வார ராசிபலன் 10 மே 2026 முதல் 16 மே 2026 வரை!!
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக இந்த வாரம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும்.பணப்புழக்கம் சீராக இருந்தாலும் தேவையற்ற செலவுகள் கவலை தரும். திட்டமிட்டுச் செயல்படுவதன் மூலம் நிதி நெருக்கடியைத் தவிர்க்கலாம். குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையு
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக இந்த வாரம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும்.பணப்புழக்கம் சீராக இருந்தாலும் தேவையற்ற செலவுகள் கவலை தரும். திட்டமிட்டுச் செயல்படுவதன் மூலம் நிதி நெருக்கடியைத் தவிர்க்கலாம். குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை கூடினாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். தொழில் விஸ்தரிப்பு முயற்சி இப்போது வேண்டாம். குடும்பத்தில் சகோதர உறவுகளில் கவனம் தேவை கருத்து வேறுபாடுகள் வரலாம். நண்பர்களாலும் சில இடர்பாடுகள் உண்டு.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பண வரவு திருப்திகரமாக இருக்கும். தடைபட்டிருந்த தொகைகள் கைக்கு வந்து சேரும். ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து சேமிப்பிற்கு முக்கியத்துவம் கொடுங்கள். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பெற்றோர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய கிளைகள் தொடங்கும் எண்ணம் கைகூடும். திடீர் முடிவுகளை எடுக்க வேண்டாம். வெயிலில் அலைய வேண்டாம். சிலருக்கு திடீர் கோபம் மற்றும் அலைச்சல் உண்டாகும். உடல் நலனில் கவனம் செலுத்துங்கள். வண்டி வாகனங்களில் செல்லும்போது வேகம் தவிர்க்கவும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும் வாரமிது. நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் வந்து சேரும் என்பதால் விழிப்புணர்வு தேவை. குடும்பச் சூழல் அமைதியாக இருக்கும். தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பணப்பரிமாற்றத்தில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நலம். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். நண்பர்களின் ஆலோசனைகள் தக்க சமயத்தில் உதவும். சமூக வட்டத்தில் செல்வாக்கு உயரும். சிலருக்கு முன்கோபம் தலைதூக்கும். தேவையற்ற பிடிவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. உடல் சூடு சம்பந்தமான உபாதைகள் வரலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தடைபட்ட பண வரவு தானாகவே வந்து சேரும். அதே சமயம் வாகனப் பராமரிப்புச் செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு மனதிற்குப் பலம் சேர்க்கும். பிள்ளைகளின் சுப காரியங்கள் குறித்துப் பேசுவதற்கு இது தகுந்த மிகச்சிறந்த தருணம். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். தேவையற்ற மருத்துவச் செலவுகள் அல்லது பயணங்களால் அலைச்சல் ஏற்படலாம். அதிகப்படியான செலவுகள் வரலாம். உடல் சோர்வு அதிகரிக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வரவுக்கேற்ற செலவுகள் வந்து சேரும். பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். வீண் செலவுகளைக் குறைப்பது பொருளாதார மேன்மைக்கு வழிவகுக்கும். குடும்பப் பெரியவர்களின் ஆசி கிட்டும். சகோதர வழியில் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். நண்பர்களுடன் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தொழில் ரீதியாகப் புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். ஏற்றுமதி-இறக்குமதி வியாபாரத்தில் லாபம் கிட்டும். தாயாரின் உடல் நலத்திலும், வண்டி வாகன பயணங்களிலும் கூடுதல் கவனம் தேவை. தூக்கமின்மை ஏற்பட வாய்ப்புண்டு.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வரவுகள் திருப்திகரமாக இருந்தாலும் ஆடம்பரச் செலவுகள் கையை மீறிச் செல்லும். சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வீர்கள். திடீர் யோகங்கள் மூலம் பணப்புழக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிணக்குகள் தீரும். சமூகப் பணிகளில் ஈடுபடுவதன் மூலம் நற்பெயர் கிட்டும். நண்பர்களின் உதவி மனதிற்குத் தைரியம் தரும் வாரமாகும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருந்தாலும் நஷ்டம் ஏற்படாது. பிள்ளைகளின் பிடிவாதத்தால் கவலைகள் வரலாம். பூர்வீக சொத்து விஷயங்களில் அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிதிநிலை சீராக இருக்கும். வருமானத்திற்குப் புதிய வழிகள் பிறக்கும். வீண் அலைச்சலால் சில செலவுகள் ஏற்படலாம். பொருளாதார ரீதியாக இந்த வாரம் சாதகமான நற்பலன் தரும். