சிறிது மிளகு இருந்தால் போதும் கடன் பிரச்சனையும், பணப்பிரச்சனையும் கரைந்து பணம் சேரும்!

ஒரு மனிதன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் அவனுக்கு பணம் மட்டும் முக்கியமில்லை சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தும் தேவை. அதுமட்டுமில்லாமல் கடன் இல்லாமல் பணம் அதிகரித்து செல்வந்தராய் வாழ வேண்டும். இவை இருந்தாலே போதும் ஒரு மனிதன் நிம்மதியான வாழ்வை வாழ ஆரம்பித்து விடுவான். அப்படியான

By Prem Kumar · 26/8/2024

ஒரு மனிதன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் அவனுக்கு பணம் மட்டும் முக்கியமில்லை சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தும் தேவை. அதுமட்டுமில்லாமல் கடன் இல்லாமல் பணம் அதிகரித்து செல்வந்தராய் வாழ வேண்டும். இவை இருந்தாலே போதும் ஒரு மனிதன் நிம்மதியான வாழ்வை வாழ ஆரம்பித்து விடுவான். அப்படியான ஒரு வாழ்க்கை வாழ்வதற்கான எளிய பரிகார முறையை பற்றி தான் இப்பொழுது இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

முதலில் இந்த பரிகாரத்தை எந்தெந்த செயலுக்காக செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம். ஒருவர் எங்கு சென்றாலும் அவருக்கு அவமானங்களை ஏற்படுகிறது. யாரும் அவரை மதிக்கவில்லை சமூகத்தில் தனக்கான அந்தஸ்து கிடைக்கவில்லை என நினைப்பவர்கள், எதைத் தொட்டாலும் தோல்வியில் முடிகிறது என நினைப்பவர்கள், அடுத்து வாழ்க்கையில் எப்பொழுதும் விரக்தி அடைந்து எதிர்மறையாகவே சிந்தித்து கொண்டு இருப்பவர்களும் இதை செய்யலாம்.

இத்துடன் பணத்தை சம்பாதித்து அதனை வீண்விரயம் செய்பவர்களும் இப்பரிகாரத்தை செய்யலாம். சில வீண்விரயம் செய்ததற்கு பின்னால் ஏன் இதனை செய்தோம் என்று வருந்துவார்கள். அதற்கும் சில தடைகள் தான் காரணம், இது போன்ற தடைகள் நீங்கி பணம் சேமிக்க விரும்புபவர்கள் கூட இந்த பரிகாரத்தை செய்யலாம்.

பண விரயத்தை தடுத்து பண வரவு தாராளமாக பரிகாரம்

இந்த பரிகாரத்தை செய்வதற்கு மஞ்சள் துணி ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு கைப்பிடி அளவு கருமிளகு மற்றும் குண்டு மஞ்சள், தர்ப்பை இரண்டையும் பொடியாக நறுக்கி மஞ்சள் துணியில் வைத்து மூட்டையாக கட்டிக் கொள்ளுங்கள். பின் இதனை பூஜை அறையில் வைத்து தீபாரதனை காட்டிக் கொள்ளுங்கள்.

இதில் இருக்கும் மஞ்சள் மங்களகரத்தை குறிக்கும். இது இருக்கும் இடம் எப்பொழுதும் மங்களகரமாக, சுபிட்சமாக இருக்கும் மற்றும் மிளகு சிவனின் கண்களை குறிக்கும். தர்ப்பையானது அனைத்து தீய சக்திகளையும் தன்னுள் கிரகித்து நல்ல ஆற்றலை வெளிப்படுத்தும்.

அதன் பிறகு இந்த பரிகார மூட்டையை உங்களின் தேவையை பொறுத்து அது போல பயன்படுத்திக் கொள்ளுங்கள். பணம் பெருக வேண்டும் வீண்விரையம் ஆக கூடாது என நினைப்பவர்கள் பணம் வைக்கும் இடத்தில் இதை வைத்துக் கொள்ளலாம். இதை வீடு வியாபார ஸ்தலம் என எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம்.

தொழில் காரணமாக வெளியே செல்லும் போது

நல்ல முறையில் என் சிந்தனைகள் இருக்க வேண்டும், எல்லோரும் என்னை பாராட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த மூட்டையை உங்கள் கைகளில் வைத்துக் கொள்ளும்படி பார்த்துக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் வியாபாரம் மற்றும் தொழில் காரணமாக வெளியே செல்பவர்களும் செல்லும் காரியம் வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்று நினைத்தால் இந்த மூட்டையை உங்களுடனே எடுத்துச் செல்லலாம்.

இதனை விட இந்த மூட்டையை பூஜை அறையில் வைக்கும் பொழுது நமது வீட்டில் ஏற்படும் வீண் விரயங்களை இந்த மூட்டை தடுத்து பணவரவை அதிகரித்துக் கொடுக்கும். இந்த பதிவின் மேல் நம்பிக்கை இருப்பவர்கள் இதனை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Recipes AMP · Quick view
View full