காலை மற்றும் இரவு உணவிற்கு ருசியான மாம்பழ பூரி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

பூரி இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும் வட இந்தியாவில் பாஜி எனப்படும் காய்கறி மசாலாவுடன் பரிமாறப்படுகிறது. உருளைக்கிழங்கு மசாலா தவிர பூரியை காய்கறி குருமா, சென்னா மசாலா உடனும் உண்ணலாம். பூரி

By Prem Kumar · 9/11/2025

பூரி இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும் வட இந்தியாவில் பாஜி எனப்படும் காய்கறி மசாலாவுடன் பரிமாறப்படுகிறது. உருளைக்கிழங்கு மசாலா தவிர பூரியை காய்கறி குருமா, சென்னா மசாலா உடனும் உண்ணலாம். பூரி என்றால் குழந்தைகளுக்கு கொள்ளை பிரியம். அதிலும் கூடவே உருளைக்கிழங்கு மசாலா என்றால் டபுள் ஹேப்பி. பூரி வயிற்றை நிரப்பும் வெறும் உணவாக மட்டுமில்லாமல் அது மகிழ்ச்சியையும், நேர்மறை ஆற்றலையும் கொடுக்கும் ஒரு உணவாகும்.

பெரும்பாலான குழந்தைகள் ஹோட்டல் மெனு கார்டை பார்த்ததும் விரும்பி அதிகம் ஆர்டர் செய்யும் உணவாக பூரி உள்ளது. குழந்தைகள் மட்டுமில்லை இந்த லிஸ்டில் பெரியவர்களும் உண்டு. சில பேருடைய வீடுகளில் பூரி சுட்டால் எவ்வளவு இருந்தாலும் பத்தவே பத்தாது. அந்த அளவிற்கு பூரியை விரும்புபவர்களாக இருப்பார்கள். பொதுவாக நம் வீடுகளில் காலை, இரவு உணவாக இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி போன்ற டிபன் உணவுகளை செய்வது வழக்கமாக வைத்திருப்போம். ஆனால் தொடர்ந்து நாம் எதை செய்து சாப்பிட்டு வந்தால் ஒரு கட்டத்தில் நமக்கே சலித்து போய்விடும் அல்லவா?

அதனால் எப்போதும் செய்வது போன்று பூரி செய்யாமல் சற்று வித்தியாசமாக இந்த மாம்பழ பூரி செய்து பாருங்கள். நீங்கள் மாம்பழ பிரியர் என்றால், மாம்பழத்தை பல வித்தியாசமான வழிகளில் சாப்பிட விரும்புகிறீர்கள் என்றால், மாம்பழ பூரி செய்து சாப்பிடுங்கள். இது நிச்சயம் உங்களுக்கு வித்தியசமான சுவையில் இருக்கும். அதோடு அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ஒரு நல்ல ப்ளேவருடனும் இருக்கும். இப்போது சுவையான மாம்பழ பூரி எப்படி செய்வதென்று பார்ப்போம்.

இதனையும் படியுங்கள் : ஆலு பூரி இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்!!

Recipes AMP · Quick view
View full