Advertisement
சைவம்

காரசாரமான சுவையில் மசாலா இட்லி செய்வது எப்ப்டி ?

Advertisement

காலை உணவுக்கு உகந்த உணவு என வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களை வியந்து சொன்ன உணவு தான் இட்லி. நமது வாழ்வில் பாரம்பரிய உணவுகளில் இட்லியும் ஒன்றாக பல ஆண்டுகளாக உணவுகளில் இருந்து வருகிறது. பெரும்பாலும் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும் அதிகபட்ச உணவு பொருள் என்றால் அது இட்லி தான் இருந்தாலும். இட்லி போன்ற உணவுகள் நம் உடலில் எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகள் அதனால் நமது ஆரோக்கியமும் மேம்படும்.

இதையும் படியுங்கள் : மொறு மொறுனு ரவா தோசை செய்வது எப்படி ?

Advertisement

ஏனென்றால் அனைவருக்கும் பிடித்த உணவாக இட்லி இருக்கும் இட்லியை வெறுப்பவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள் இருந்தாலும் ஒரு மாறுதலுக்காக புது விதமாக சுவையான இட்லி செய்து சாப்பிடலாம். ஆம், இன்று மசாலா இட்லி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். காலை, மாலை நேரங்களில் இந்த இட்லியை செய்து சாப்பிடலாம் அட்டகாசமான சுவையில் இருக்கும். மேலும் இந்தை சுவையான மசாலா இட்லி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

மசாலா இட்லி | Masala Idli Recipe in Tamil

Print Recipe
அனைவருக்கும் பிடித்த உணவாக இட்லி இருக்கும் இட்லியை வெறுப்பவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள் இருந்தாலும் ஒரு மாறுதலுக்காக புது விதமாக சுவையான இட்லி செய்து சாப்பிடலாம். ஆம், இன்று மசாலா இட்லி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். காலை, மாலை நேரங்களில் இந்த இட்லியை செய்து சாப்பிடலாம் அட்டகாசமான சுவையில் இருக்கும். மேலும் இந்தை சுவையான மசாலா இட்லி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Course Breakfast
Cuisine Indian, TAMIL
Keyword idli, இட்லி
Prep Time 20 minutes
Advertisement
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Servings 2 people
Calories 80

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்
  • 1 பவுள்

Ingredients

  • 9  இட்லி
  • 2 tbsp எண்ணெய்
  • 1 tbsp கடுகு
  • ½ tbsp உளுந்த பருப்பு
  • 7 பல் பூண்டு பொடியாக நறுக்கியது
  • 2 கொத்து கருவேப்பிலை
  • 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 3 பச்சை மிளகாய்
  • 2 தக்காளி நறுக்கிய
  • 1 tbsp உப்பு
  • ½ tbsp மிளகாய் தூள்
  • ½ tbsp சீரகப் தூள்
  • ¼ tbsp கரம் மசாலா
  • 2 tbsp தக்காளி கெட்சப்
  • 1 கைப்பிடி கொத்தமல்லி

Instructions

  • முதலில் நாம் எடுத்துக் கொண்ட ஒன்பது இட்லிகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி ஒரு பெரிய பவுளில் எடுத்துக் கொள்ளுங்கள். அதன்
    Advertisement
    பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் அங்கு காய்ந்ததும் அதனுடன் கடுகு உளுந்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
  • கடுகு நன்றாக பாெரிந்து வந்ததும் இதனுடன் அரை டீஸ்பூன் சீரகம், 2 கொத்து கருவேப்பிலை, பொடியாக நறுக்கிய 7 பல் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள். பூண்டு நன்றாக வதங்கியதும் பின் பொடியாக நறுக்கியஒரு பெரிய வெங்காயம் மற்றும் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கி வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன். இதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும், பின் ஒரு டீஸ்பூன் அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும் தக்காளி மென்மையாக வெந்து மசிந்து வந்ததும்.
  • பின் இதனுடன் அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், அரை டீஸ்பூன் சீரகப்பொடி, கால் டீஸ்பூன் கரம் மசாலா சேர்த்து நான்கு கிளறி விட்டு வதக்கவும். மசாலா பொருட்கள் நன்றாக வதங்கியதும் இதனுடன் இரண்டு டீஸ்பூன் அளவு தக்காளி கெட்சப் ஊற்றி வதக்கி கொள்ளுங்கள்.
  • அனைத்து பொருட்களும் நன்றாக வதங்கியதும் நாம் சிறிய துண்டுகளாக வெட்டி வைத்திருக்கும் இட்லியை சேர்த்து அதன் மேல் ஒரு கைப்பிடி கொத்தமல்லியை தூவி விட்டு இட்லியில் மசாலா படும்படி நன்றாக கிளறி விடுங்கள்.
  • அதன் பின்பு தீயை அதிகப்படுத்தி இட்லி சூடாகுமாறு நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் சுட சுட மசாலா இட்லி இனிதே தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 2people | Calories: 80kcal | Carbohydrates: 60g | Saturated Fat: 2.3g | Fiber: 7.4g
Advertisement
Prem Kumar

Recent Posts

காரசாரமான ருசியில் சிக்கன் சப்பாத்தி ரோல் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! அட்டகாசமான ஸ்நாக்ஸ் ரெசிபியும் கூட!

எல்லாருக்குமே சிக்கன் என்றாலும் புடிக்கும் சப்பாத்தி என்றாலும் ரொம்ப பிடிக்கும். இப்படி சிக்கனையும் சப்பாத்தியும் தனித்தனியா சாப்பிட்டு கவலைப்படாம சிக்கன்…

44 நிமிடங்கள் ago

மே மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்

ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களுக்கும் ஒரு சில குணங்கள் இருக்கும். ஒரு சில நபர்களுக்கு அவர்களுடைய குணங்கள் ராசி நட்சத்திரத்தை பொருத்தும்…

1 மணி நேரம் ago

ஸ்நாக்ஸாக சாப்பிட கேழ்வரகு மாவு வைத்து ராகி மெது பக்கோடா இப்படி செய்து பாருங்க!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் என்றால் அது பக்கோடா தான். வெங்காயத்துடன் கடலை…

3 மணி நேரங்கள் ago

குழந்தைகளுக்கு புடிச்ச சூப்பரான சர்க்கரை வள்ளி கிழங்கு ரோஸ்ட் இப்படி ஒரு தடவை செஞ்சு கொடுத்து அசத்துங்க!

உங்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு பிடிக்குமா? அதை எப்போதும் வேக வைத்து மட்டும் தான் சாப்பிடுவீர்களா? சற்று வித்தியாசமாக சாப்பிட விரும்புகிறீர்களா?…

6 மணி நேரங்கள் ago

மணக்க மணக்க ருசியான தட்டை பயறு சாதம் இனி இப்படி செய்து கொடுங்கள்!

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பயிறு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. இந்த பயிறு வகைகளை சுண்டல் செய்து…

6 மணி நேரங்கள் ago

கருவாட்டு தொக்கு இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

ஒரு சிலருக்கு கருவாடு மீன் அப்படின்னு சொன்னாலே ரொம்ப பிடிக்கும். கருவாடு மீன் எல்லாமே விரும்பி சாப்பிடுறவங்களும் இருக்காங்க. ஒவ்வொருத்தரும்…

7 மணி நேரங்கள் ago