வார ராசிபலன் 16 மார்ச் 2025 முதல் 22 மார்ச் 2025 வரை!!
மேஷம் இந்த வாரம் குடும்பத்திலும், சமூகத்திலும், மதிப்பு மரியாதை பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். தொழில் விரிவாக்கம் செய்வதற்கான வசதி வாய்ப்புகளை பெறுவர்.உறவினர்களுடன் பேசும்போது கவனமாக இருக்கவும். வீண் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பம் தொடர்பான எந்த ஒர
மேஷம்
இந்த வாரம் குடும்பத்திலும், சமூகத்திலும், மதிப்பு மரியாதை பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். தொழில் விரிவாக்கம் செய்வதற்கான வசதி வாய்ப்புகளை பெறுவர்.உறவினர்களுடன் பேசும்போது கவனமாக இருக்கவும். வீண் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பம் தொடர்பான எந்த ஒரு முடிவையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல நேரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத செலவுகள் உண்டு. சிலருக்கு இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
ரிஷபம்
இந்த வாரம் தடைபட்ட பொருளாதாரம் வந்து சேரும். குடும்ப உறவுகளிடையே கருத்து வேறுபாடு இருந்தால் அமைதியாக இருப்பதே நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணி உயர்வை பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தேர்வுகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவர். ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்படவும் அதன் காரணமாக மருத்துவச் செலவுகள் செய்யவும் நேரும். குடும்பத்தில் சற்று நிம்மதி இல்லாத நிலை காணப்படும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும். கடன் கொடுப்பது மற்றும் வாங்குவது இரண்டையும் இந்த வாரம் தவிர்க்கவும்.
மிதுனம்
இந்த வாரம் நீண்ட நாட்களாக திட்டமிட்ட விஷயங்களை நல்லவிதமாக செய்து முடிப்பார்கள். குடும்பத்தில் தடைபட்ட சுப காரியங்கள் நல்லவிதமாக நிறைவேறும். உத்தியோகஸ்தர்கள் பணியிடங்களில் பணி சம்பந்தமான விஷயங்களை மட்டும் பேசுவது நல்லது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் புதுமையாக சிந்தித்து, திறமையாக செயல்படுவர். உங்களைத் தவறாகப் புரிந்துகொண்ட சகோதரர்களும் உறவினர்களும் உங்களைப் புரிந்து கொண்டு அன்பு பாராட்டுவார்கள். ஒரு சிலருக்கு கோவிலுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.
கடகம்
இந்த வாரம் திடீர் பயணங்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். குடும்ப உறவுகளோடு எந்தவித வாக்குவாதத்திலும் ஈடுபடாமல் அமைதியாக செல்ல வேண்டும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து அவரது ஆதரவை பெற வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நண்பர்களோடு புதிய இடங்களுக்கு செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதிர்பார்த்த நல்ல செய்தி இந்த வாரம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகள் தங்கள் பணிகளில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
சிம்மம்
இந்த வாரம் உடன் பிறந்த சகோதர சகோதரிகளால் லாபம் அடைவார்கள். வாழ்க்கைத் துணையுடன் சுமுகமான உறவு நீடிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை கவனமாக செய்து வர வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நண்பர்களோடு மகிழ்ச்சியாக இருக்கும் அளவுக்கு பாடங்களில் அதே கவனம் செலுத்த வேண்டும். வண்டி வாகனங்களில் நிதானமாக செல்வது அவசியம். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நீதிமன்ற வழக்குகள் சாதகமாக முடியும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் ஏற்படும்.
கன்னி
இந்த வாரம் புதிய தொடர்புகள் மூலம் பல சிக்கல்கள் அகலும். குடும்ப பொருளாதார நிலை முடக்கமாக இருந்தாலும் தகுந்த நேரத்தில் உதவி கிடைக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும். பள்ளி கல்லூரி மாணவர்கள் கூடுதல் கவனத்தோடு பாடங்களை படிக்க வேண்டும். வேறு வேலைக்கு அல்லது வேறு இடத்துக்கு மாற நினைப்பர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். சாதகமாக முடியும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை.
