Advertisement
சைவம்

காரசாரமான மொச்சை கார குழம்பு செய்வது எப்படி ?

Advertisement

மொச்சை வைத்து ஒரு காரசாரமான கார குழம்பு செய்து சுட சுட சாதத்தில் ஊற்றி சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். ஆனால் இந்த மொச்சை கார குழம்பை கிரமாத்து பகுதிகளில் வைப்பது போன்றே பக்குவமாக செய்து பார்க்க போகிறோம். இந்த குழம்பை இது போன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால்

இதையும் படியுங்கள் : சுவையான கத்தரிக்காய் கார குழம்பு செய்வது எப்படி ?

Advertisement

உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் ஒரு தட்டு சோறும் காலியாகும் அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும். அந்த வகையில் கிராமத்து சுவையில் எப்படி செய்யலாம் என்பதை கீழே செய்முறை விளக்கங்கள், தேவையான பொருட்கள் என்ன என்பதை கொடுத்துளோம் படித்துப் பார்த்து நீங்களும் ஒரு முறை செய்து பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும்.

மொச்சை கார குழம்பு | Mochai Kara Kulambu Recipe in Tamil

Print Recipe
மொச்சை வைத்து ஒரு காரசாரமான கார குழம்பு செய்து சுட சுட சாதத்தில் ஊற்றி சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். ஆனால் இந்த மொச்சை கார குழம்பை கிரமாத்து பகுதிகளில் வைப்பது போன்றே பக்குவமாக செய்து பார்க்க போகிறோம். இந்த குழம்பை இது போன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் ஒரு தட்டு சோறும் காலியாகும் அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும்.
Course dinner, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Mochai Kulambu, மொச்சை குழம்பு
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Servings 4 People
Calories 217

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்
  • 1 கடாய்

Ingredients

மசாலா அரைக்க

  • 1 tsp தனியா
  • 1 tsp மிளகு
  • ½ tsp சோம்பு
  • 1 tsp எண்ணெய்
  • ¼ கப் துருவிய தேங்காய்
  • 4 பல் பூண்டு

குழம்பு செய்ய

  • 200 கிராம் மொச்சை வேக வைத்தது
  • 1 tbsp எண்ணெய்
  • ½ tsp கடுகு
  • 2 வர மிளகாய்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 4 பச்சை மிளகாய்
  • ¼ கிலோ சின்ன வெங்காயம் நறுக்கியது
  • 4 தக்காளி நறுக்கியது
  • 1 சிட்டிகை மஞ்சள் தூள்
  • ½  tbsp மிளகாய் தூள்
  • ½ கப் புளி கரைசல்
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் அதில் தனியா ஒரு டீஸ்பூன், மிளகு ஒரு டீஸ்பூன், மற்றும் அரை டீஸ்பூன் சேர்த்து வறுக்கவும்.
  • பின் பொருட்கள் நன்கு வறுப்பட்டு மணம் வரும் போது நான்கு பல் பூண்டு மற்றும் கால் கப் தேங்காய் துருவல்
    Advertisement
    சேர்த்து சிவக்க வறுத்து பின் கடாயை இறக்கி குளிர வைத்து பின் மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட் போல் அரைக்கவும்.
  • அதன் பின்பு மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணய் காய்ந்ததும் அரை டீஸ்பூன் கடுகு, ஒரு கொத்து கருவேப்பிலை மற்றும் இரண்டு வர மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
  • பின் இதனுடன் நான்கு கீறிய பச்சை மிளகாய், கால் கிலோ நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கி வந்தவுடன் நறுக்கிய தக்காளி துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின்பு தக்காளி நன்கு வெந்து மசிந்து வந்ததும் இதனுடன் நாம் கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசல், உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க வைத்து கொள்ளுங்கள்.
  • பின் இதனுடன் நாம் வேகவைத்த 200 கிராம் மொச்சையை சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். பின் கொதித்து வரும் போது நாம் அரைத்த மசாலாவை சேர்த்து, பச்சை வாசனை போக கொதிக்கவிட்டு இறக்கவும். அவ்வளவு தான் சுவையான மொச்சை குழம்பு தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 600gram | Calories: 217kcal | Carbohydrates: 45g | Protein: 32g | Fat: 3g | Saturated Fat: 0.5g | Cholesterol: 10mg | Sodium: 4mg | Potassium: 268mg | Fiber: 13g | Sugar: 2g | Vitamin A: 13IU | Calcium: 2mg | Iron: 2mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 04 மே 2024!

மேஷம் இன்று அதிகம் சாப்பிடாதீர்கள். பொருளாதாரப் பக்கம் வலுப்பெற வாய்ப்புள்ளது. இன்று வீடு பராமரிப்பு அல்லது மாற்றம் தொடர்பான திட்டங்களை…

1 மணி நேரம் ago

கிவி தர்பூசணி வாங்கி சூப்பரான கிவி தர்பூசணி மாக்டெயில் இப்படி செய்து கொடுத்து அசத்துங்கள்!

கோடைக்காலத்தில் அதிகமாக கிடைக்கும் பழங்களில் ஒன்று தர்பூசணி. ஆனால், நம்மில் பலர் தர்பூசணியை வெட்டியோ அல்லது ஜூஸ் செய்தோ குடிப்போம்.…

11 மணி நேரங்கள் ago

குருபகவான் மற்றும் சூரிய பகவானின் சேர்க்கை நடைபெறும் மே மாதத்திற்கான ராசி பலன்கள்

மே மாதத்தில் குரு பெயர்ச்சி பலன்கள் ஏற்கனவே பல ராசிகளுக்கு தாக்கம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது அந்த வகையில் மே மாதத்தில்…

13 மணி நேரங்கள் ago

ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு இந்த சூப்பரான இட்லி மாவு போண்டா செஞ்சு சாப்பிடுங்க!

மாலை நேரத்தில் எப்பவுமே டீ காபியோட ஏதாவது ஒரு ஸ்னாக்ஸ் சாப்பிட்டால் நல்லா இருக்கும் அப்படின்னு தோணும் ஆனா கடைகள்ல…

13 மணி நேரங்கள் ago

வெறும் 11 நாட்களில் நீங்கள் நினைத்த பணம் கிடைக்க இந்த 1 பொருளை இந்த இடத்தில் மட்டும் வையுங்கள்!

பணக்கஷ்டம் நீங்கி பணம் பலமடங்கு அதிகரிப்பதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். கஷ்டப்பட்டு…

15 மணி நேரங்கள் ago

ஒரு தடவை இந்த கேரட் சௌசௌ மசாலா குழம்பு செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

கேரட், தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் வடநாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலை அதிகரிப்பது முதல், செரிமானக் கோளாறுகளை…

19 மணி நேரங்கள் ago