வார ராசிபலன் 17 மே 2026 முதல் 23 மே 2026 வரை!!

மேஷம் இந்த வாரம் உங்களுக்குப் பணப்புழக்கம் சீராக இருக்கும்.எதிர்பாராத வரவுகள் வந்தாலும் செலவுகளைத் திட்டமிட்டுச் செயல்படுவது அவசியம். பொருளாதார ரீதியாக மேன்மை உண்டாகும் யோகமான வாரமிது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பிள்ளைகளின் முன்னேற்றம் மனதிற்கு நிம்மதி தரும். தொழில

By ·

மேஷம் 

இந்த வாரம் உங்களுக்குப் பணப்புழக்கம் சீராக இருக்கும்.எதிர்பாராத வரவுகள் வந்தாலும் செலவுகளைத் திட்டமிட்டுச் செயல்படுவது அவசியம். பொருளாதார ரீதியாக மேன்மை உண்டாகும் யோகமான வாரமிது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பிள்ளைகளின் முன்னேற்றம் மனதிற்கு நிம்மதி தரும். தொழில் வியாபாரத்தில் புதிய போட்டிகளைச் சந்திப்பீர்கள். கடின உழைப்பால் லாபம் ஈட்டுவீர்கள். வெளிநாட்டுத் தொடர்பு கிடைக்கும். வேலை தொடர்பாக இருந்த தடைகள் விலகும். அலைச்சல்கள் அதிகரிக்கும். பேச்சில் கவனம் தேவை. அவ்வப்பொழுது மனதில் குழப்பங்கள் ஏற்படும். தந்தையோடு கருத்து வேறுபாடு ஏற்படலாம். 

ரிஷபம் 

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் செல்வாக்கு உயரும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். ஆடம்பரச் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. நிலுவையில் இருந்த பாக்கிகள் வசூலாகும். சேமிப்பு உயரும். இல்லத்தில் சுபச் செய்திகள் வந்து சேரும். பெற்றோரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். உறவினர்களின் வருகையினால் கலகலப்பான சூழல் உருவாகும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு லாபத்தைப் பெருக்குவீர்கள். குடும்பத்தில் திடீர் திடீரென்று பிரச்னை வரும். உடல்நிலையில் மிகுந்த கவனம் தேவை. பிடிவாதத்தால் சில நல்ல வாய்ப்புகளைத் தவறவிட நேரிடும். பிரயாணங்களில் கவனம் தேவை.

மிதுனம் 

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொருளாதார நிலை உயரும் என்றாலும் பயணங்களால் செலவுகள் ஏற்படலாம். சேமிப்பில் கவனம் செலுத்தினால் எதிர்காலத் திட்டங்கள் தடையின்றி நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் உண்டு. சமூக மதிப்பும் மரியாதையும் உயரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். கணவன் மனைவி உறவுகளில் கவனம் தேவை. சிலருக்கு திடீர் கோபம் மற்றும் அலைச்சல் உண்டாகும். உடல் நலனில் கவனம் செலுத்துங்கள். வாதப்பிரதிவாதங்களில் ஈடுபடவேண்டாம்.

கடகம் 

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வரவுக்கேற்ற செலவு இருக்கும். பழைய கடன்களை அடைக்க வழி பிறக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் எச்சரிக்கை தேவை. வார இறுதியில் நிதி நிலைமை சீராகும். குடும்பத்தில் அமைதி நிலவும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு மனதிற்குத் தெம்பளிக்கும். உறவினர்கள் மத்தியில் உங்களின் பேச்சுக்கு மதிப்பிருக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து முன்னேறுவீர்கள். வேலையில் மேலதிகாரிகளால் சிரமங்கள் உண்டு. அதிக பணிச் சுமையால் கஷ்டப்படுவீர்கள். இல்லறத்தில் எதிர்பாராத கருத்து வேறுபாடுகளையும் பிரச்னைகளையும் உண்டாக்கலாம். 

சிம்மம் 

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தடைப்பட்ட காரியங்கள் வேகம் பெறும். வரவுகள் திருப்தி தரும். நிதி மேலாண்மையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பழைய முதலீடுகளில் லாபம் கிடைக்கும். தந்தை வழி உறவுகளால் அனுகூலம் உண்டாகும். குடும்பப் பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்றுவீர்கள். அரசாங்க வழியில் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். சிலருக்கு புதிய வேலைவாய்ப்பு நல்ல சம்பளத்தில் கிடைக்கும். பொதுவெளியில் தேவையற்ற விஷயங்களைப் பேசி சிக்கல்களில் மாட்டிக் கொள்ள வேண்டாம். 

