வார ராசிபலன் 04 மே 2025 முதல் 10 மே 2025 வரை!!

மேஷம் இந்த வாரம் உற்றார், உறவினர்களால் மனதில் உற்சாகம் ஏற்படும். பண வரவு நிம்மதி தரும். இல்லத்துணையை அனுசரித்து செல்லவும். தனியார் துறை மேலாளர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த நன்மைகளை பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நண்பர்களோடு உற்சாகமாக சுற்றுலா சென்று வருவார்கள்.தொழ

By ·

மேஷம்

இந்த வாரம் உற்றார், உறவினர்களால் மனதில் உற்சாகம் ஏற்படும். பண வரவு நிம்மதி தரும். இல்லத்துணையை அனுசரித்து செல்லவும். தனியார் துறை மேலாளர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த நன்மைகளை பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நண்பர்களோடு உற்சாகமாக சுற்றுலா சென்று வருவார்கள்.தொழில் வளம் சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பழைய கடன்கள் அடையும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடக்கும். வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். சகோதரர்களால் சிக்கல்கள் வரலாம். வீண் வம்புகள் சேரும் வாய்ப்புகள் உண்டு.

ரிஷபம்

இந்த வாரம் மனதில் புதிய நம்பிக்கைகள் ஏற்படும். குடும்ப பொருளாதாரம், சமூக மதிப்பு ஆகியவை மேம்படும். தனியார் துறை உத்தியோகஸ்தர்கள் புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வதற்கான சூழல் ஏற்படும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொழில்நுட்ப விஷயங்களை அறிந்து கொள்வர். மேலதிகாரிகள் ஒத்துழைப்பால் முன்னேற்றம் பெறுவீர்கள். வேலை மாற்றம் எதிர்பார்ப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்வதில் மனதில் உற்சாகம் பிறக்கும். கணவன் மனைவி உறவுகளும் ஏற்றத்தாழ்வுகள் வரலாம்.

மிதுனம்

இந்த வாரம் நல்ல செய்தி கிடைக்கப் பெறுவர். தாய் வழி உறவுகளால் ஆதாயம் உண்டு. பண வரவால் மனதிடம் ஏற்படும். தனியார் உத்தியோகஸ்தர்கள் பணி உயர்வு பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் உயர் கல்வி குறித்து முக்கியமான தகவல்கள் கிடைக்க பெறுவார்கள். தெய்வ பக்தியும் பெரியோர்கள் ஆசிர்வாதமும் உங்களுக்குத் துணைபுரியும். மிகுந்த எச்சரிக்கையோடு தொழிலாளர்களைக் கையாள வேண்டி இருக்கும். புதிய முதலீடுகள் இப்பொழுது வேண்டாம். கூட்டாளிகளால் பிரச்னை வரும். கணவன் மனைவி கருத்து வேற்றுமைகள் வரலாம். குழந்தைகளால் மனக் குழப்பங்கள் ஏற்படலாம்.

கடகம்

இந்த வாரம் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். செலவுகளுக்கு ஏற்ற வரவும் கைகளில் வந்து சேரும். அரசு துறை உத்தியோகஸ்தர்கள் திறமையாக செயல்பட்டு நிர்வாகத்தின் மதிப்பை பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் உயர் கல்விக்கான ஆலோசனை கிடைக்க பெறுவார்கள். வருமானம் சிறப்பாக இருக்கும் செலவுகள் குறையும். சுபகாரிய நிகழ்ச்சிகள் குடும்பத்தில் நிகழும். திருமணமான பெண்களுக்கு குழந்தை பாக்கியம் அமையும். ஆரோக்கியத்தில் நிச்சயம் கவனம் தேவை. மேலதிகாரிகள் அழுத்தத்தை கொடுப்பார்கள். பயணங்களும் அலைச்சல்களும் அதிகரிக்கும்.

சிம்மம்

இந்த வாரம் மனதில் உறுதி கொண்ட மனிதர்களாக உலா வருவார்கள். பொருளாதார நிலையில் நல்ல மாற்றம் உண்டு. உறவுகளிடையே மதிப்பு உயரும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் உயர் கல்வி கற்பதற்கான தகவல்களை அறிந்து கொள்ள வெளியூர் செல்வார்கள். தனியார் உத்தியோகஸ்தர்கள் அனைத்துப் பணிகளிலும் நேரடியாக களத்தில் இறங்கி செயல்பட வேண்டும். இந்த வாரம் பிரச்னைகள் வந்தாலும் எளிதாக நீங்கிவிடும். ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. சிலர் புதிய வாகனங்கள் வாங்குவார்கள். சில விஷயங்களை அனுபவ முதலீடுகளாகக் கருதி பொறுமையாக இருந்தால் காரியங்கள் சிதறாது.

கன்னி

இந்த வாரம் மகிழ்வுடன் இருப்பீர்கள். பொருளாதார சிக்கல்கள் விலகி, எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். வியாபாரிகள் எதிர்பார்த்த நன்மைகளை பெறுவர். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் தொடர்பால் நன்மை பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் விளையாட்டுகளில் திறமைகளை வெளிப்படுத்தி கல்வி நிறுவனங்களுக்கு புகழ் சேர்ப்பர். வருமானம் நன்றாக இருக்கும். பணப் பிரச்னை இருக்காது. குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உயர்கல்வி படிக்கிறவர்களுக்கு விரும்பிய துறை கிடைக்கும். தலை மற்றும் கண் தொல்லைகள் ஏற்பட்டு சிகிச்சை மேற்கொள்ள நேரலாம்.

