வார ராசிபலன் 22 மார்ச் 2026 முதல் 28 மார்ச் 2026 வரை!!
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பல நல்ல தருணங்களை கொண்டு வரும். முன்னர் தொடங்கி வைத்த வேலைகள் வெற்றிகரமாக நிறைவேறும். அரசு அல்லது நிர்வாகத்தின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெரியவர்களுடன் நல்ல உறவு பேணுவீர்கள். தொழில் செய்வோருக்கு வருமானம் அதிகரிக்கு
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பல நல்ல தருணங்களை கொண்டு வரும். முன்னர் தொடங்கி வைத்த வேலைகள் வெற்றிகரமாக நிறைவேறும். அரசு அல்லது நிர்வாகத்தின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெரியவர்களுடன் நல்ல உறவு பேணுவீர்கள். தொழில் செய்வோருக்கு வருமானம் அதிகரிக்கும். பணியிடத்தில் உங்கள் திறமையை நிரூபிக்கும் வாய்ப்பு கிடைக்கும். உங்களுக்கு சில எதிர்பாராத நன்மைகளை செய்வார்.இந்த வாரம் வரவை விட செலவு அதிகம் இருக்கும் தேவையற்ற விதங்களில் பணம் காசு செலவழியும், என்பதால் செலவுகளில் மிகுந்த கவனம் தேவை.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொருளாதார ரீதியாக சிறப்பாக அமையும். எதிர்பாராத வருமானம் வர வாய்ப்புண்டு. கடன் பிரச்சனைகள் தீரும். புதிய சொத்து சேரும். குடும்பத்தில் பாசம் பெருகும். தம்பதிகளுக்கு கருத்து வேறுபாடு அகலும். பிள்ளைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். வியாபார விரிவாக்கம் செய்ய நல்ல நேரம். பங்குதாரர்களுடன் கலந்து ஆலோசனை செய்து முடிவெடுப்பது நன்மை தரும். பொருளாதாரத்தில் எதிர்பார்க்காத மேன்மை கிடைக்கும். உங்கள் எண்ணங்களில் புதுப்பொலிவு தோன்றும். வாழ்க்கைத் துணைவரின் உடல் நலத்தில் கவனம் செலுத்தவும்.
மிதுனம்
மிதுன ராசியினருக்கு இந்த வாரம் உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். பழைய கடன்கள் தீரும். புதிய வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்களுடன் நல்ல உறவு நிலவும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழில் செய்வோருக்கு போட்டிகள் அதிகமாக இருக்கும். ஆனால் உங்கள் திறமையால் முன்னேறுவீர்கள். பணியிடத்தில் பணிச்சுமை அதிகமாகும். வெகு நாளாகச் செய்ய விரும்பி தள்ளிப்போன முயற்சிகளை இப்போது செய்யத் தொடங்கி விடுவீர்கள். சிலர் நண்பர்களிடமும் பங்குதாரர்களிடம் கவனத்துடன் இருக்கவும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு உறவினர்களிடம் இருந்து எதிர்பாராத நிதி உதவி கிடைக்கும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வீட்டிற்கு புதிய பொருட்கள் வாங்குவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். மாமனார், மாமியார் உறவு சுமூகமாக இருக்கும். பிள்ளைகள் விஷயத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். ஏற்றுமதி தொழில் செய்வோருக்கு நல்ல பலன் கிடைக்கும். பொது வாழ்வில் உள்ளவர்கள் புதிய பதவிகளைப் பெறுவார்கள். கருத்து வேறுபாடு ஏற்படும் வாய்ப்பு உண்டு. கணவன் மனைவி ஒற்றுமைக்கு மூன்றாம் மனிதர்களால் பிரச்னைகள் வரலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உங்கள் திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெறும். பதவி உயர்வு கிடைக்கும். பணியில் முன்னேற்றம். புதிய பதவிகள் தேடி வரும். திருமணம் நிச்சயிக்கப்படும். பெற்றோர் ஆசிர்வாதம் கிடைக்கும். நண்பர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். சமூக அந்தஸ்து உயரும். தொழில் செய்வோருக்கு வியாபாரம் விரிவாகும். பங்குச் சந்தையில் லாபம் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். ஆலய வழிபாடு செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். விருந்தினர்களை உபசரித்து மகிழ்வீர்கள். சுப விரயங்கள் அதிகரிக்கும்.