கன்னி 

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் நிறைந்த வாரம். பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பூர்வீக சொத்துகளால் லாபம் கிடைக்கும். கொடுத்த கடன்கள் வட்டியுடன் வந்து சேரும்.  குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண முயற்சிகள் கைகூடும். உறவினர்களுடனான பிணக்குகள் தீரும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகஸ்தர்களுக்குப் கூடுதல் பொறுப்புகள் வரலாம். பிள்ளைகள் விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை. எந்த புதிய முயற்சியை மேற்கொண்டாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வரவுக்கும் செலவுக்கும் சரியான நிலையே நீடிக்கும். சேமிப்பில் கை வைக்க வேண்டிய சூழல் வரலாம். வார இறுதியில் நிதி நிலை முன்னேற்றமடையும். குடும்பத்தில் சிறு குழப்பங்கள் வந்து நீங்கும். நண்பர்களின் ஆலோசனைகள் பிரச்சனைகளைத் தீர்க்க உதவும். தொழிலில் சுறுசுறுப்பு ஏற்படும். உத்தியோகஸ்தர் கவனமாகப் பணியாற்றவும். எதிரிகள் தொல்லை ஒழியும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். தனக்கு கீழே வேலை செய்பவர்களை அனுசரித்து வேலை வாங்கவும். சில நேரங்களில் உங்கள் வார்த்தையே உங்களுக்கு எதிராகக் கொண்டு போய் விட்டு விடும் அதனால் உங்கள் வார்த்தையில் கவனமாக இருக்கவும். 

விருச்சிகம் 

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எடுத்த காரியங்கள் தடையின்றி முடியும். பணப்புழக்கம் திருப்தி தரும். குடும்பத் தேவைகளை எளிதாக நிறைவேற்றுவீர்கள். பழைய கடன்கள் தீரும். இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்வீர்கள். அரசுத் துறையினருக்குப் பதவி உயர்வு கிடைக்கும். நண்பர்களுடன் இணைந்து புதிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். சகோதர சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாதத்தால் சிறு கவலைகள் வரலாம். பூர்வீகச் சொத்து விஷயங்களில் அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம். பிள்ளைகள் விஷயத்தில் தடைகளும் கருத்து வேறுபாடுகளும் வரலாம்.

தனுசு 

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உழைப்புக்கேற்ற பலன் தரும் வாரம். வரவு அதிகரித்தாலும் சுபச் செலவுகள் காத்திருக்கும். கடன் சுமை குறையும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். பெற்றோரின் ஆசி கிடைக்கும். உறவினர்களுடனான கருத்து வேறுபாடுகள் மறையும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். புதிய பொறுப்புகள் தேடி வரும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். கணவன் மனைவி உறவுகளில் மற்றும் நட்பு வட்டாரங்களில் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். குலதெய்வத்தை மறந்துவிட வேண்டாம்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி காணும் வாரமிது. பொருளாதார நிலை உயரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உழைப்பிற்கு ஏற்ற வெகுமதிகள் இப்பொழுது தடையின்றி வந்து சேரும். வாழ்க்கைத்துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் குறையும். பூர்வீக சொத்து வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்கு அனுகூலமான சூழல் நிலவும். தொழிலில் இப்போதைக்கு அகலக்கால் வைக்க வேண்டாம். குடும்ப உறவுகளில் சிறு சலசலப்புகள் ஏற்படும்.

கும்பம் 

கும்ப ராசிக்காரர்கள் நிதானமாக செயல்பட வேண்டிய வாரம். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் வரலாம். வீண் விரயங்களைத் தவிர்க்கத் திட்டமிடவும். உடல் உழைப்பு கூடும். பூர்வீக சொத்து வருமானம் உங்கள் கவலையைப் போக்கும். பிள்ளைகளின் எதிர்கால கவலைகள் நீங்கும். இல்லத்தில் மங்கள காரியங்கள் இனிதே நடைபெறும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். நிதானத்தோடு எந்த வேலையும் செய்தால் வெற்றி உண்டு. கொடுத்த கடன்கள் வசூலாகும். தொழில் பிரச்னைகள் தீரும். கோபத்தைக் குறைத்துக் கொள்ளவும் எதிலும் உணர்ச்சி வசப்பட வேண்டாம். யாரிடமும் தேவையற்ற பகையை வளர்த்துக் கொள்ள வேண்டாம்.

மீனம் 

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பணப்புழக்கம் சீராக இருக்கும். வெளிநாட்டுத் தொடர்புடைய காரியங்கள் சாதகமாக முடியும். வர்த்தக ரீதியான முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் சுமுகமான உறவு நீடிக்கும். வாழ்க்கைத்துணை வழி உறவுகளால் ஆதாயம் உண்டு. பிள்ளைகளின் வழி சுபச் செய்தி வரும். தொழிலில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரிக்கும். இதுவரை பூர்த்தியாகாமல் இருந்த சில விஷயங்கள் உடனடியாக பூர்த்தியாகும். சிலருக்கு திடீர் கோபமும் பதட்டமும் சில நேரங்களில் செய்யக்கூடாத வேலையை செய்ய வைத்து சிக்கலில் மாட்டி விடும் கவனமாக இருக்கவும்.

இதனையும் படியுங்கள் : சூரிய கிரகணம் 2026

Recipes AMP · Quick view
View full