துலாம்
இந்த வாரம் எதிர்கால நலன்களுக்கான திட்டங்களை தீட்டி செயல்படுத்துவர். குடும்ப பொருளாதாரம் நிலை மேம்படும். ஒரு சிலர் வேறு வீட்டிற்கு குடியேறுவார்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பை பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நண்பர் வீட்டு விசேஷங்களில் கலந்துகொண்டு உற்சாகமாக இருப்பார்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உடல் நலம் சீராகும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். நீண்டகாலமாக தொடர்பில் இல்லாமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.
விருச்சிகம்
இந்த வாரம் எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான நிலை நிலவும். உத்தியோகஸ்தர்கள் புதிய பொறுப்புகளை ஏற்று திறமையாக செயல்படுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்கள் எதிர்காலம் குறித்து திட்டமிட வேண்டிய காலகட்டம் இது. கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு கருத்துவேறுபாடுகள் வரக்கூடும் என்பதால், ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளால் செலவுகள் அதிகரிக்கும். சிலருக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. சக ஊழியர்களால் தேவையற்ற பிரச்னைகள் உண்டாககூடும்.
தனுசு
இந்த வாரம் மனதில் குதூகலமும், மகிழ்ச்சியும் ஏற்படும். குடும்பத்தில் பல்வேறு சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த அங்கீகாரம் பெறுவர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவர். கடன் கொடுப்பதையும் கடன் வாங்குவதையும் இந்த வாரம் தவிர்க்கவும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு இந்த வாரம் சில சலுகைகள் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். திருமணத்துக்கு வரன் தேடும் முயற்சிகளில் பொறுமை அவசியம்.
மகரம்
இந்த வாரம் புதிய செய்திகள் வந்து சேரும். வாழ்க்கைத் துணையுடன் இனிமையான அன்னியோன்யம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் புதிய மாற்றங்களை சந்தித்து செயல்பட வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தனித்திறமைகளை வெளிக்காட்டி பாராட்டு பெறுவார்கள். திருமண வயதில் உள்ளவர்கள் வரன் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். நல்ல வரன் அமைவதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உடனே சரியாகிவிடும். அலுவலகத்தில் இதுவரை இருந்த பணி நெருக்கடி இப்போது சற்று குறையும். அதனால் மனதில் உற்சாகம் ஏற்படும்.
கும்பம்
இந்த வாரம் திடீர் தன வரவு ஏற்படும். குடும்பத்தில் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் அகன்று இனிமையான சூழ்நிலை உருவாகும். உத்தியோகஸ்தர்கள் மனதிற்கு இனிய சூழலில் பணியாற்றுவர். மற்றவர்களுக்கு நீங்கள் கடன் கொடுத்திருந்தால் இந்த வாரம் திரும்பக் கிடைக்கும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் வேடிக்கை விளையாட்டுகளில் இருந்து விலகி பாடத்தில் கவனம் செலுத்த வேண்டும். வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடலாம். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான சூழ்நிலையே காணப்படுகிறது.
மீனம்
இந்த வாரம் பல்வேறு சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வர். குடும்பத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த நல்ல விஷயங்கள் நடந்தேறும். உத்தியோகஸ்தர்கள் வேறு பணி வாய்ப்பு குறித்த தகவலை பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களது ஆசிகளை பெறுவது வெற்றிக்கு வழிவகுக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பிள்ளை அல்லது பெண்ணின் திருமண விஷயத்தில் இந்த வாரம் ஈடுபடவேண்டாம். வாரத்தின் பிற்பகுதியில் கணவன் – மனைவிக்கிடையே சிறிய அளவில் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் சிக்கல்களைத் தவிர்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : 2025 சனி பெயர்ச்சியால் சிறப்பான வாழ்க்கையை பெறப்போகும் ராசிக்காரர்கள்!!