2024 மொஹரம் பண்டிகை, இந்த புத்தாண்டின் முக்கியத்துவம்

இஸ்லாமியர்களின் தினங்களில் ஒன்றாக மொஹரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இது இஸ்லாமியர்களின் இரண்டாவது புனித நாளாக அனுசரிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாக இது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ரமலானைப் போலவே, மொஹரம் பண்டிகையும் சந்திரன் பார்க்கும் தேதியைப் பொறு

By ·

இஸ்லாமியர்களின் தினங்களில் ஒன்றாக மொஹரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இது இஸ்லாமியர்களின் இரண்டாவது புனித நாளாக அனுசரிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாக இது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ரமலானைப் போலவே, மொஹரம் பண்டிகையும் சந்திரன் பார்க்கும் தேதியைப் பொறுத்து கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த தினம் முஹர்ரம்-உல்-ஹரம் என்றும் அழைக்கப்படுகிறது. 354 அல்லது 355 நாட்களைக் கொண்ட ஹிஜ்ரி நாட்காட்டியின் படி முஹர்ரம் மொஹரம் ஆண்டின் முதல் மாதம் ஆகும். இஸ்லாமிய நம்பிக்கைகளின் படி, கடவுளின் தூதராகக் கருதப்பட்ட முஹம்மது நபி, முஹர்ரம் மாதத்தை ‘அல்லாஹ்வின் புனித மாதம்’ என்று அழைத்தார்.

மொஹரம் பண்டிகையின் வரலாறு

பொதுவாக இஸ்லாமியர்களில் இரண்டு வகை பிரிவினர் உள்ளனர், சன்னி முஸ்லிம்கள் மற்றும் ஷியா முஸ்லிம்கள். கிபி 180 ஆம் ஆண்டு ஆஷுரா நாளில் மகனும் முகமது நபியின் பேரனான ஹுசைன் இப்னு அலி கொல்லப்பட்ட தினத்தை மொஹரம் நாளாக கடைப்பிடித்து வருகின்றனர். அதன் காரணமாக இந்த மொஹரம் தினத்தில் ஷியா முஸ்லிம்கள் கொண்டாட்டங்களை தவிர்த்து விடுகின்றனர். இந்த பிரிவினருக்கு மொஹரம் நாள் துக்கம் மற்றும் பிரார்த்தனை சார்ந்த ஒரு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. எகிப்து அரசரை சன்னி பிரிவினர் வெற்றி கொண்ட நாளாக இந்த திருநாளை சன்னி முஸ்லீம் பிரிவினர் கொண்டாடி வருகின்றனர். மொஹரம் மாதத்தில் 10 நாட்கள் இஸ்லாமியர்கள் நோன்பு கடைப்பிடிக்கின்றனர். பாலைவனத்தில் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் ஹுசைன் தனி மரமாக விடப்பட்டார். பின்னர் எதிரிகளால் அவர் கொல்லப்பட்டார் அந்த நாளை குறிப்பிடும் விதமாக இஸ்லாமியர்கள் நோன்பு கடைப்பிடிக்கின்றனர்.

மொஹரம் கடைபிடிக்கப்படும் முறைகள்

இந்த புனித மாதத்தில் சண்டைகள், புனிதப் போர் புரிவதாற்கும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நாளில் நோன்பு இருப்பதால் வாழ்வு வளமையாகும். மொஹரம் மாதத்தின் 10ம் நாள் தியாகத் திருநாளாக கொண்டாடப்பட்டு வருகின்றது. சிலர் இந்த தியாகத் திருநாளில் ஆசுரா என்று கத்தியால் தங்களைத் தாங்களே அடித்துக் காயப்படுத்திக் கொண்டு இந்த தியாகத்திருநாள் தினத்தை கடைப்பிடிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் சில இஸ்லாமியர்கள் இந்த மாதத்தில் 9 மற்றும் 10ம் நாளிலும் அல்லது 10ம் நாள் மட்டும் உண்ணா நோன்பு இருப்பது வழக்கமாக வைத்துள்ளனர். இந்த நாளில், மக்கள் கருப்பு ஆடைகளை அணிந்து, பல்வேறு நகரங்களில் தாஜியா ஊர்வலங்களை நடத்துகிறார்கள். தஜியா இமாம் ஹுசைனின் கல்லறையின் சின்னமாக கருதப்படுகிறது.

மொகரம் 2024

சந்திர இஸ்லாமிய நாட்காட்டி அல்லது ஹிஜ்ரி நாட்காட்டி ஒரு வருடத்தில் 354 நாட்கள் மற்றும் 12 மாதங்கள் கொண்டது. தற்போது, இஸ்லாமிய நாட்காட்டியின் 12வது மற்றும் இறுதி மாதமானது அல்-ஹிஜ்ஜா நடந்து கொண்டிருக்கிறது. முஹர்ரம் மாதத்தின் சரியான தேதி சந்திரனைப் பார்த்த பிறகு தீர்மானிக்கப்படும். இருப்பினும், இஸ்லாமிய நாட்காட்டியின் படி, இந்த ஆண்டு மொஹரம் மாதம் ஜூலை 07ம் தேதி மொஹ்ரம் புனித மாதம் துவங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பத்தாவது நாளான ஜூலை 17ம் தேதி இந்த ஆண்டு மொஹரம் பண்டிகை அனுஷ்டிக்கப்பட உள்ளது.

மொஹரம் பண்டிகையின் முக்கியத்துவம்

மொஹரம் இஸ்லாமிய புத்தாண்டின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது புத்துணர்ச்சி மற்றும் ஆன்மீக பிரதிபலிப்பு நேரம். மொஹரம் என்ற வார்த்தையின் அர்த்தம் ‘அனுமதிக்கப்படாதது’ அல்லது ‘தடைசெய்யப்பட்டது’ என்பதால், முஸ்லிம்கள் போர் போன்ற நடவடிக்கைகளில் பங்கேற்பதைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக பிரார்த்தனை மற்றும் சுயபரிசோதனைக்கான நேரமாகப் பயன்படுத்துகின்றனர். முஸ்லிம்களைப் பொறுத்தவரை, கர்பலாவின் நிகழ்வுகள் மற்றும் இமாம் ஹுசைனின் தியாகம் மிகவும் முக்கியமானவை. இமாம் ஹுசைன் மற்றும் அவரது தோழர்களின் தியாகங்கள் ஒடுக்குமுறைக்கு எதிரான எதிர்ப்பின் அடையாளமாகவும், மரணத்தை எதிர்கொண்டாலும் நீதிக்காக நிற்கும் மதிப்பாகவும் கருதப்படுகிறது.

இதனையும் படியுங்கள் : குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாமல் தடை வருகிறதா? இப்போது இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை