மீளவே முடியாத கடனில் இருந்து கூட மீள வேண்டுமா ? இந்த ஒரே ஒரு வாழிபாடு மட்டும் செய்யுங்கள் போதும்!

இந்த உலகத்தில் கடன் வாங்காதவர்கள் என எவருமே இருக்க மாட்டார்கள் அனைவரும் ஏதாவது ஒரு நேரத்தில் யாரிடமாவது கடன் வாங்கும் அளவிற்கு சூழ்நிலைகள் உருவாகும் அந்த நேரத்தில் கடன் வாங்காதவர்கள் யாராக இருந்தாலும் கடன் வாங்கியே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டிருக்கும். ஒரு சிலர் அந்த கடனை திருப

By ·

இந்த உலகத்தில் கடன் வாங்காதவர்கள் என எவருமே இருக்க மாட்டார்கள் அனைவரும் ஏதாவது ஒரு நேரத்தில் யாரிடமாவது கடன் வாங்கும் அளவிற்கு சூழ்நிலைகள் உருவாகும் அந்த நேரத்தில் கடன் வாங்காதவர்கள் யாராக இருந்தாலும் கடன் வாங்கியே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டிருக்கும். ஒரு சிலர் அந்த கடனை திருப்பி அடைத்து விடுவார்கள் நேரம் காலம் சரி இல்லாதவர்கள் சிலர் அந்த கடனை அடைக்க முடியாதாமல் வாழ்க்கையில் படாத பாடுபடுவார்கள். அப்படி கடலளவு இருக்கும் கடணை கூட கரைப்பதற்கு பிரதோஷ வழிபாடு சிறந்தது. அதிலும் திங்கட்கிழமை செய்யும் பிரதோஷ வழிபாடு இன்னும் சிறப்பு வாய்ந்த ஒன்று. அதனால் இன்றைய ஆன்மீகம் குறித்த தொகுப்பில் கடலளவு கடனை கூட காணாமல் போக செய்யும் பிரதோஷ வழிபாடு குறித்து பார்க்கலாம் வாருங்கள்.

பிரதோஷ விரதம்

நாம் நம் கடன் அடைவதற்காக செய்யும் பிரதோஷ வழிபாடு செய்ய சோமவர பிரதோஷம் வரும் நாட்களில் காலையிலிருந்து பிரதோஷ விரதத்தை கடைபிடித்து வர வேண்டும். ஆனால் உடல்நிலை சரியில்லாதவர்கள், வயதானவர்கள் போன்றவர்கள் விரதத்தை மேற்கொள்ள முடியாதவர்கள் இந்த விரதத்தை மட்டும் தவித்துக் கொள்ளலாம். விரதம் இருப்பவர்கள் அன்றைய நாட்கள் முழுவதும் சாப்பிடாமல் விரதம் இருந்து மாலை நேரத்தில் சிவனுக்கு செய்ய வேண்டிய அபிஷேக பொருள்கள் வாங்கிக் கொண்டு உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று பிரதோஷ வழிபாட்டை செய்து சிவ பெருமானை மனதார வணங்க வேண்டும்.

சிவ ஸ்லோகம்

நாம் இப்படி பிரதோஷ நாட்களில் சிவபெருமானை வழிபடும் போது ஒரு ஸ்லோகத்தையும் சேர்த்து சொல்ல வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த ஸ்லோகத்தை நாம் பிரதோஷ வழிபாடு செய்யும்போது சொல்வதால் நமது வீட்டில் பண வரவு என்பது அதிகரித்து உங்களுக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சனை எல்லாம் காணாமல் போகும் என்று கூறப்படுகிறது. தரித்திர துக்க தகனம் சிவ ஸ்சோஸ்திரம் என்ற இந்த ஸ்லோகத்தை நீங்கள் பிரதோஷ வழிபாடு செய்யும் நாளில் காலை முதல் மாலை வரை நீங்கள் சும்மா இருக்கும் நேரங்களில் பூஜை அறையில் அமர்ந்து சொல்ல வேண்டும். அல்லது இந்த ஸ்லோகத்தை அமர்ந்து படித்துக் கொண்டு இருக்கலாம்.

27 திங்கள் கிழமை

இந்த வழிபாட்டுடன் நாம் சிவபெருமானை வேண்டி இந்த ஒரு ஸ்லோகத்தையும் சொல்ல வேண்டும் சாஸ்திரம் சொல்கிறது. இதை சொல்லும் இடத்தில் பண வரவு அதிகரித்து கடன் என்பதே இல்லாமல் போகும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் நீங்கள் பிரதோஷ நாட்களில் செய்யும் வழிபாட்டுடன் இந்த ஸ்லோகத்தையும் சேர்த்து சொல்லுங்கள் இந்த ஸ்லோகத்தின் பொருள் என்பது தரித்திரம், துக்கம் போன்றவை உங்களை விட்டு விலகு வைக்கும் சிவ மந்திரம் என்பதே இதனுடைய பொருள் ஆகும். அதனால் தொடர்ந்து 27 திங்கட்கிழமை பிரதோஷ வழிபாட்டுடன் இந்த ஸ்லோகத்தை சரியான முறையில் சொல்லி வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எத்தனை லட்சம் கடன் இருந்தாலும், எத்தனை கோடி கடன் இருந்தாலும் அந்த கடன் அடைவதற்கு சிவபெருமான் வழி காட்டுவார்.

கர்ம வினை

நாம் கடன் அடைவதற்காக மேற்கொள்ளும் இந்த பிரதோஷ வழிபாட்டை சரியாக செய்து விட்டாலே போதும். அதன் பலன் சற்று தாமதமாக கூட உங்களுக்கு கிடைக்கலாம். ஏனென்றால் நீங்கள் செய்த இந்த பரிகாரம் முதலில் உங்களுக்கு இருக்கக்கூடிய கர்ம வினைகளை எல்லாம் குறைத்து அதன் பிறகு நீங்கள் எதற்காக இந்த பரிகாரத்தை செய்தீர்களோ அதற்கான பலனையும் சேர்த்து கொடுக்கும் அதனால் நீங்கள் எப்பேர்பட்ட கர்ம வினை தாக்கத்தில் இருந்தாலும் கூட அதை அனைத்தையும் தவிடு பொடியாக்கி உங்கள் கடனை எளிதாக அடைத்து விடலாம்.

சிவ பெருமான் பாதங்கள்

அதனால் கடன் என்னும் துன்பத்தை சந்திக்கும் யாராக இருந்தாலும் சிவபெருமானின் பாதத்தில் சரணடைந்து அவரை நினைத்து மனம் உருகி இந்த சிவ ஸ்லோகத்தை சொல்பவர்களுக்கு அவர்கள் கடன் அடையும் மேலும் இந்த பிரதோஷ வழிபாடு செய்துவிட்டால் போதும் உங்கள் கடன் அடைந்து விடும் என்று சும்மா இருக்கவும் கூடாது உங்கள் கடன் அடைவதற்கு வேண்டிய முயற்சிகளை நீங்கள் செய்யும்போது அதனுடன் இந்த பரிகாரமும் சேர்ந்து உங்கள் கடன் அடைவதற்கு எல்லா விதமான நன்மைகளும் சேர்ந்து நடக்கும். நம்பிக்கையுடன் செய்து பாருங்கள் நல்ல பலனை கிடைக்கும்.

Recipes AMP · Quick view
View full