வார இறுதியில் மசாலா பிரான் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

சிக்கன், மட்டன் போல கடல் உணவுகளையும் விரும்பி உண்ணுபவர்கள் பலர் உள்ளனர். சொல்லப்போனால் மற்ற அசைவ உணவுகளை விட, கடல் உணவான மீனில் தான் பல உடல் நல ஆரோக்கியங்கள் அடங்கியுள்ளது. கடல் உணவுகளில் பெரும்பாலானவர்கள் விரும்பி உண்ணும் முக்கிய உணவு வகை இறால். இது மிகவும் சுவை மிகுந்த உணவாகும்

By ·

சிக்கன், மட்டன் போல கடல் உணவுகளையும் விரும்பி உண்ணுபவர்கள் பலர் உள்ளனர். சொல்லப்போனால் மற்ற அசைவ உணவுகளை விட, கடல் உணவான மீனில் தான் பல உடல் நல ஆரோக்கியங்கள் அடங்கியுள்ளது. கடல் உணவுகளில் பெரும்பாலானவர்கள் விரும்பி உண்ணும் முக்கிய உணவு வகை இறால். இது மிகவும் சுவை மிகுந்த உணவாகும். ஆரோக்கியத்திலும் இறால் மற்ற கடல் உணவுகளுக்கு சளைத்ததில்ல்லை. உங்கள் வீட்டில் உள்ளோர் இறாலை விரும்பி சாப்பிடுவார்களா? ஆனால் எப்போதும் ஒரே மாதிரியான ரெசிபியை செய்து போர் அடித்து விட்டதா? கவலைப்பட வேண்டாம்.

இந்த வார இறுதியில் இறாலை வாங்கி வந்து, அதைக் கொண்டு மசாலா பிரான் செய்து கொடுங்கள். இந்த மசாலா பிரான் செய்வது மிகவும் சுலபம். மேலும் இந்த மசாலா பிரானை சாதம் மற்றும் சப்பாத்தியுடனும் சேர்த்து சாப்பிடலாம். ஒரு முறை இந்த மசாலா பிரானை ருசி பார்த்தவர்கள் அதனை கண்டிப்பாக அடிக்கடி உண்ண விரும்புவார்கள். வெறும் ருசி மட்டும் தானா என்றால், அது தான் இல்லை. உங்களுக்கு தெரியாத பல உடல்நல நன்மைகள் அதிலும் தான் அடங்கியுள்ளது. குறிப்பாக இறாலில் செலினியம் அதிகம் உள்ளது. இறாலில் அஸ்டக்ஸாந்தின் என்ற கரோடெனாய்ட் அதிக அளவில் அடங்கியுள்ளது.

இது ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாக விளங்குகிறது. இறால்களில் ஹெபாரின் என்ற பொருள் அடங்கியுள்ளதால், அவை மாஸ்குலர் டீ-ஜெனரேஷன் எனப்படும் கண் பார்வை சிதைவிலிருந்து காக்கும். இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள இறாலைக் கொண்டு சுவையான மசாலா பிரான் செய்து பாருங்கள். வழக்கமாக செய்கின்ற ரெசிபியை போல் செய்யாமல் இந்த வாரம் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள். அதன் பிறகு வீட்டில் உள்ள அனைவரும் இதனையே அடிக்கடி செய்து தருமாறு அன்பு கட்டளையிடுவார்கள். இப்போது சுவையான மசாலா பிரான் எப்படி செய்வதென்று பார்ப்போம்.

இதனையும் படியுங்கள் : இறால் கத்திரிக்காய் குழம்பு

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை