வார ராசிபலன் 25 மே 2025 முதல் 31 மே 2025 வரை!!
மேஷம் இந்த வாரம் எதிர்கால நலன்களுக்கான திட்டங்களை தீட்டி செயல்படுத்துவர். பதினொன்றாம் இடத்தில் உள்ள ராகு பல யோகங்களை தருவார்.உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பை பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் உறவினர் வீட்டு விசேஷங்களில் கலந்துகொண்டு உற்சாகமாக இருப்ப
மேஷம்
இந்த வாரம் எதிர்கால நலன்களுக்கான திட்டங்களை தீட்டி செயல்படுத்துவர். பதினொன்றாம் இடத்தில் உள்ள ராகு பல யோகங்களை தருவார்.உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பை பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் உறவினர் வீட்டு விசேஷங்களில் கலந்துகொண்டு உற்சாகமாக இருப்பார்கள். தொழில் முன்னேற்றம் அடையும். பொருளாதார நிலை உயரும். நவீன பொருட்கள் வாங்குவீர். பொன் பொருள் சேரும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்ப்பு விலகும். வழக்கு வெற்றியாகும். உடல்நிலை சீராகும். பிள்ளைகளின் வருங்காலத்தை எண்ணி அவ்வப்போது கவலைப்படுவீர்கள்.
ரிஷபம்
இந்த வாரம் எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவார்கள். குரு பல நன்மைகளை செய்வார்கள். உத்தியோகஸ்தர்கள் புதிய பொறுப்புகளை ஏற்று திறமையாக செயல்படுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்கள் எதிர்காலம் குறித்து திட்டமிட வேண்டிய காலகட்டம் இது. சகோதரங்களால் நிம்மதி இழப்பீர்கள். தாய்மாமன், அத்தை வழியில் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வேலையின் மீது அக்கறை உண்டாகும். நினைத்ததை உடனே செய்து முடிப்பீர்கள். பணியாளர்களுக்கு பொறுப்பு அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். தொழில் முன்னேற்றம் அடையும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். புதிய செயல்களில் கவனம் தேவை. யோசிக்காமல் எதிலும் ஈடுபட வேண்டாம்.
மிதுனம்
இந்த வாரம் மனதில் குதூகலமும், மகிழ்ச்சியும் ஏற்படும். பத்தாம் இடத்தில் உள்ள சனி உங்களை பிரபலப்படுத்துவார். அரசு உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த அங்கீகாரம் பெறுவர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவர். புதிய நம்பிக்கை உண்டாகும். இத்தனை நாளும் இருந்த நெருக்கடி விலகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். உடல்நிலை சீராகும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். பெரியோரின் ஆதரவும் கிடைக்கும். வாழ்க்கையில் புதிய பாதை தெரியும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கியவர்கள் ஏக்கம் தீரும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள்.
கடகம்
இந்த வாரம் புதிய செய்திகள் வந்து சேரும். அஷ்டம ராகு, தனஸ்தான கேது ஆகியோர் திட்டமிட்டு செலவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்கள். தனியார் உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் புதிய மாற்றங்களை சந்தித்து செயல்பட வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தனித்திறமைகளை வெளிக்காட்டி பாராட்டு பெறுவார்கள். திருமண வயதினருக்கு வரன் வரும். நெருக்கடி நீங்கும். உடல்நிலை சீராகும். வழக்கு முடிவிற்கு வரும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். இதுவரையில் இருந்த நெருக்கடி விலகும். உடல்நிலையில் ஏற்பட்ட பயம் போகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். சிலரின் சுயரூபத்தை அறிந்துக் கொண்டு வருத்தப்படுவீர்கள்.
சிம்மம்
இந்த வாரம் திடீர் தன வரவு ஏற்படும். லாப ஸ்தான குரு பல சிக்கல்களுக்கு கை கொடுத்து உதவுவார். அரசு உத்தியோகஸ்தர்கள் மனதிற்கு இனிய சூழலில் பணியாற்றுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் வேடிக்கை விளையாட்டுகளில் இருந்து விலகி பாடத்தில் கவனம் செலுத்த வேண்டும். சிலருக்கு உடல், மனநிலையில் மாற்றம் உண்டாகும். இழுபறியாக இருந்த வேலைகளை முடிவிற்கு வரும். செயல்களில் முன்னேற்றம் உண்டாகும். அரசு வழி வேலை லாபம் தரும். செல்வாக்கு உயரும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். கணவன்மனைவிக்குள் மனம் விட்டுப்பேசுவீர்கள். உங்கள் கடையை விரிவுப்படுத்தி அழகுப்படுத்துவீர்கள். பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள். உங்களுடைய புதுத் திட்டங்களை ஆதரிப்பார்கள்.
கன்னி
இந்த வாரம் பல்வேறு சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வர். பாக்கிய ஸ்தானத்தில் உள்ள ராசியதிபதி தக்க சமயத்தில் மரியாதையை காப்பாற்றி உதவுவார். தனியார் உத்தியோகஸ்தர்கள் வேறு பணி வாய்ப்பு குறித்த தகவலை பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்களது வழிகாட்டுதல்களை பெறுவது எதிர்கால வெற்றிக்கு வழிவகுக்கும். இதுவரை இருந்த நெருக்கடி விலகும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு ஏற்படும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். சிலருக்கு வழக்கமான வேலைகளிலும் கூடுதல் கவனம் தேவை. வேலைகளில் நிதானமும் வியாபாரத்தில் கவனமும் தேவை. வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.
