வார ராசிபலன் 08 மார்ச் 2026 முதல் 14 மார்ச் 2026 வரை!!

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மனவலிமையும், காரிய சித்தியும் உண்டாகும். தடைப்பட்ட பணிகளில் வேகம் பிறக்கும். ஆளுமைத் திறன் வெளிப்பட்டு சமூக மதிப்பைப் பெற்றுத் தரும். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், இடமாற்றமும் கிடைக்கும்.‌ ‌போட்டி

By ·

மேஷம் 

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மனவலிமையும், காரிய சித்தியும் உண்டாகும். தடைப்பட்ட பணிகளில் வேகம் பிறக்கும். ஆளுமைத் திறன் வெளிப்பட்டு சமூக மதிப்பைப் பெற்றுத் தரும். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், இடமாற்றமும் கிடைக்கும்.‌ ‌போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். புதிய திட்டம் அல்லது பொறுப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது. அரசியலாதாயம் உண்டு. சமூக அந்தஸ்து உயரும். புதிய முதலீடுகள் செய்கின்ற பொழுது அதிக கவனம் வேண்டும். எதிலும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். தேவையில்லாத போட்டிகளால் மன உளைச்சல் ஏற்படலாம்.

ரிஷபம் 

ரிஷப ராசியினருக்கு இந்த வாரம் யோகமான வாரம். ஆடம்பரப் பொருட்கள் சேர்க்கையும், வசதி வாய்ப்பும் பெருகும். மனதிலிருந்த குழப்பம் நீங்கி வெற்றி நடை போடுவீர்கள். சுப நிகழ்வுகளில் கலந்து கொள்வீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு மக்கள் ஆதரவும், சமூக அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வாழ்க்கைத் துணைவருடன் நல்ல புரிதல் இருப்பதால் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். சிலருக்கு செலவுகள் அதிகரிக்கவே செய்யும். பிள்ளைகளால் பிரச்னைகள் ஏற்படும்.

மிதுனம் 

மிதுன ராசியினருக்கு பொறுமையும், விவேகமும் தேவைப்படும் வாரம். குழப்பம் நீங்கித் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். நிலுவையில் இருந்த அரசு காரியங்கள் கைகூடும். நண்பர்களிடையே மனக்கசப்பு நீங்கும். சமூக உறவுகளில் புதிய அறிமுகங்கள் கிடைப்பதோடு, அவர்கள் மூலம் எதிர்காலத்தில் உதவிகள் பெருகும். புதிய வேலைகள், புதிய திட்டங்கள் என மிகவும் பிசியாக இருப்பீர்கள். ஏற்கனவே தொழிலில் இருப்பவர்கள் அதை விஸ்தரிக்கும் வாய்ப்பு உண்டு. அடிக்கடி உடல் சோர்வு ஏற்படலாம். சர்க்கரை நோய் மற்றும் இருதய பிரச்னைகள் உள்ளவர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உணர்ச்சியை விட அறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காலம். சொந்த பந்தங்களின் ஆதரவு பெருகும். முயற்சிகள் வெற்றி பெறும். புதிய செய்திகள் உற்சாகம் தரும். சமூகத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். நண்பர்களுடன் நீண்ட தூரப் பயணங்கள் மேற்கொண்டு மகிழ்வீர்கள். வணிகர்களுக்கு பழைய கடன் வசூலாகும். புதிய தொழில் பதவி வாய்ப்பு உள்ளது. வருமானத்தில் குறையில்லை. புதிய முதலீடுகள் பற்றிய சிந்தனை வரும். உணவு முறையில் கவனம் வேண்டும். செயல்களில் கவனச் சிதறல் உண்டு.

சிம்மம் 

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் செல்வாக்கு தரும் வாரமாகும். தடைப்பட்ட காரியங்கள் திடீரென முடிவாகும். ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு பக்கபலமாக இருக்கும். அரசாங்க ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிட்டும். நிதி நிலையில் முன்னேற்றம் காணப்படும். சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடைபெறும் வாய்ப்பு உண்டு. கணவன்-மனைவி உறவுகள் நன்றாகவே இருக்கும். கலைத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு புதிய ஆதாயமான வாய்ப்புகள் கிடைக்கலாம். கணவன் மனைவி சிறிய உரசல்கள் ஏற்படலாம்.

கன்னி 

கன்னி ராசியினர் திட்டமிட்டுச் செயல்பட்டு வெற்றியடையும் வாரம். பூர்வீக சொத்து விவகாரங்களில் சுமுகமான முடிவு எட்டப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உறவினர் வருகை உற்சாகம் தரும். பொதுமக்களிடையே நற்பெயர் கிடைக்கும். புதிய தொழில் முதலீடுகள் லாபகரமாக அமையும். வீட்டு உறுப்பினர்களுடன் அதிக நேரம் செலவிடும் வாய்ப்பு உண்டு. உறவினர்களோடு கருத்து வேறுபாடுகள் மறையும். முக்கியமாக மாணவர்களுக்கு படிப்பை தவிர வேறு விஷயங்களில் கவனம் இருக்கும். வருமானம் இருந்தாலும் எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டு தவிக்க நேரலாம்.

