வார ராசிபலன் 23 மார்ச் 2025 முதல் 29 மார்ச் 2025 வரை!!
மேஷம் இந்த வாரம் தொடங்கிய காரியங்களில் வெற்றி கிடைக்கும். குடும்ப பொருளாதார நிலையை பொறுத்தவரை எதிர்பார்த்த பண வரவுகள் தாமதம் ஆனாலும் வந்து சேர்ந்துவிடும்.அரசு உத்தியோகஸ்தர்கள் எதிர்பாராத நல்ல மாற்றங்களை பணியிடங்களில் சந்திப்பார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் எதிர்காலம் குறித்த வழி
மேஷம்
இந்த வாரம் தொடங்கிய காரியங்களில் வெற்றி கிடைக்கும். குடும்ப பொருளாதார நிலையை பொறுத்தவரை எதிர்பார்த்த பண வரவுகள் தாமதம் ஆனாலும் வந்து சேர்ந்துவிடும்.அரசு உத்தியோகஸ்தர்கள் எதிர்பாராத நல்ல மாற்றங்களை பணியிடங்களில் சந்திப்பார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் எதிர்காலம் குறித்த வழிகாட்டுதல்களைப் பெறுவர். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். தடைப்பட்ட காரியங்கள் நடைபெறும். பயணங்கள் சாதகமாக இருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். அரசாங்கத் தேர்வுகளில் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம்.
ரிஷபம்
இந்த வாரம் மற்றவர்களுடன் பேசுவதில் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப பொருளாதார நிலையை பொறுத்த வரை கடந்த கால சிக்கல்கள் படிப்படியாக விலகும். அரசாங்க உத்தியோகஸ்தர்கள் உத்தியோகம் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளின் தொடர்பு மூலம் நன்மைகளை பெறுவார்கள். விளையாட்டுகளில் திறமை பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்வி நிறுவனங்களுக்கு புகழ் சேர்ப்பர். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். இந்த வாரம் அவ்வப்பொழுது சில நெருக்கடிகள் வரலாம் அதனால் கவனமாக இருக்க வேண்டும்.
மிதுனம்
இந்த வாரம் காரிய வெற்றி ஏற்படும் காலகட்டம். குடும்ப பொருளாதார நிலையை பொறுத்தவரை புதிய கடன் வாங்காமல் சமாளித்து விடுவீர்கள். தனியார் உத்தியோகஸ்தர்கள் திறமைக்கேற்ற பாராட்டுகளை நிர்வாகத்தினர் மூலம் பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்படும். பாகப் பிரிவினை, சொத்துப் பிரச்னைகள் தீரும். தந்தைவழி உறவுகள் சகாயமாக இருக்கும். சகோதர உறவுகளும் பலன் தரும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும்.
அரசாங்க காரியங்கள் வெற்றிகரமாக நடக்கும்.
கடகம்
இந்த வாரம் மனதில் புதிய தெளிவு பிறந்து பல குழப்பங்கள் அகலும். இல்லத்தரசிகள் பழைய கடன்களை திருப்பி செலுத்துவதில் முனைப்பாக இருப்பார்கள். அரசு, தனியார் உத்தியோகஸ்தர்கள் இதுவரை சந்தித்த தடை தாமதங்கள் விலகி பதவி உயர்வு பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களுடைய பொறுப்புகளை உணரும் காலகட்டம் இது. உங்கள் தொழில், உத்தியோகம், சேவை என எதிலும் வெற்றி கிடைக்கும். பொருளாதாரமும் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். இந்த வாரம் வேலையைத் தொடர்வதா விட்டுவிடுவதா என்று யோசனையோடு இருப்பீர்கள்.
சிம்மம்
இந்த வாரம் நீண்ட நாட்களாக தடைபட்ட காரியங்கள் நிறைவேறும் காலகட்டம். குடும்ப நிலையை பொறுத்தவரை அனைவரையும் அனுசரித்து சிக்கல்களை சமாளிப்பீர்கள். மனதில் திருப்தியும் நிம்மதியும் இல்லாத நிலை உருவாகும். அரசு உத்தியோகஸ்தர்கள் பொறுமையாக இருந்ததற்கான பலனை அடைவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டிகளில் சாதனை புரிவர். தொழில்களில் உள்ளவர்களுக்கு சில நல்ல வாய்ப்புகள் கிடைக்கும், பணிச்சுமையாகக் கருதி மறுத்துவிடாதீர்கள். பொருளாதாரம் ஓரளவுக்குச் சிறப்பாகவே இருக்கும்.
கன்னி
இந்த வாரம் பல்வேறு தடை தாமதங்களுக்கிடையில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். பொருளாதார நிலையை பொறுத்தவரை செலவுகள் கட்டுக்குள் இருக்கும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாடங்களில் கவனம் செலுத்தி கற்க வேண்டிய காலகட்டம். உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். இந்த வாரம் பொருளாதார முன்னேற்றத்தைத் தரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உங்கள் பணிவு மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெற்று தரும். பகைவர்கள் பின் வாங்குவார்கள். வழக்குகளில் வெற்றி கிடைக்கும் வாய்ப்பும் உண்டு.
துலாம்
இந்த வாரம் விடாமுயற்சியோடு செயல்பட்டு வெற்றி பெறவேண்டிய காலகட்டம். குடும்ப நிலையை பொறுத்தவரை உறவுகளை அனுசரித்து செல்வதோடு, செலவுகளையும் கட்டுக்குள் வைக்க வேண்டும். அரசு உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் ஆதரவால் பதவி உயர்வு பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாடங்களில் வழக்கத்தை விட கூடுதல் கவனம் செலுத்தி படிக்க வேண்டும். சகோதரர்களின் ஒத்துழைப்பும் மனைவியின் /கணவனின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருக்கும். தேவையில்லாத பிரச்னைகளில் தலையீடு செய்து உங்கள் சக்தியை இழக்காதீர்கள்.
விருச்சிகம்
இந்த வாரம் உறவினர்களாலும், நண்பர்களாலும் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். குடும்ப நிலையை பொறுத்தவரை எதிர்பாராத செலவு ஏற்பட்டாலும் எப்படியோ சமாளித்து விடுவீர்கள். தனியார் உத்தியோகஸ்தர்கள் திறமையாக செயல்பட்டு நிர்வாகத்தின் பாராட்டு பெறுவார்கள். பள்ளி, பள்ளி கல்லூரி மாணவர்கள் தங்களுடைய எதிர்கால லட்சியத்தை உருவாக்கிக் கொள்வதற்கான வழிகாட்டுதல் கிடைக்க பெறுவார்கள். சுபகாரிய முயற்சிகள் பலன் தரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள். கணவன் மனைவி உறவுகள் அன்பு கொண்டதாக இருக்கும்.
தனுசு
இந்த வாரம் வாழ்க்கைத் துணையுடன் வாத விவாதங்களை தவிர்க்க வேண்டும். குடும்ப பொருளாதார நிலையை பொறுத்தவரை செலவுகள் அதிகரித்தாலும் அதற்கேற்ற வரவும் உண்டு. தனியார் உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு பெற்று உற்சாகம் அடைவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நண்பர்களோடு உற்சாகமாக பயணம் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். சிலர் வேலையை விட்டுவிட்டு சுயதொழில் தொடங்கு வதில் ஆர்வம் காட்டுவார்கள். வாகனங்களில் செல்லும் போது கவனமாகச் செல்லுங்கள். தேவையற்ற பயணங்களை குறைத்துக் கொள்ளுங்கள்.
மகரம்
இந்த வாரம் திட்டமிட்ட காரியங்களை நடத்தி முடிப்பார்கள். செலவுகள் அதிகரித்தாலும் அதற்கேற்ற வரவும் இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அரசாங்க உத்தியோகஸ்தர்கள் சங்கடங்களை சந்தித்து வெற்றி கொள்வார்கள். மாணவர்களுக்கு வார விடுமுறை உற்சாகமாக இருக்கும். அவர்கள் மற்றவர் விவகாரங்களில் தலையிடுவதை எச்சரிக்கையாக தவிர்க்க வேண்டும். இந்த வாரம் குடும்ப உறவுகளை நிதானமாகக் கையாள வேண்டும். சொத்து பிரச்னைகளில் சில மன வருத்தங்கள் ஏற்படலாம்.
கும்பம்
இந்த வாரம் நண்பர்களால் நன்மை அடைவார்கள். குடும்ப நிலையை பொறுத்தவரை சிக்கல்களை சுலபமாக சரி செய்து விடுவீர்கள். தனியார் உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய பணிகளில் வழக்கத்தை விட கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் பழைய மனஸ்தாபங்களை மனதில் கொள்ளாமல் நண்பர்களை அனுசரித்து செல்ல வேண்டும். வணிக முன்னேற்றங்கள் சிறப்பாகவே இருக்கும். வேலை உத்தியோகம் முதலியவற்றில் சிறிய பிரச்னைகள் இருந்தாலும் தடை இருக்காது.
மீனம்
இந்த வாரம் எதிர்பாராத நன்மைகள் வீட்டு கதவை வந்து தட்டும். குடும்ப பொருளாதார நிலையை பொறுத்தவரை பழைய கடன்களை திருப்பி செலுத்தும் காலகட்டம் இது. அரசு உத்தியோகஸ்தர்கள் அலுவலக ரீதியான புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் எதிர்காலம் முன்னேற்றத்திற்கான புதிய தொழில்நுட்பங்களை கற்பர். புதிய அனுபவங்கள் கிடைக்கும். பெரியவர்களுடைய ஆலோசனை கை கொடுக்கும். பெண்களுக்கு நல்ல முன்னேற்றமும் மரியாதையும் கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : 2025ல் 12 ராசிகளும் செய்ய வேண்டிய பரிகாரங்கள்