பெயர்ச்சியாகும் புதன் பகவான் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்குமான பலன்கள் இதோ!

ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.

By ·

ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். மேலும் கிரகங்களில் புதன் குறுகிய காலத்தில் ராசியை மாற்றக்கூடியவர். புதன் மிதுனம் மற்றும் கன்னியை ஆளும் கிரகமாக கருதப்படுகிறது. அந்த வகையில் கிரகங்களின் இளவரசராக உள்ள புதன் டிசம்பர் 6 ஆம் தேதி, அதாவது இன்று இரவு 8:31 மணிக்கு விருச்சிக ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். டிசம்பர் 29 ஆம் தேதி காலை 7:23 மணி வரை அவர் அங்கேயே இருப்பார். அதன் பிறகு அவர் தனுசு ராசிக்குள் நுழைவார். புதன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். அதனால் எந்த ராசிக்காரர்கள் எப்படிபட்ட பலன்களை பெற போகிறார்கள் என்பது குறித்து இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம். 

மேஷம் 

இந்த நேரம் மேஷ ராசிக்காரர்களுக்கு சிந்தனை மற்றும் முடிவெடுக்கும் விஷயத்தில் மிக முக்கியமானதாக இருக்கும். விருச்சிகத்தில் புதன் பெயர்ச்சி வேலைவாய்ப்பு மற்றும் வணிகத்தில் புதிய வாய்ப்புகளைத் தரும். வேலை தேடிக்கொண்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பூர்வீக சொத்து சார்ந்த விஷயங்களில் சாதகமான முடியும். நிதி நிலையில் முன்னேற்றம் காணப்படும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். 

ரிஷபம் 

ரிஷப ராசிக்காரர்களுக்கு, புதன் பெயர்ச்சி அறிவுசார் திறன்கள் மற்றும் நிதி திட்டமிடலுக்கு பயனளிக்கும். புதிய வணிக முயற்சிகள் மூலம் பண ஆதாயங்கள் சாத்தியமாகும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். வழக்குகளில் எந்த சிக்கல்களும் இல்லாமல் இருக்கும். உங்கள் மனைவியுடனான உறவு மேம்படும். நீண்ட நாட்களாக தடைபட்டு நின்ற வேலைகள் முடிவடையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

மிதுனம் 

புதன் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களின் ஆற்றலை அதிகரிக்கும். பேச்சாற்றல் மற்றும் எழுத்தாற்றலால் நன்மை உண்டாகும். முதலீடுகள் மற்றும் கூட்டாண்மைகள் குறித்து முடிவுகளை எடுக்கும் போது கவனம் தேவை. நண்பர்கள் உங்களை ஆதரிப்பார்கள். எதிரிகள் உங்களை விட்டு விலகி இருப்பார்கள். சமூகத்தில் உயரிய அந்தஸ்த்து கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். 

கடகம் 

கடக ராசிக்காரர்களுக்கு, புதன் பெயர்ச்சி சமமான மன சமநிலை மற்றும் சிந்தனைக்கு பயனளிக்கும். அனைத்து வேலைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். திட்டங்கள் வெற்றி பெறும். அலுவலக பணிகளில் பாராட்டு கிடைக்கும். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்லுறவைப் பேணுங்கள். வீட்டில் உள்ள பெரியவர்களின் உடல் நலனில் முன்னேற்றம் காண்பீர்கள். குடும்பத்தினரோடு நல்ல நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். 

சிம்மம் 

சிம்ம ராசிக்காரர்களுக்கு, புதனின் செல்வாக்கு வேலை மற்றும் வணிகத்தில் சாதகமாக இருக்கும். வணிகம் மற்றும் தொழிலில் புதிய உச்சங்களைத் தொடுவீர்கள். நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும். புதிய திட்டங்கள் மற்றும் பிராஜெக்டுகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கடின உழைப்பின் முழுமையான பலன் கிடைக்கும். உடல் ஆரொக்கியம் நன்றாக இருக்கும். குழந்தைகள் வழியே ஒரு நல்ல செய்தியும் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். 

