வார ராசிபலன் 15 மார்ச் 2026 முதல் 21 மார்ச் 2026 வரை!!

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுபச் செலவுகள், ஆன்மீகப் பயணங்கள் உண்டு. நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். மனதிற்குள் நினைத்த காரியங்கள் தடையின்றி நிறைவேறும் உன்னதமான நேரமிது. பொருளாதார நிலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.‌போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் உ

By ·

மேஷம் 

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுபச் செலவுகள், ஆன்மீகப் பயணங்கள் உண்டு. நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். மனதிற்குள் நினைத்த காரியங்கள் தடையின்றி நிறைவேறும் உன்னதமான நேரமிது. பொருளாதார நிலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.‌போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி தன்னம்பிக்கை ததும்பும். திருமணப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும்.‌ செலவுகள் செய்யும் பொழுது மிக மிக ஜாக்கிரதையாகச் செய்ய வேண்டும்.

ரிஷபம் 

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தொட்டதெல்லாம் பொன்னாகும். நீண்ட காலக் கனவுகள் நனவாகும். அரசு வழி காரியங்களில் வெற்றிகள் கிட்டும். குடும்ப சுப நிகழ்ச்சிகளுக்கான திட்டமிடல் கைகூடும். உறவினர்களிடையே கசப்புணர்வுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் திட்டங்கள் படிப்படியாக உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு அமையும். பிள்ளைகளின் முன்னேற்றம் மனதிற்கு ஆறுதலை தரும். ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். தேவையில்லாத பிரச்னைகளின் மன அழுத்தம் ஏற்படும்.

மிதுனம் 

மிதுன ராசியினருக்கு தொழில், உத்தியோகத்தில் புதிய உச்சம் தொடும் வாரம். உத்தியோகத்தில் கடின உழைப்பிற்கு ஏற்ற ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிட்டும். வியாபாரிகள் புதிய முதலீடுகளைத் தவிர்த்து, இருக்கும் தொழிலைச் சீரமைப்பது நல்லது. நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு உங்களுக்குப் பெரும் பலமாக இருக்கும். பொருளாதார நிலை சீராக இருக்கும். பழைய கடன்களை அடைப்பதற்கான வழி பிறக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளோடு இணக்கமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை.

கடகம் 

கடக ராசிக்காரர்களுக்கு தந்தை வழி ஆதாயங்கள் கிடைக்கும். ஆன்மீகப் பயணங்கள், குலதெய்வ வழிபாடு மூலம் மன அமைதி கிடைக்கும். திறமை மேலதிகாரிகளால் அங்கீகரிக்கப்படும். வெளியூர் பயணங்கள் மூலம் ஆதாயம் உண்டு. மனக் குழப்பம் நீங்கித் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் இணக்கமான சூழல் நிலவும். வாழ்க்கைத் துணை மூலம் சுபச் செய்திகள் வந்து சேரும். உங்கள் திட்டங்கள் படிப்படியாக உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு அமையும். இந்த வாரம் அவசரப்பட்டு பேசி வம்பில் மாட்டிக் கொள்ளக்கூடாது. 

சிம்மம் 

சிம்ம ராசிக்காரர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய வாரமாகும். தேவையற்ற வாக்குவாதங்கள் பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். சிலர் தங்களின் சாதுர்யமான பேச்சால் எதிரிகளை வீழ்த்துவார்கள். பொதுக் காரியங்களில் உங்களின் தலைமைப் பண்பு வெளிப்படும். இக்கட்டான சூழ்நிலைகளைச் சமாளிக்கும் ஆற்றல் பிறக்கும். நீண்ட நாள் பிரார்த்தனை நிறைவேறும். அரசியலில் உள்ளவர்கள் தங்கள் பதவியைத் தக்க வைத்துக் கொள்வார்கள். நண்பர்களுடன் வெளியூர் பயணம் செல்லத் திட்டமிடுவீர்கள். இந்த வாரம் அவசரப்பட்டு எந்தப் பணியிலும் ஈடுபடக்கூடாது.

கன்னி 

கன்னி ராசிக்காரர்களுக்கு கூட்டுத் தொழில் மற்றும் வாழ்க்கை துணையால் மேன்மை உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்குத் தகுதிக்கேற்ற வேலை அமையும். வியாபாரத்தில் அரசு ஒப்பந்தங்கள் மற்றும் பெரிய நிறுவனங்களின் தொடர்புகள் கிடைக்கும். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். பங்குதாரர்களிடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் உங்களின் ஆலோசனைகளுக்கு மதிப்பு அளிக்கப்படும். சகோதர சகோதரிகளிடையே நிலவி வந்த சொத்துத் தகராறுகள் முடிவுக்கு வரும். வேலை செய்யும் இடத்தில் உங்கள் சக்திக்கு மீறிய பொறுப்புகள் சுமத்தப்படும்.

