வார ராசிபலன் 27 ஏப்ரல் 2025 முதல் 03 மே 2025 வரை!!

மேஷம் இந்த வாரம் திட்டமிட்டு, சுறுசுறுப்பாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் நிகழ்ச்சிகள் நடைபெறும். பொருளாதாரம் உயர்ந்து மன நிம்மதி ஏற்படும். அரசு துறை உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடத்தில் பொறுப்புகள், அழுத்தம் அதிகரிக்கும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தேர்வுகளில் வெ

By ·

மேஷம்

இந்த வாரம் திட்டமிட்டு, சுறுசுறுப்பாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் நிகழ்ச்சிகள் நடைபெறும். பொருளாதாரம் உயர்ந்து மன நிம்மதி ஏற்படும். அரசு துறை உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடத்தில் பொறுப்புகள், அழுத்தம் அதிகரிக்கும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தேர்வுகளில் வெற்றியும், உதவித்தொகையும் கிடைக்க பெறுவார்கள்.தொழிலில் லாபம் வரும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு. குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடக்கும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு கௌரவம் கூடும். வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். சகோதரர்களால் சிக்கல்கள் வரலாம்.

ரிஷபம்

இந்த வாரம் கைகூடும். பெண்மணிகளுக்கு நன்மைகள் நிறைந்த வாரம். நீண்ட நாட்களாக இழுத்தடித்த காரியங்கள் நன்றாக நிறைவு பெறும். தனியார் உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். புதிய முயற்சிகள் கைகூடும். வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் நல்ல முன்னேற்றத்தை தரும். தொழில்நுட்பத் துறை, பத்திரிகை தொழில் முதலியவற்றில் உள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தேவையற்ற அலைச்சலும் பயணங்களும் உண்டு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் வம்புகள் சேரும் அதனால் கவனம் தேவை.

மிதுனம்

இந்த வாரம் பொருளாதார ரீதியான முன்னேற்றம் உண்டு. நடைபெற்ற பல விஷயங்களை நிறைவேற்றி மகிழ்வீர்கள். சுபகாரிய நிகழ்வுகளில் குடும்பத்துடன் பங்கேற்பீர்கள். தனியார் நிறுவன உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் பணி சார்ந்த விஷயங்களை மட்டுமே பேச வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வி மற்றும் விளையாட்டில் நற்பெயர் பெறுவார்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் தீரும். தொழிலில் இருந்த சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தீரும். உங்கள் பேச்சே உங்களுக்கு எதிரி ஆகிவிடும் என்பதால் கவனமாக இருங்கள்.

கடகம்

இந்த வாரம் தடைகளை கடந்து வெற்றி பெறுவார்கள். குடும்ப பொருளாதார நிலையை உயர்ந்து, பல புதிய பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் புதிய தொழில்நுட்பங்களில் பெறுவதற்கான வாய்ப்பு உருவாகும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். கடன்கள் குறையும். இந்த வாரம் பல திருப்பு முனைகளை அளிக்கும். வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். சரியான ஆலோசனைகளைப் பெற்று முடிவெடுங்கள். வெளிநாட்டு வேலைக்காக காத்திருப்போருக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.

சிம்மம்

இந்த வாரம் தடைபட்ட பல நல்ல விஷயங்கள் நடந்தேறும். குடும்ப பொருளாதாரத்தை பொறுத்தவரை மகிழ்ச்சி அதிகரிக்கும். உற்றார் உறவினர்களோடு கருத்து வேறுபாடு ஏற்படலாம். அரசு உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு பெறுவர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மேற்படிப்புக்கான வழிகாட்டுதல்களை தேடிச் செல்ல வேண்டும். ஏதோ ஒரு வகை உதவி உங்களுக்குத் தொல்லைகளிலிருந்து மீள உதவி செய்யும். குழப்பமான மனநிலையையால் முடிவெடுப்பதில் தாமம் ஏற்படும். கொடுக்கல் வாங்கல் பிரச்னைகள் அதிகரிக்கும்.

கன்னி

இந்த வாரம் நண்பர்கள் மூலம் நன்மைகள் ஏற்படும். நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சிகரமாக பல இடங்களுக்கும் மகிழ்ச்சியாக சென்று வருவீர்கள். தனியார் மற்றும் அரசு உத்தியோகஸ்தர்கள் தங்கள் பொறுப்புகளில் கவனமாக செயல்பட வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நண்பர்களோடு சுற்றுலா சென்று மகிழ்ச்சியாக இருப்பார்கள். வேலைவாய்ப்பு, தொழில், வணிகம் முதலியவற்றில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்க வாய்ப்புண்டு. வீட்டில் சுபநிகழ்வுகள் நடைபெறும். பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிய வாகனம் வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள்.

துலாம்

இந்த வாரம் நல்ல செய்திகள் காதுகளுக்கு வந்து சேரும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சுமூகமாக முடியும். பொருளாதார நிலை மேம்படும். பணப்பரிவர்த்தனை விஷயங்களில் கவனமாக செயல்பட வேண்டும். அரசாங்க உத்தியோகஸ்தர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த விஷயம் நடந்தேறும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் உற்சாகமாக பங்கு பெறுவார்கள். வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது மிகுந்த எச்சரிக்கை தேவை. பொருளாதாரச் சிரமங்கள் குறைந்து தன்னிறைவு ஏற்படும். கல்வி, வேலை சம்பந்தமாக அயல்நாடு செல்லும் வாய்ப்புண்டு.

விருச்சிகம்

இந்த வாரம் பழைய நண்பர்களை சந்தித்து பேசும் வாய்ப்பு ஏற்படும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விலகும். அரசு, தனியார் உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை கால காலத்திற்கு மிக சரியாக செய்து வருவது அவசியம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் எதிர்காலத்தில் பணி பெறுவது வாய்ப்பு குறித்த தகவல்கள் கிடைக்கப் பெறுவார்கள். தொழில் வணிக இடையூறுகள் அகலும். புதிய முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கை தேவை. தாயின் உடல்நிலையில் கவனம் தேவை.

தனுசு

இந்த வாரம் எதிர்பார்த்த பண வரவு உண்டு. குடும்ப சுபகாரியங்களை முன்னின்று நடத்தி மகிழ்வீர்கள். நண்பர்கள், உறவினர்கள் மூலம் நன்மை உண்டு. தனியார் உத்தியோகஸ்தர்கள் பணியிட மாற்றம், பதவி உயர்வு பெறுவார்கள். தாயின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் தெரியும். உடல் உபாதைகள் குறைய ஆரம்பிக்கும். சிலருக்கு உத்தியோக மாற்றம் இடமாற்றம் உண்டு. பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் நீங்கும். கணவன் மனைவி உறவுகளில் திடீர் தகராறுகள் ஏற்பட்டு சரியாகும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் புதிய விளையாட்டுகளை கற்றுக்கொள்வார்கள்.

மகரம்

இந்த வாரம் புதிய செய்திகளால் மனதில் நம்பிக்கை உருவாகும். உறவினர்களுடன் சுமுக உறவு நீடிக்கும். எதிர்பார்த்த பொருளாதாரம் வரவு உண்டு. அரசு உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் வழக்கத்தை விட கவனமாக செயல்பட வேண்டும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். சுப காரியத்தை முன் நின்று நடத்துவீர்கள். குடும்பத்தில் பிரச்னைகள் அகன்று அமைதி நிலவும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் உறவினர்களது ஆலோசனை மூலம் மேற்படிப்புக்கான வழிகாட்டுதல் கிடைக்க பெறுவார்கள். குழப்பமான சிந்தனையிலிருந்து நல்ல முடிவுக்கு வருவீர்கள்.

கும்பம்

இந்த வாரம் மகிழ்ச்சியான வாரம். குடும்ப பொருளாதார நிலை மேம்படும். குடும்பத்துடன் சுற்றுலா அல்லது உறவினர் வீடுகளுக்கு சென்று வருவீர்கள். தனியார் துறை உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் மதிப்பு பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு போட்டித் தேர்வுகளை எதிர் கொள்வதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வார்கள். குடும்ப வாழ்வில் சந்தோஷம் நிலவும். கலைஞர்களுக்கு நல் ஆதரவு கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புண்டு.

மீனம்

இந்த வாரம் பார்த்த விஷயங்கள் நல்லபடியாக நடக்கும். பொருளாதார வரவு நன்றாக இருக்கும். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். தனியார் துறை உத்தியோகஸ்தர்கள் பணிகளில் கவனமாக இருப்பது அவசியம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் கணினி மேற்படிப்பு குறித்து அறிந்து பயனடைவர். வேலை உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டு. கணவன் மனைவி உறவுகள் கருத்து வேறுபாடுகள் மறைந்து புதிய மகிழ்ச்சி பிறக்க வாய்ப்புண்டு. வாகனங்களில் செல்லும் பொழுது மிகுந்த கவனம் தேவை. இரவுப் பயணத்தை தவிர்க்கவும்.

இதனையும் படியுங்கள் : சனிப்பெயர்ச்சியில் எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய சில ராசிகள்!!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை