வார ராசிபலன் 01 மார்ச் 2026 முதல் 07 மார்ச் 2026 வரை!!
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எண்ணிய காரியங்கள் யாவும் ஈடேறும். நீண்ட நாள் இழுபறியாக இருந்த காரியங்கள் தடையின்றி முடியும். அரசியல் மற்றும் பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு தனி மரியாதை உண்டாகும். அனைத்து விஷயங்களும் இனிமையாகவே இருக்கும். வாழ்க்கைத் துணை ஆதரவு உண்டு. உத்தியோ
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எண்ணிய காரியங்கள் யாவும் ஈடேறும். நீண்ட நாள் இழுபறியாக இருந்த காரியங்கள் தடையின்றி முடியும். அரசியல் மற்றும் பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு தனி மரியாதை உண்டாகும். அனைத்து விஷயங்களும் இனிமையாகவே இருக்கும். வாழ்க்கைத் துணை ஆதரவு உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி மாற்றம் கிடைக்கும். நண்பர்கள் கிடைப்பார்கள். தொழிலில் புதிய மாற்றங்கள் உண்டு. லாபங்கள் அதிகரிக்கும். அலுவலகங்களில் அரசியல் பேச வேண்டாம். மேலதிகாரிகளோடு இணக்கம் வேண்டும். ஒரு சில நண்பர்களால் உங்களுக்கு ஏமாற்றமும் மன வருத்தமும் ஏற்படலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு கடின உழைப்பிற்கு சிறந்த பலன்கள் கிடைக்கும். நிர்வாகத் திறமை பளிச்சிடும். உங்களின் நீண்ட காலக் கனவு நனவாகும். உறவினர்களிடையே நிலவி வந்த கசப்புகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு முழுமையாகக் கிடைக்கும். சிலருக்கு கடன் பிரச்னைகள் குறையும். பங்குதாரர்களால் சில நல்ல திருப்பங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். தேவையில்லாத வேலைகளைச் செய்து தேவையான சில விஷயங்களை கோட்டை விட்டுவிடுவீர்கள். நண்பர்களாலும் சகோதரர்களாலும் சில பிரச்னைகள் வருவதற்கு வழி உண்டு.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசும் வாரமிது. குரு பகவான் பார்வையால் உங்களின் அறிவுத்திறன் மிளிரும். குடும்பத்தில் கொண்டாட்டங்கள் நிகழும். நண்பர்களுடனான உறவு பலப்படும். தொழில் மற்றும் வர்த்தகத்தில் புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டும். தேவையற்ற செலவுகள் குறையும். சில நேரங்களில், அவமானங்களையும் சந்திக்க வேண்டி இருக்கும். உடனடியாக எதிர்வினை ஆற்ற வேண்டாம். பொறுமையுடன் இருங்கள். வேலைகள் ஒன்று மாற்றி ஒன்று வந்து கொண்டே இருக்கும். எதைச் செய்வது எதை விடுவது என்பதில் கவனம் தேவை.
கடகம்
கடக ராசிக்காரர்கள் எதிலும் நிதானத்துடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும். எதிர்பாராத பணவரவும், அலைச்சல்களும் ஏற்படும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை உதவியாக இருக்கும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரித்தாலும் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகளைத் தள்ளிப்போடவும். கலைப் பணிகள் சிறப்பாக நடக்கும். பெண் குழந்தைகள் மகிழ்ச்சி நிறைந்த அனுபவங்களைத் தருவார்கள். வழக்கு பிரச்னைகள் இழுத்தடிக்கும். நண்பர்கள் என்று நினைத்தவர்களே உங்களுக்கு எதிராகப் பேசுவார்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு கூட்டுத் தொழில், மணவாழ்க்கையில் புதிய பொலிவு உண்டாகும். அரசாங்க உதவிகள் தடையின்றி கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் உண்டு. பிள்ளைகள் வெற்றிகளால் பெருமை அடைவீர்கள். நீண்ட கால முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும். சொத்துச் சேர்க்கை உண்டாகும். இல்லற வாழ்க்கையில் இனிமையையும் தரும். சுபகாரிய முயற்சிகள் பலன் தரும். திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் சுமுகமாக இருக்கும். ஆன்மிக முன்னேற்றம் உண்டு. சொத்து வில்லங்கங்கள் தொடரவே செய்யும். அதை சுமுகமாக முடித்துக் கொள்ள வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் எதிர்ப்புகளை முறியடித்து வெற்றி வாகை சூடும் வாரமிது. நிலுவையில் இருந்த சட்டப் போராட்டங்களில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். அரசியலில் இருப்பவர்கள் சாதுர்யமான பேச்சால் வெல்வீர்கள். சமூகப் பணிகளில் உங்கள் பங்களிப்பு பாராட்டப்படும். வேலை தேடுபவர்களுக்கு நற்செய்தி வரும். தடைகள் எல்லாம் பொடிப்பொடி ஆகும். துணிச்சலான சில முடிவுகள் கை கொடுக்கும். வியாபாரத்தில் புது உத்திகள் கையாள்வீர்கள் விற்பனை அதிகரிக்கும். சொத்து தொடர்பான பிரச்னைகள் நீடிக்கவே செய்யும். வேலை செய்யும் இடத்தில் மிகுந்த பொறுமை தேவை.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறும் வாரம். உங்களின் படைப்பாற்றல், தனித்திறமை உலகிற்குத் தெரியவரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீகச் சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். நிதி நிலையில் முன்னேற்றம் உண்டு. வியாபாரிகள் புதிய உத்திகளைக் கையாளுவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும். விழிப்புடன் இருந்தால், கடன் வாங்காது சமாளித்துக் கொள்ளலாம். மூன்றாம் மனிதர்களுடைய பிரச்னையில் நீங்களாக நுழைந்து கருத்து சொல்ல வேண்டாம். மேலதிகாரிகளுடன் இணக்க உறவை பின்பற்ற வேண்டும். பத்திரப் பதிவுகளில் கவனம் தேவை.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு வீடு, வாகனம், சொத்துச் சேர்க்கை உண்டு. மகிழ்ச்சியான வாரம். தாயார் வழி உறவுகளால் அனுகூலம் உண்டு. சமூகத் தொடர்புகள் விரிவடையும். நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். அரசியல்வாதிகள் மக்கள் மதிப்பைப் பெறுவார்கள். இடம், வீடு வாங்கும் யோகம் உண்டு. பண வரவு அதிகரிக்கும். சேமிப்பும் அதிகரிக்கும். பொருளாதார ரீதியாக எந்தப் பிரச்னைகளும் வருவதற்கு வாய்ப்பு இல்லை. பேசுகின்ற பேச்சில் மிகுந்த கவனம் தேவை. ஆகாரத்தில் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். பேச்சில் கவனமாக இருக்கவும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தன்னம்பிக்கையும், துணிச்சலும் பலமடங்கு உயரும். இளைய சகோதரர்களின் ஆதரவு கிட்டும். பயணங்களால் அனுகூலமான செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். வருமானம் நல்லபடி உயரும். தேவையற்ற செலவுகள் கட்டுக்குள் இருக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டு. வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. லாபங்கள் அதிகரிக்கும். நஷ்டங்களை ஈடு கட்டுவீர்கள். பொருளாதார ரீதியாக எந்தப் பிரச்னைகளும் வருவதற்கு வாய்ப்பு இல்லை. குடும்பத்தில் நீங்களாக பிரச்னைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் கவனமாக இருக்கவும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக முன்னேற்றம் உண்டு. செல்வாக்கு உயரும். பழைய சொந்தம் வந்து சேரும். குடும்ப உறுப்பினர்களிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சுபச் செய்திகளை எதிர்பார்க்கலாம். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்குப் புகழ் கூடும். உத்தியோகத்தில் பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வுக்கான செய்திகளை பெறலாம். பொறுமையோடு இருக்க வேண்டிய காலகட்டம் இது. எதிலும் அகலக்கால் வைக்க வேண்டாம். புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம். கணவன் மனைவி உறவை மிகுந்த எச்சரிக்கையோடு கையாளுங்கள். ஏழை எளியவர்களுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு வாழ்வில் முக்கிய திருப்புமுனை ஏற்படும் வாரமிது. உங்கள் அறிவுத்திறன் மற்றும் முடிவெடுக்கும் ஆற்றல் கூடும். குடும்பத்தில் சுப காரிய பேச்சு தொடங்கும். வாழ்க்கைத்துணையின் முழு ஆதரவு உங்களுக்கு இருக்கும். தொழிலில் அதிரடி மாற்றங்களைச் செய்து லாபத்தைப் பெருக்குவீர்கள். நிதி நிலைமை நன்றாகவே இருக்கும். உழைப்புக்கு ஏற்ற வருமானம் வந்துவிடும். கடன்களையும் ஓரளவு அடைத்துவிடுவீர்கள். பிரச்னைகள் வந்த வழியே போய்விடும். சிலருக்கு நல்ல முடிவு எடுத்தாலும்கூட அதனைச் செயல்படுத்த முடியாத அளவுக்கு தடைகள் வந்து கொண்டே இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு ஆன்மிகத் தேடல்கள் நிறைந்த வாரம். வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் ஆதாயம் உண்டாகும். எதிலும் நிதானம் காப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். சிலருக்கு வெளிநாட்டுப் பயணம் கைகூடும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வருமானம் நீங்கள் நினைக்காத ஒரு வழியில் வருவதற்கும் வாய்ப்புண்டு. குடும்ப பெரியவர்களின் உடல்நலனில் கவனம் தேவை. எதிலும் விட்டுக்கொடுத்துச் செல்லவும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். ஆரோக்கியத்தில் மிகுந்த விழிப்புணர்வு தேவை. சிலருக்கு மன அழுத்தம் அதிகரிக்கும்.
இதனையும் படியுங்கள் : 2025 குரு பெயர்ச்சி வெற்றி பெறும் ராசிகள்