துலாம் 

துலாம் ராசியினருக்கு மகிழ்ச்சியான வாரம். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாள் முயற்சிகள் முடிவுக்கு வரும். நிம்மதியும், சுறுசுறுப்பும் கூடும். குடும்ப உறவுகளில் விட்டுக்கொடுத்து செல்லவும். நண்பர் ஆலோசனை தக்க சமயத்தில் உதவும். சுப நிகழ்ச்சி சுமுகமாக முடியும். சமூகத்தில் மதிப்பு உயரும். உத்தியோகத்தில் உரிய அங்கீகாரம் ஊதிய உயர்வு கிடைக்கும். அலுவலகத்தில் உள்ளவர்கள் உங்கள் யோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். மார்க்கெட்டிங் துறையில் உள்ளவர்களுக்கு தகவல் தொடர்புத் துறையில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும்.

விருச்சிகம் 

விருச்சிக ராசியினர் துணிச்சலாக செயல்படும் வாரம் இது. இழந்த செல்வாக்கு திரும்பவும் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபச் செலவுகள் உண்டு. அரசியல் மற்றும் பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். சமூகத்தில் உங்களுடைய மதிப்பு அதிகரிக்கும். பணியில் இருப்பவர்களுக்கு இடம் மாற்றம் உண்டு. புதிய தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசு வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு உண்டு. சுபகாரிய முயற்சிகள் பலன் தரும். தந்தையுடனான உறவில் மாறுபாடுகள் ஏற்படலாம்.

தனுசு 

தனுசு ராசியினருக்கு அமைதியும் பொறுமையும் தேவைப்படும் வாரம். சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். ஆன்மீக நாட்டம் ஏற்படும். முயற்சிகள் பலன் தரும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கூடும். மேலிட தொடர்புகளால் லாபம் உண்டு. பொதுப்பணியில் உங்கள் பங்கு அதிகரிக்கும். மாணவர்கள் சாதனை புரிவார்கள். எதையும் அமைதியோடு பதற்றமின்றி கவனமாகச் செயல்பட்டால் நல்ல பலன் கிடைக்கும். பணி செய்யும் இடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். கூடுதல் வேலையும் இருக்கும். சற்றும் சிந்திக்காமல் காரியத்தில் இறங்கி கஷ்டப்படும் அமைப்பு உண்டு.

மகரம்

மகர ராசியினருக்கு இந்த வாரம் கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். மனதில் இருந்த பயம் அகலும். தெளிவான சிந்தனைகள் உதயமாகும். சமூகத்தில், குடும்பத்தில் உங்களுடைய மதிப்பு அதிகரிக்கும். உறவினர்கள், உடன் பிறந்தோர் தொடர்பு மகிழ்ச்சி தரும். குழந்தைகளின் கல்வி மனதிற்கு மகிழ்ச்சி தரும். பணியிடத்திலிருந்து சிக்கல்கள் விலகும். பாராட்டுகள் கிடைக்கும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு சாதகமாகும். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் கிடைக்கும். எதிர்பார்க்கும் பல விஷயங்கள் உங்களுக்குத் தாமதத்தையும் ஏமாற்றத்தையும் தரலாம். கணவன் மனைவி உறவுகளில் மனக்கசப்புகள் வரும்‌.  

கும்பம் 

கும்ப ராசியினருக்கு புதிய வாய்ப்புகள் கதவை தட்டும் காலகட்டம் இது. ஒரு சிலருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் கைகூடி வரும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். புதிய சிந்தனைகளால் மனம் மகிழும். குடும்ப உறவுகளிடையே கனிவான பேச்சு அவசியம். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய மாற்றங்கள் உண்டு. நண்பர்கள் ஆலோசனை உங்கள் வளர்ச்சிக்கு உதவும். வருமானத்தில் பெரிய சிக்கல் வராது. உங்கள் நலம் விரும்பிகள் உதவுவார்கள். நட்புகள் எதிர்பாராமல் வந்து கைகொடுக்கும். கடன் வாங்கும் போது மிக கவனமாக இருக்க வேண்டும். தூக்கமின்மை அதிகரிக்கும். 

மீனம் 

மீன ராசியினருக்கு பொறுப்புகள் அதிகரிக்கும் வாரம் இது. நிதி நிலைமை நன்றாக இருக்கும். நீண்ட நாள் விருப்பம் ஒன்று நிறைவேறும். மனதில் உள்ள பாரம் விலகும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் எதிர்பார்த்த சுப செய்திகள் வந்து சேரும். உறவினர் நண்பர்களுடன் பகை விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடத்தில் மதிப்பு கூடும். போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். செலவுகள் கட்டுப்படுத்தப்பட்டு நிதி நிலைமை சற்று முன்னேற்றமாக இருக்கும்.  தொழிலில் சிறப்பு உண்டு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

இதனையும் படியுங்கள் : குரு பெயர்ச்சி பலன்கள் 2026

Recipes AMP · Quick view
View full