மாமியார் மருமகள் பிரச்சனை தீர வீட்டில் செய்ய வேண்டிய சில மாற்றங்கள் என்ன?
வீட்டிற்கு வீடு வாசல் படி என்று சொல்வது போல் வீட்டிற்கு வீடு மாமியார் மருமகள் பிரச்சனையும் எல்லோர் வீட்டிலும் எப்பொழுதுமே இருக்கும். யாராலும் மாமியார் மருமகள் பிரச்சினையை தீர்த்து வைக்கவே முடியாது. மாமியார் மற்றும் மருமகளுக்கிடையே சின்ன சின்ன சண்டைகள் மன கசப்புகள் அனைத்துமே வரும்
வீட்டிற்கு வீடு வாசல் படி என்று சொல்வது போல் வீட்டிற்கு வீடு மாமியார் மருமகள் பிரச்சனையும் எல்லோர் வீட்டிலும் எப்பொழுதுமே இருக்கும். யாராலும் மாமியார் மருமகள் பிரச்சினையை தீர்த்து வைக்கவே முடியாது. மாமியார் மற்றும் மருமகளுக்கிடையே சின்ன சின்ன சண்டைகள் மன கசப்புகள் அனைத்துமே வரும். அதனால் எப்பொழுதுமே இந்த பிரச்சனைகளை வளர விடாமல் இருக்க வாக்குவாதங்களை தவிர்த்து அனைத்தையும் பொறுமையாக கையாள வேண்டும்.
எல்லாருடைய வீட்டிலும் மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே உள்ள பிரச்சனைகளை அந்த வீட்டில் உள்ள ஆண்களே நினைத்தாலும் நிறுத்த முடியாது அவர்களுக்கு இடையில் ஆண்கள்தான் மாட்டிக்கொண்டு தவிப்பார்கள். மனைவியையும் சமாளிக்க முடியாமல் அம்மாவையும் சமாளிக்க முடியாமல் பாடாத பாடு படுவார்கள்.
வீட்டில் மாமியாருக்கும் மருமகளுக்கும் சண்டை வருவதற்கு வாஸ்துவும் ஒரு காரணமாக இருக்கலாம். அதனால் வீட்டில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையேயான வாக்குவாதங்கள் குறைந்து அவர்களுக்கிடையில் ஒரு நல்ல உறவு வளரும். மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே அடிக்கடி வாக்கு வாருங்கள் சண்டைகள் வந்தால் இருவரது அறையிலும் சிவப்பு கலர் ஃபிரேமில் இருவருடைய போட்டோக்களும் சேர்ந்து இருக்கும் மாதிரி வைக்க வேண்டும். அதனை பார்த்துக் கொண்டே இருந்தால் அவர்களுக்கு இடையேயான வாக்குவாதங்கள் கொஞ்சம் குறைய தொடங்கும். அன்பு அதிகரிக்கும்.
குப்பை தொட்டி
வீட்டில் உள்ள குப்பை தொட்டிகள் நிரம்பாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வாஸ்து சாஸ்திரப்படி குப்பை தொட்டியை வட கிழக்கு திசையில் வைப்பது வீட்டிற்கு நல்லது கிடையாது இது மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே அதிக சண்டையை ஏற்படுத்தும். வீட்டில் சமையல் அருகில் உள்ள கேபினேட்டின் நிறம் கருப்பு கலராக இருக்கக் கூடாது கருப்பு நிறம் எதிர்மறை ஆற்றலை கொடுக்கும். கருப்பு நிற கதிர்வீச்சு பெண்களுக்கு ஆரோக்கியமானதும் கிடையாது. எனவே சமையல் அருகில் உள்ள கேபினேட்டிங் கலர் கருப்பாக இருந்தால் முதலில் அதனை மாற்ற வேண்டும் இல்லையெனில் மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையில் அதிகமான சண்டை வர வாய்ப்புள்ளது.
தென்மேற்கு திசை
வீட்டில் மாமியாரின் அறை தென்மேற்கு திசை நோக்கி இருக்க வேண்டும் ஏனெனில் தென்மேற்கு திசையானது ஆதிக்கம் நிறைந்த திசையாகும் எனவே மாமியாரின் வரை தென்மேற்கில் இருந்தால் மருமகள் உடனான பிரச்சனைக்கு மாமியார் காரணமாக இருக்க மாட்டார்கள். வீட்டில் சண்டை சச்சரவுகள் குறைந்த மகிழ்ச்சியாக இருக்க துளசி செடியை வழிபட வேண்டும். ரோஜா செடி மல்லிகை செடி சம்பா போன்றவற்றை வீட்டில் வளர்க்க வேண்டும். இவ்வாறு வீட்டில் சில மாற்றங்களை செய்தால் மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே காண பிரச்சனைகள் படிப்படியாக குறைந்து அவர்களுக்கு இடையில் அன்பு அதிகமாகும்.
இதனையும் படியுங்கள் : உங்கள் வருமானத்தையும் வீட்டிற்கு பண வரவையும் அதிகரிக்க செய்யும் மணி பிளான்ட் செடியை வீட்டின் எந்த பக்கம் வைப்பது?