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். இல்லத்தரசிகளுக்குப் புகுந்த வீட்டார் மூலம் ஆதரவு பெருகும். குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடுவது மகிழ்ச்சி தரும். தொழிலில் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழும். கூட்டு வியாபாரத்தில் லாபம் பெருகும். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் வரலாம் தந்தையோடு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பொறுமையுடன் செயல்படுவது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன் தொகை வந்து சேரும். தேவையில்லாத விவாதங்களைத் தவிர்ப்பது நிதி இழப்பைத் தடுக்கும். பழைய முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பெற்றோர் வழியில் சில நன்மைகள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு லாபத்தை ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. தாயாரின் உடல் நிலையில் கவனம் தேவை. வீடு அல்லது வாகன மாற்றங்கள் செய்யும் போது கூடுதல் கவனம் தேவை. தேவையற்ற மன உளைச்சல் அல்லது அலைச்சல் ஏற்படலாம். பிறர் மனநிலை அறியாது பேசாதீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொருளாதார நிலை உயரும். எதிர்பாராத பண வரவு உற்சாகத்தைத் தரும். அதே சமயம் குடும்ப விசேஷங்களுக்காகச் செலவு செய்ய நேரிடும். பூர்வீகச் சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். சகோதரர்களுடன் இருந்த விரிசல் சரியாகும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். சமூக விழாக்களில் பங்கேற்றுப் பெருமை அடைவீர்கள். உறவினர்களிடையே உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். சகோதர உறவுகளுடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்ப விஷயங்களில் பிடிப்பின்மை இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வரவுகள் சுமாராகவே இருக்கும். தேவையற்ற பயணங்களால் பண இழப்பு ஏற்படலாம். திட்டமிட்டுச் செலவு செய்வது நிதி நெருக்கடியைத் தவிர்க்கும். வராத கடன்களைத் திரும்பப் பெற எடுக்கும் முயற்சிகள் பலன் தரும். வேலையில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். உறவினர்களுடன் சுமுகமான உறவு நீடிக்கும். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கை கொடுக்கும். வியாபாரத்தில் கடின உழைப்பு தேவைப்படும். தேவையற்ற பேச்சினால் வாக்குவாதம் வளர்ந்து மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புண்டு. எடுத்த காரியத்தை முடிப்பதற்கு கடும் உழைப்பு தேவைப்படும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பண வரவு சீராக இருக்கும். ஆடம்பரச் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. பழைய பாக்கிகள் வசூலாகும். பூர்வீகச் சொத்துக்கள் மூலம் வரும் வருமானம் மகிழ்ச்சியைத் தரும். கடன் சுமைகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள். குடும்பச் சூழல் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனைகள் பயனுள்ளதாக அமையும். பிள்ளைகளின் சுப காரியங்கள் கைகூடும். நண்பர்கள் பலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் லாபம் குறையாது. சிலருக்கு சேமிப்பு குறையலாம். வாக்குவாதங்களில் சூடு வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வருமானம் அதிகரிக்கும் வாரமிது. தடைபட்டிருந்த பண வரவுகள் வந்து சேரும். பழைய கடன்களை அடைப்பீர்கள். வீண் விரயங்களைத் தவிர்ப்பதன் மூலம் சேமிப்பை உயர்த்த முடியும். குடும்பத்தில் குதூகலம் நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு பெருகும். சமூகத்தில் உங்கள் மீதான நற்பெயர் அதிகரிக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். உறவினர்களுடன் இருந்த கசப்புணர்வுகள் மாறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சிலர் வார்த்தைகளைக் கொட்டிவிட்டுப் பிறகு வருத்தப்பட நேரலாம். கண் தொடர்பான கோளாறுகள் ஏற்பட வாய்ப்புண்டு.
இதனையும் படியுங்கள் : மகாலட்சுமி ராஜயோகம் 2026