கன்னி 

கன்னி ராசிக்காரர்களுக்கு, புதன் பெயர்ச்சி நல்ல பலன்களைத் தரும். வேலை மற்றும் வணிகத்தில் ஏற்றம் இருக்கும். விருச்சிகத்தில் புதன் பெயர்ச்சி கல்வி, பயிற்சி மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றில் வெற்றியைத் தரும். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்ப உறவுகளின் ஆதரவு கிடைக்கும், வாழ்க்கை சிறப்பாக மாறும். பதவி உயர்வு அல்லது கூடுதல் வருமானத்திற்கான ஆதாரங்கள் உருவாகும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதையாதை அதிகரிக்கும்.

துலாம் 

துலாம் ராசிக்காரர்களுக்கு, இது எச்சரிக்கையாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம். புதன் பெயர்ச்சி நிதி ஆதாயத்தையும் வேலையில் வெற்றியையும் தரும். இந்த நேரத்தில், வாழ்வில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும். கூட்டாக தொழில் செய்து வருபவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான ஆர்வம் கூடும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.  

விருச்சிகம் 

விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி அதிக நன்மை பயக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் திட்டங்கள் வெற்றிகரமாக இருக்கும். மன ஆற்றல் அதிகரிக்கும். உங்கள் தொழிலில் லாபம் அதிகரிக்கும். தொழிலில் இதுவரை சந்தித்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அலுவலக பணி மேற்கொண்டு வரும் நபர்களுக்கும் சிறப்பான ஒரு அனுபவத்தை இது அளிக்கும்.

தனுசு 

தனுசு ராசிக்காரர்களுக்கு, புதன் பெயர்ச்சி நிதி ஆதாயங்களையும் வேலையில் வெற்றியையும் தரும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றியைப் பெறுவீர்கள். கல்வி, வணிகம் மற்றும் முதலீடுகளுக்கு இது நல்ல நேரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். சமூகத்தில் புகழும் மரியாதையும் அதிகரிக்கும். உங்கள் காதல் துணையின் ஆதரவுடன் வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்லும். கடன் சிக்கல்களால் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். 

மகரம் 

மகர ராசிக்காரர்களுக்கு, வேலைகள், வணிகம் மற்றும் கல்வியில் புதனின் செல்வாக்கு நன்மை பயக்கும். புதன் பெயர்ச்சி சமூக நடவடிக்கைகளில் நன்மைகளைத் தரும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உங்கள் நிதி நிலைமை நன்றாக இருக்கும். பங்குச்சந்தை முதலீடுகளில் நீங்கள் எடுக்கும் முக்கியமான முடிவுகள், நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை கொண்டு வரும். சமூகத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். 

கும்பம் 

கும்ப ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி அறிவுசார் திறன்கள் மற்றும் திட்டமிடல் அடிப்படையில் நன்மை பயக்கும். நிதித் திட்டங்கள் மேம்படும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். தந்தையுடனான உறவு நன்றாக இருக்கும். உங்கள் வாழ்க்கை மேம்படும். வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். தொழில் வாழ்க்கையிலும் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழும். தொழில் வாழ்க்கையில் காணப்பட்ட போட்டிகள் குறையும். உங்களுடைய பேச்சுத் திறமையால் கடினமான வேலைகளையும் சிறப்பாக முடிப்பீர்கள்.

மீனம் 

மீன ராசிக்காரர்களுக்கு, தகவல் தொடர்பு, கல்வி மற்றும் வணிகத்தில் புதனின் செல்வாக்கு சாதகமாக இருக்கும். புதனின் பெயர்ச்சி முதலீடுகளில் புதிய வாய்ப்புகளையும் நன்மைகளையும் தரும். கடின உழைப்பின் பலன் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். வருமானம் அதிகரிப்பதால் அதிக லாபத்தை அனுபவிப்பீர்கள். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் புரிதல் அதிகரிக்கும். புதியவர்களின் அறிமுகம், பெரிய ஒப்பந்தங்களை கொண்டு வரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

இதனையும் படியுங்கள் : 2026 ராகு கேது பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்

Recipes AMP · Quick view
View full