வாராந்திர ராசிபலன் 9 மார்ச் 2025 முதல் 15 மார்ச் 2025 வரை!!

மேஷம் இந்த வாரம் பயணங்கள் மூலம் பல நன்மைகள் வந்து சேரும்.வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் வேறு வீடு மாற்றுவது, வீடு கட்டும் முயற்சிகள் ஆகியவை நல்ல விதமாக நடக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாறுதல் கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். வரவேண்டிய பணம் வரும். ப

By ·

மேஷம்

இந்த வாரம் பயணங்கள் மூலம் பல நன்மைகள் வந்து சேரும்.வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் வேறு வீடு மாற்றுவது, வீடு கட்டும் முயற்சிகள் ஆகியவை நல்ல விதமாக நடக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாறுதல் கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். வரவேண்டிய பணம் வரும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் உறவினர் வீட்டு விசேஷங்களில் உற்சாகமாக கலந்து கொள்வார்கள். அரசுவழி வேலை வெற்றியாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறும். எதிர்ப்பு விலகும். வெளிநாட்டு தொடர்பால் லாபம் உண்டாகும்.

ரிஷபம்

இந்த வாரம் மனதில் புதிய சிந்தனைகள் உருவாகும். குடும்ப பொருளாதார நிலை நல்லவிதமாக இருக்கும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தொழில் கல்வி கற்கும் சூழல் அமைந்துள்ளது. வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். நீங்கள் செய்யும் வேலை வெற்றி பெறும். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறும். உழைப்பாளர் நிலை உயரும். இழுபறியாக இருந்த வேலை நடக்கும். ஒரு சிலருக்கு புதிய இடம், வீடு வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரம், முன்னேற்றமடையும். குழந்தைக்காக ஏங்கியவர்கள் கனவு நனவாகும்.

மிதுனம்

இந்த வாரம் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சுற்றத்தார்களின் அன்பு, ஆதரவு காரணமாக குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். இல்லத் துணையோடு இனிமையாக பேசி மகிழ்வீர்கள். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கல்வி மட்டுல்லாமல் விளையாட்டிலும் திறமை காட்டுவார்கள். உடல்நிலையில் கவனம் தேவை. பித்தம் சம்பந்தமான தலை சுற்றல், தொண்டைப்புண் ஆகியவை ஏற்பட்டு நீங்கும். வெளிநாடு செல்வதற்காக மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். பணியாளருக்கு இடமாற்றம் ஏற்படும். தொழிலில் நெருக்கடி நீங்கும்.

கடகம்

இந்த வாரம் மகிழ்ச்சிகரமான காலகட்டம். குடும்பத்தில் சுப காரிய பேச்சுக்கள் நடந்தேறும். இல்லத் துணையின் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். அரசு பணியாளர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் உயர் அதிகாரியின் ஆதரவை பெறுவார்கள். தடைபட்ட வருமானம் வரும். வியாபாரத்தில் லாபம் கூடும். குடும்ப நெருக்கடி விலகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். வீட்டில் சுப காரியம் நடக்கும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டிய காலகட்டம் இது. வியாபாரிகளுக்கு நெருக்கடி அதிகரிக்கும்.

சிம்மம்

இந்த வாரம் எதிர்பார்த்த தனவரவு வந்து சேரும். இல்ல துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விலகும். குடும்ப உறவுகளிடம் வாத, விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் எதிர்கால வளர்ச்சிக்கு ஏற்ப தொழில் கல்வி அல்லது பொறியியல் கல்வி சம்பந்தமான ஆலோசனைகளைப் பெறுவார்கள். ரியல் எஸ்டேட், பில்டர்ஸ் தொழில் லாபம் தரும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். அரசு பணியாளர்கள் இட மாற்றத்திற்கு முயற்சி மேற்கொள்ளலாம். சகோதர வகையில் ஒத்துழைப்பு கூடும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும்.

கன்னி

இந்த வாரம் பல்வேறு பெரிய மனிதர்களுடைய தொடர்பு மூலம் பல நன்மைகள் உண்டு. குடும்பத்தில் உறவினர்கள் வருகை, சுப காரிய பேச்சு, சுபச் செலவுகள் ஆகியவை உண்டு. உற்பத்தி மற்றும் விற்பனை துறை சார்ந்த தொழிலில் இருப்பவர்கள் அனைவருக்குமே இது ஒரு நல்ல காலகட்டம். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் விளையாட்டுக்களில் சாதனை புரிவர். போட்டியாளர் விலகுவர். சொத்து, சுகம், வசதி, வாய்ப்பு என்ற கனவு நனவாகும். வழக்கு சாதகமாகும். தொழிலில் போட்டியாளர்களை வெல்லக்கூடிய நிலை உண்டாகும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். புதிய ஒப்பந்தங்களில் கவனம் தேவை.

துலாம்

இந்த வாரம் திடீர் நன்மைகள் ஏற்படும். இல்லத்தரசிகள் நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று திட்டமிட்ட பொருட்களை வாங்கி மகிழ்வர். ஒரு சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் எழுத்து மற்றும் செய்முறை தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண் பெறுவார்கள். வியாபாரம் முன்னேற்றம் அடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வருமானம் திருப்தி தரும். வியாபாரம், தொழிலில் தோன்றிய போட்டி விலகும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். வழக்கு சாதகமாகும். குடும்பத்திலுள்ள நெருக்கடி விலகும்.

விருச்சிகம்

இந்த வாரம் தெய்வ அனுக்கிரகம் கிட்டும். மனதில் புதிய சிந்தனைகள் உருவாகி புதிய மனிதர்களாக உலா வருவீர்கள். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய காலகட்டம் இது. அலைச்சல் காரணமாக உடல் அசதி, காதில் கோளாறு, தலை சுற்றல் போன்றவை ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் வரும். வெள்ளிக்கிழமை கவனமாக செயல்படுவது நல்லது. உடல்நிலை சீராகும். மறைந்திருந்த செல்வாக்கு வெளிப்படும். தைரியமாக செயல்பட்டு நினைப்பதை நடத்தி முடிப்பீர்.

தனுசு

இந்த வாரம் பல்வேறு நல்ல மாற்றங்கள் உண்டு. வீடு மாற்றம் செய்ய வேண்டும் என்று நினைத்த இல்லத்தரசிகளுக்கு அதற்கான வாய்ப்பு வந்துவிட்டது. ஒரு சிலருக்கு புதிய வீடு வாங்கும் யோகம் உண்டாகும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வெளிநாட்டில் மேற்படிப்பு படிப்பதற்கான தகவல்களை பெறுவார்கள். வியாபாரம், தொழில் லாபமடையும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.

மகரம்

இந்த வாரம் பல அதிர்ஷ்டங்கள் வந்து சேரும். இல்லத் துணையோடு பல சுப நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவீர்கள். கைகளில் பணப்புழக்கம் உண்டு. பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். அரசு துறை மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் பணியிட மாற்றம் பெறுவார்கள். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பாடங்களில் கவனம் செலுத்த வேண்டிய காலகட்டம் இது. திருமண வயதினருக்கு வரன் வரும். தந்தை வழி உறவுகளின் ஆதரவு கூடும். பொன், பொருள் சேரும். தடைபட்டிருந்த வேலை நடக்கும். உடல்நிலையில் கவனம் தேவை. வழக்கு சாதகமாகும். நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர்.

கும்பம்

இந்த வாரம் செலவுகள் கூடுதலாக இருக்கும். அதற்கேற்ற பொருளாதார வரவும் உண்டு. குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கல்வி நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு புதிய பொறுப்புகள் கொடுக்கப்பட்டு, மதிப்பு அதிகரிக்கும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அரசு போட்டி தேர்வுகளுக்கு தங்களை தயார் செய்து கொள்வர். சுலபமாக முடிய வேண்டிய வேலைகளிலும் இழுபறி உண்டாகும். அரசியல் வாதிகளுக்கு முன்னேற்றம் உண்டாகும். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். செய்துவரும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

மீனம்

இந்த வாரம் பல சுப காரியங்களில் குடும்பத்தோடு பங்கேற்று மகிழ்ச்சி அடைவீர்கள். செலவினங்கள் அதிகரித்தாலும் அதற்கேற்ற வரவும் உண்டு. அரசுத்துறை ஊழியர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் எதிர்கால முன்னேற்றத்தை மனதில் கொண்டு கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். வெளிநாட்டுப் பயணங்கள், வேலை, சுற்றுப்பயணம் என எப்பொழுதும் பிஸியாகவே இருப்பீர்கள். வேலைத்தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். ஒருசிலர் புதிய வாகனம் வாங்குவீர். வியாபாரிகள் சிலருக்கு அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

இதனையும் படியுங்கள் : 2025 சனிப்பெயர்ச்சி மற்றும் மற்ற பெயர்ச்சிகளால் மார்ச் மாதத்தில் அதிர்ஷ்டத்தை பெற போகும் ராசிகள்!!

Recipes AMP · Quick view
View full