கள்.
எளிதாக செய்யக்கூடிய இந்த மக்கானா லட்டு சுவையானது மட்டுமல்லாமல் ஆரோக்கியமானதும் கூட. மக்கானா எனப்படும் தாமரை விதை காயிலிருந்து பெறப்படும் மருத்துவ குணங்கள் நிறைந்த தாமரை விதையாகும். இதைப் பயன்படுத்தி செய்யப்படும் சிற்றுண்டி ஆரோக்கியம் நிறைந்ததாகக் கருதப்படுகிறது. மக்கானா என அழைக்கப்படும் தாமரை விதையில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, மாவுச்சத்து, மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் கால்சியம் போன்ற பல உடலுக்கு அவசியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும், இதில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்திருப்பதால் உடலுக்கு பல நன்மைகள் விளைகின்றன.
இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள இந்த மக்கானாவில் ஒரு முறை லட்டு செய்து பாருங்கள். இது உங்கள் இல்ல சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற இனிப்பு வகை ஆகும். இந்த லட்டு பார்ப்பதற்கு மிகவும் கலர்புல்லாக மென்மையாக இருப்பதோடு அதன் நெய் சொட்டும் நறுமணமும் மீண்டும் மீண்டும் கடித்து சுவைக்க தூண்டும். இதனை ஒரு முறை செய்து பக்குவமாக எடுத்து வைத்தால் 4 முதல் 5 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். பள்ளி முடித்து வரும் குழந்தைகளுக்கு இதனை வைத்து தந்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த லட்டை அட்டகாசமாக வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் பார்ப்போம்.