துலாம்

இந்த வாரம் உறவுகள் நாடித்தேடி வரும். குடும்ப செலவுக்கேற்ற தக்க பண வரவு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தனியார் துறை உத்தியோகஸ்தர்கள் அலுவலக சிக்கல்களை சந்தித்து வெற்றி பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நண்பர்களுடன் சுற்றுலா சென்றாலும் கூட கல்வி குறித்த செய்திகளை தேடிச்சென்று தெரிந்து கொள்வார்கள். பெரியவர்களுடைய வழிகாட்டுதலும், ஆசிகளும் தெய்வ தரிசனமும் கிடைக்கும். இப்போதைக்கு எதிலும் தலையிடாமல் கவனமாக இருங்கள். குழந்தைகள் விஷயத்தில் கவனம் தேவை. பிறருக்கு உதவி என்று ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம்.

விருச்சிகம்

இந்த வாரம் வண்டி வாகன, ஆபரணச் சேர்க்கை உண்டு. நண்பர்களுடன் சுற்றுலா செல்வீர்கள். பொருளாதார நிலை உயரும். அரசு உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் மூலம் எதிர்பார்த்த ஆதாயங்களை பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் கணினி தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வர். பொருளாதார முன்னேற்றம் இருக்கும். பற்றாக்குறை இருக்காது. குடும்ப சூழ்நிலை சாதகமாக இருக்கும். இந்த வாரம் நீங்கள் எதிர்பாராத சில நன்மைகள் நடக்கலாம். ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். குறிப்பாக வாகனத்தில் செல்லும் பொழுது அதிக கவனத்தோடு செல்ல வேண்டும்.

தனுசு

இந்த வாரம் பொதுக் காரியங்களில் ஈடுபட்டு பெயர் பெறுவீர்கள். எதிர்பார்த்திருந்த பணவரவு கையில் வந்து சேரும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டும்‌. அரசு உத்தியோகஸ்தர்கள் புதிய மாற்றங்களை சந்திப்பார்கள். கல்லூரி மாணவர்கள் அரசாங்க போட்டித்தேர்வுகளில் பங்கு பெறுவார்கள். பொருளாதாரப் பற்றாக்குறை இருக்காது. கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தந்தை வழி உறவினர்களோடு கருத்து வேறுபாடு ஏற்படலாம். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

மகரம்

இந்த வாரம் புதிய தொடர்புகளை பெறுவார்கள். எதிர்பாரா செலவு உண்டு. பொது விஷயங்களில் ஈடுபடும் பொழுது நன்றாக சிந்தித்து செயல்பட வேண்டும். அரசு மற்றும் தனியார் உத்தியோகஸ்தர்கள் மனதில் நினைத்த ஆதாயங்களை பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களிடம் கலந்து ஆலோசனை செய்து எதிர்காலம் குறித்து தீர்மானிப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் தடங்கல்கள் விலகும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன் அமையும். எந்த விஷயமாக இருந்தாலும் சரியாக விசாரிக்காமல் நீங்களாகவே ஒரு முடிவுக்கு வந்துவிட வேண்டாம்.

கும்பம்

இந்த வாரம் எதிர்காலத்திற்கு தேவையான பல திட்டங்களை செயல்படுத்துவீர்கள். இல்லத்தரசிகள் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவர். அரசு உத்தியோகஸ்தர்கள் பணியிட சிக்கல்கள் விலகி நன்மை பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொழில்நுட்ப விஷயங்களை கற்பதில் ஆலோசனை பெற்று நடப்பார்கள். கடுமையான உழைப்பு இருந்தாலும் பலன் இருக்கும். புதிய உத்திகளைக் கையாண்டு பொருள்களை விற்பனை செய்வதில் லாபம் கிடைக்கும். பயணங்கள் நன்மை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

மீனம்

இந்த வாரம் தெய்வ வழிபாடுகளில் ஈடுபட்டு நிம்மதி பெறுவீர்கள். இல்லத்தரசிகளுக்கு பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். தனியார் உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகள் மூலம் பல நன்மைகள் கிடைக்கப் பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு போட்டித் தேர்வுகளை எழுத ஆலோசனை பெறுவர். மனக்கவலைகள் முழுமையாக நீங்கா விட்டாலும் சற்று குறையும். பணக் கவலைகள் இருக்காது. ஆடை ஆபரணச் சேர்க்கை இருக்கும். கணவன் மனைவி கருத்து ஒற்றுமை நீடிக்கும். வேலை செய்யும் இடத்தில் ஆத்திரப்பட வேண்டாம். பணிபுரிபவர்களிடம் அனுசரணையோடு நடந்து கொள்ள வேண்டும்.

இதனையும் படியுங்கள் : புதன் வக்ர பெயர்ச்சி 2025 மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கப் போகும் ராசிக்காரர்கள்!!

Recipes AMP · Quick view
View full