கன்னி
கன்னி ராசியினருக்கு வருமானம் அதிகரிக்கும். பழைய முதலீடுகள் லாபம் தரும். வார இறுதியில் ஏதேனும் புண்ணிய ஸ்தலத்திற்கு செல்வீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். திருமணமானவர்களுக்கு இல்லறம் இனிக்கும். உறவினர்களுடன் நல்ல புரிதல். நண்பர்கள் மூலம் சமூக அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். வெளிநாட்டு வர்த்தகம் லாபம் தரும். பணியிடத்தில் பணியாளர்களுடன் நல்லுறவு ஏற்படும். புதிதாக வீடு கட்டிக் குடியேற வேண்டும் என்ற எண்ணம் பலிக்கும். சுபகாரிய நிகழ்வுகள் நடைபெறும். எதிலும் அகலக்கால் வைக்காதீர்கள் யோசித்துச் செய்யுங்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உங்களுக்கு சுப நிகழ்வுகள் நடக்கும். திருமணம் அல்லது நிச்சயதார்த்தம் நடக்கலாம். வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழலும், தம்பதிகளிடையே நல்லுறவும் உண்டு. பிள்ளைகள் மூலம் நிம்மதி ஏற்படும். வியாபாரத்தில் லாபம் சேரும். புதிய முயற்சிகளில் இறங்க இது நல்ல நேரம். பணியிடத்தில் உங்கள் முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். விலகிய உறவுகள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். உங்கள் கடந்த கால தவறுகள் சீராகும். வீண் பேச்சுக்களும் கோபமான பேச்சுக்களும் தவிர்க்கவும். தந்தை மகன் உறவுகளில் கவனம் தேவை.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத வருமானம் வரும். கடன் தொல்லை நீங்கும். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் அன்பு பெருகும். மாமனார், மாமியார் உறவு மேம்படும். நண்பர்கள் துணை புரிவார்கள். சமூக நிகழ்வுகளில் பங்கேற்பீர்கள். தொழில் செய்வோருக்கு வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும், வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். தகவல் தொடர்புகளில் மிகுந்த கவனம் தேவை. சில விஷயங்களை நீங்கள் மறைப்பதாலும் சொல்லத் தவறுவதாலும் பிரச்னைகள் வரும் கவனம் தேவை.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். புதிய வாகனம் வாங்கும் சந்தர்ப்பம் ஏற்படும். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் நல்லிணக்கம் நிலவும். பெற்றோர் ஆசிர்வாதம் கிடைக்கும். உறவினர்களுடன் இனிய உறவு ஏற்படும். நண்பர்களின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் விரிவாக்கம் செய்ய நல்ல நேரம். புதிய கிளைகள் தொடங்கலாம். பணியிடத்தில் உங்கள் மதிப்பு உயரும். அரசாங்க விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். வரவேண்டிய பணம் தாமதமாகும். எதிலும் பதற்றமோ அவசரமோ காட்டக்கூடாது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். பழைய கடன்கள் தீரும். சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். வீட்டில் விருந்தினர்கள் வருகை உண்டு. பிள்ளைகள் வகையில் மகிழ்ச்சி ஏற்படும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழில் செய்வோருக்கு வியாபாரத்தில் லாபம் குவியும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். உடனடியாக எடுக்க வேண்டிய முடிவுகளை தவிர மற்றவற்றை நீங்கள் மிக அவசரமாக எடுக்க வேண்டிய தேவையில்லை. இரவுப் பயணத்தைத் தவிர்க்க வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். புதிய நண்பர்கள் சேர்வார்கள். பழைய உறவுகள் புத்துயிர் பெறும். வெளிநாட்டில் இருந்து நற்செய்தி கிடைக்கும். சமூக அமைப்புகளில் முக்கிய பொறுப்பு கிடைக்கும். அரசியல் ரீதியாக ஆதாயம் கிட்டும். திருமணமானவர்களுக்கு இல்லறம் இனிக்கும். உறவினர்களுடன் நல்ல உறவு நிலவும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். பங்குச் சந்தையில் லாபம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப்பிரதி வாதங்களில் ஈடுபடவேண்டாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உங்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். நீண்ட நாள் கனவு நனவாகும். சொந்த தொழில் தொடங்க வாய்ப்புண்டு. பழைய வழக்குகள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீட்டில் உள்ள பெரியவர்கள் மனம் மகிழ்வார்கள். உறவினர்களுடன் சுமுக உறவு ஏற்படும். தொழில் செய்வோருக்கு வியாபாரத்தில் விரிவாக்கம் செய்யலாம். பணியிடத்தில் உங்கள் மதிப்பு உயரும். சம்பள உயர்வு கிடைக்கும். எதிலும் கவனத்துடனும் முன்னெச்சரிக்கையுடனும் இருப்பது நல்லது. சற்று கவனத்துடன் இருந்தால் குடும்ப உறவுகளை உரசல் இன்றி சமாளித்து விடலாம்.
இதனையும் படியுங்கள் : குரு வக்ர நிவர்த்தி 2026