தரித்திரம் நீங்கி பணவரவை கொடுக்கும் வெற்றிலை பரிகாரம்
வீட்டில் இருக்கக்கூடிய அனைவரும் என்னதான் கடினமாக உழைத்துசம்பாதித்து பணத்தை சேர்த்தாலும் பணம் வீட்டில் தங்காமல் ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டே இருக்கும் அதனால் பணம் வீண் விரயமாகலாம். பண வரவு இல்லாமல் கையில் பணம் தாங்காமல் இருக்கும் மேலும் எங்கள் பார்க்கக் கூடிய வேலைகள் எந்த முன்
வீட்டில் இருக்கக்கூடிய அனைவரும் என்னதான் கடினமாக உழைத்து
சம்பாதித்து பணத்தை சேர்த்தாலும் பணம் வீட்டில் தங்காமல் ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டே இருக்கும் அதனால் பணம் வீண் விரயமாகலாம். பண வரவு இல்லாமல் கையில் பணம் தாங்காமல் இருக்கும் மேலும் எங்கள் பார்க்கக் கூடிய வேலைகள் எந்த முன்னேற்றமும் இல்லாமல் சம்பள உயர்வு இல்லாமல் மிகவும் கஷ்டமான சூழ்நிலை இருக்கும் நாம் என்னதான் அதற்கான முயற்சிகளை செய்தாலும் முழு பலன்களும் கிடைக்கவில்லை என்றால் அந்த நிலையை தான் தரித்திர நிலை என்று கூறுவார்கள் அதனை மாற்றி வீட்டில் லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்த வீட்டில் பண வரவை அதிகரிக்க வெற்றிலையை வைத்து செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
வெற்றிலை சிறப்புகள்
வெற்றிலை என்றாலே வெற்றிகளை தரக்கூடியது என்று தான் அர்த்தம் வெற்றிலையை வைத்து நிறைய தெய்வங்களுக்கு நாம் வழிபாடு செய்யலாம் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபட்டு வரலாம் முருகருக்கு வெற்றிலை தீபம் ஏற்றி வழிபட்டு வரலாம். எனவே வெற்றிலை வைத்து பல பரிகாரங்கள் செய்யப்படுகிறது நம் வீட்டில் வெற்றிலை இருந்தாலே லட்சுமி கடாட்சம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது அதற்கு காரணம் வெற்றிலையில் லட்சுமி குடியிருக்கிறாள் அதனால் தான் வெற்றிலை மிகவும் சிறப்பு வாய்ந்தது எப்பொழுதுமே தெய்வ வழிபாட்டில் வெற்றிலை பாக்கும் வாழைப்பழம் இவற்றையெல்லாம் வைத்து வழிபடுவது வழக்கம். மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த வெற்றிலையை வைத்து செய்யக்கூடிய எளிமையான பரிகாரத்தால் வீட்டில் உள்ள கஷ்டங்கள் நீங்கி பணவரவு அதிகரிக்கும்.
பண வரவை கொடுக்கும் வெற்றிலை பரிகாரம்
இந்த குறிப்பிட்ட பரிகாரத்தை செவ்வாய் மற்றும் வெள்ளியில் செய்வது மிகவும் சிறப்பு ஆனால் என்று வேண்டுமானாலும் இந்த பரிகாரத்தை நாம் செய்யலாம் தொடர்ச்சியாக 12 வாரங்கள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் இதற்கு நமக்கு 11 அல்லது 21 வெற்றிலைகள் தேவைப்படும் முதல் வாரத்தில் எத்தனை வெற்றிலைகளை வைத்து பரிகாரம் செய்கிறோமோ அதை தான் தொடர்ச்சியாக செய்ய வேண்டும். காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு சுத்தமான துணியை வைத்து வெற்றிலையை நன்கு துடைத்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும் அதன் பிறகு ஒரு தாம்பாள தட்டில் சுத்தம் செய்தால் வெற்றிலைகளை வைத்து பூஜை அறையில் வைக்க வேண்டும். பிறகு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்து முடித்த பிறகு எடுத்து வைத்துள்ள வெற்றிலைக்கு நடுவில் சந்தனம் குங்குமம் வைத்து உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தையும் இஷ்ட தெய்வம் அல்லது குலதெய்வம்அல்லது விநாயகர் பெருமான் என யாரையாவது நினைத்துக் கொண்டு கஷ்டங்களை கூற வேண்டும். இப்படி வழிபாடு செய்து முடித்துவிட்டு வெற்றிலையை பூஜை அறையில் வைத்து விடுங்கள்.
வெற்றிலை மாலை
அன்று மாலை ஒரு வெள்ளை நூலை எடுத்து அதில் மஞ்சள் தடவை வெற்றிலையை மாலையாக கொடுத்துக் கொள்ளுங்கள் இந்த மாலையை வீட்டில் நிலை வாசலில் மாட்டி விட வேண்டும்.12 வாரங்கள் தொடர்ந்து இதே முறையில் வழிபாடு செய்து விட வேண்டும். பயன்படுத்திய வெற்றிலை மாலையை யாருடைய கால் தடமும் படாத இடத்தில் போட்டு விட வேண்டும் அதில் இருக்கக்கூடிய நூல்களை நம்முடைய கையில் கட்டிக் கொள்ளலாம். இப்படி செய்தால் வீட்டில் உள்ள சரித்திர நிலை மாறி லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு அனைத்து சுப காரிய தடைகளும் தவிடு பொடியாகிவிடும். முழு மனதோடு மகாலட்சுமி வீட்டில் தங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இந்த வெற்றிலை பரிகாரத்தை செய்து பாருங்கள் 12 வாரங்கள் முடிந்த பிறகு உங்களுடைய பொருளாதார நிலை நிச்சயமாக மாறியிருக்கும்.