துலாம் 

துலாம் ராசியினருக்கு வெற்றி கிட்டும் வாரம். வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வரும். உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு இடமாற்றம் அமையும். வணிகர்களுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலில் லாபம் கிட்டும். குடும்ப உறுப்பினர்களுடன் விட்டுக்கொடுத்துச் செல்வது மன நிம்மதி தரும். புதிய நபர்களை நம்பி எதையும் ஒப்படைக்க வேண்டாம். தொழிலில் புதிய முதலீடுகளை இந்த வாரம் தள்ளி வைப்பது நல்லது. புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சிலருக்கு உடல் சூடு, கண் எரிச்சல், தலைவலி முதலிய பிரச்னைகள் ஏற்படலாம்.

விருச்சிகம் 

விருச்சிக ராசிக்காரர்களுக்கு புத்திர வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும்.  தேவையற்ற ஆடம்பரச் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்ய ஏற்ற காலம். கணவன்  மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சுப காரியங்கள் சுமுகமாக முடியும். நண்பர்களிடையே கசப்புணர்வுகள் நீங்கி நட்பு பலப்படும். சமூகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும். கடினமான பணிகளை திட்டமிட்டுச் செய்து முடிப்பீர்கள். மனதில் இருந்த கவலைகள் மறையும். நெருங்கிய உறவுகள் இடையே வாக்குவாதமும் கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டு மன அமைதி கெடும்.

தனுசு 

தனுசு ராசியினருக்கு புதிய வீடு, மனை, வாகன யோகம் உண்டாகும். தாயாரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் வழங்கப்படும். பொருளாதார நிலை சீராக இருக்கும். நிலம் சார்ந்த முதலீடுகள் நற்பலன் தரும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையினால் உற்சாகம் பிறக்கும். அரசியல்வாதிகளுக்குப் புதிய பதவிகள் தேடி வரும். சமூகப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்குப் பாராட்டுகள் குவியும். குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பேச்சில் கடுமையைக் காட்டாமல் இனிமையைக் காட்டுங்கள்.

மகரம் 

மகர ராசிக்காரர்களுக்கு வீரம், விவேகம் அதிகரிக்கும் வாரம். இளைய சகோதரர்களின் ஆதரவு பக்கபலமாக இருக்கும். நண்பர்களின் உதவியால் முக்கியக் காரியம் ஒன்று நிறைவேறும். உழைப்பிற்கு மதிப்புக் கிடைக்கும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பு நல்குவார்கள். தேவைக்கேற்பப் பண உதவி கிட்டும். புதிய தொழில் தொடங்கத் திட்டமிடுபவர்களுக்கு கடன் எளிதில் கிடைக்கும். புதிதாக வீடு கட்டிக் குடியேற வேண்டும் என்ற எண்ணம் பலிக்கும். உறவினர்களுடன் சுற்றுலா செல்லத் திட்டமிடுவீர்கள். எல்லா விஷயத்திலும் கவனம் பொறுமை தேவை.

கும்பம் 

கும்ப ராசியினருக்கு பேச்சாற்றலால் காரியங்களைச் சாதிக்கும் வாரம். தன வரவு தாராளமாக இருக்கும். தொழிலில் புதிய யுக்திகளைப் புகுத்தி லாபத்தை அதிகரிப்பீர்கள். பங்குச் சந்தையில் மிதமான லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்களின் பொறுப்புணர்வு மெச்சப்படும். நண்பர்களுடன் கருத்துப் பரிமாற்றம் உற்சாகம் தரும். உத்தியோகத்தில் உங்கள் ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளப்படும். பிள்ளைகளின் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். அரசியல் துறையில் இருப்பவர்கள் சமூக அந்தஸ்து உயரும். சிலருக்கு மனதில் காரணமில்லாத அச்சம் தலைதூக்கும். 

மீனம் 

மீன ராசிக்காரர்களுக்கு ஆற்றலும் வேகமும் அதிகரிக்கும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு பணிகளை முடிப்பீர்கள். தனித்திறமை வெளிப்பட்டு சமூகத்தில் கௌரவம் உயரும். முயற்சிகளில் வெற்றி கிட்டும். உங்களின் வாக்கு சாதுர்யம் உங்களை முன்னிலைப் படுத்தும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு உண்டு. உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும். குடும்பத்தில் சுமுகமான ஒற்றுமையும் ஒத்துழைப்பும் கிடைக்கும். சிலருக்கு தோல் நோய் இருந்தால் அது பிரச்னையைத் தரும்.

இதனையும் படியுங்கள் : திரிகிரக யோகம் 2026

Recipes AMP · Quick view
View full