துலாம்
இந்த வாரம் குடும்பத்திலும், சமூகத்திலும், மதிப்பு மரியாதை பெருகும். பாக்கிய ஸ்தான குரு மனதில் உற்சாகத்தை தருவார். அரசு உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத செலவுகள் உண்டு. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வெளிநாட்டு கல்வி மற்றும் பணி வாய்ப்பு குறித்த தகவல்களை பெறுவர். நினைத்த வேலை நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும். வாங்க நினைத்த இடத்தை வாங்குவீர்கள். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம் அடையும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. திருமண வயதினருக்கு வரன் வரும். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும்.
விருச்சிகம்
இந்த வாரம் தடைபட்ட பொருளாதாரம் வந்து சேரும். அரசு உத்தியோகஸ்தர்கள் பணி உயர்வை பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தேர்வுகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவர். வீண் செலவு குறையும். மனதிலும், குடும்பத்திலும் நிம்மதி உண்டாகும். சிலருக்கு உடல், மனம், தொழில், உத்தியோகம், வேலை என நெருக்கடிகள் ஏற்படும். ஒரு சிலருக்கு புதிய வீடு, வாகனம் சேரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். சிலருக்கு உத்யோகத்தில் சின்னச் சின்ன பாதிப்புகள் வரும். இடமாற்றங்கள் வரும். சிறுசிறு அவமானங்கள் வரக்கூடும். வேலைச்சுமையும் அதிகரிக்கும். அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளாதீர்கள்
தனுசு
இந்த வாரம் நீண்ட நாட்களாக திட்டமிட்ட விஷயங்களை நல்லவிதமாக செய்து முடிப்பார்கள். சப்தம ஸ்தான குரு பல நல்ல விஷயங்களை நடத்தி வைப்பார். தனியார் உத்தியோகஸ்தர்கள் பணியிடங்களில் பணி சம்பந்தமான விஷயங்களை மட்டும் பேசுவது நல்லது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போட்டித்தேர்வுகளில் திறமையாக செயல்படுவர். இதுவரை ஏற்பட்ட நெருக்கடி விலகும். பிறரால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். உங்கள் திறமை வெளிப்படும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தொழில் முன்னேற்றம் அடையும். ஒரு சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். நினைத்த வேலை நடக்கும். அரசுவழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். கேட்ட இடத்தில் இருந்து பணம் வரும். புதிய சொத்து சேரும். உடல்நிலை சீராகும்.
மகரம்
இந்த வாரம் திடீர் பயணங்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். சுக ஸ்தானத்தில் உள்ள சுக்கிரன் புதிய ஆடை ஆபரண சேர்க்கைக்கு வழிவகுப்பார். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து அவரது ஆதரவை பெற வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நண்பர்களோடு புதிய இடங்களுக்கு செல்லும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். இதுவரை இழுபறியாக இருந்த வேலை நடக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும். வரவு திருப்தி தரும். கடன் தொல்லை நீங்கும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். உங்களின் செல்வாக்கு உயரும். உங்கள் பேச்சுக்கு தனிமரியாதை கிடைக்கும்.
கும்பம்
இந்த வாரம் உடன் பிறந்த சகோதர சகோதரிகளால் லாபம் அடைவார்கள். பஞ்சம ஸ்தானத்தில் உள்ள குரு பல நன்மைகளை தந்தருள்வார். தனியார் உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் தகுந்த மதிப்பை பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நண்பர்களோடு வண்டி வாகனங்களில் நிதானமாக செல்வது அவசியம். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். கையில் பணம் புழங்கும். சிலருக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும் அதனால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு செயல்களில் நிதானம் தேவை. தந்தை உடல்நிலையில் கூடுதல் கவனம் அவசியம். ஒரு சிலருக்கு அவப்பெயர் ஏற்படும். எந்தவொரு தவறையும் இக்காலத்தில் செய்துவிட வேண்டாம். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப செயல் படுங்கள்.
மீனம்
இந்த வாரம் புதிய தொடர்புகள் மூலம் பல சிக்கல்கள் அகலும். தைரிய ஸ்தானத்தில் உள்ள சூரிய பகவான் காரிய வெற்றிகளை தருவார். தனியார் உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும். பள்ளி கல்லூரி மாணவர்கள் கூடுதல் கவனத்தோடு பாடங்களை படிக்க வேண்டும். வேலையில் இருந்த நெருக்கடி விலகும். ஒருசிலர் புதிய தொழில் தொடங்குவீர். வீண்செலவுகள் சுபச்செலவாக மாறும். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். வழக்கின் நிலை மாறும். செல்வாக்கு உயரும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள், அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். பாகப்பிரிவினை விஷயத்திலும் தடங்கல்கள் வந்து நீங்கும்.
இதனையும் படியுங்கள் : 12 ராசிக்காரர் செய்ய வேண்டிய பரிகாரம்