செல்வம் வீட்டில் குறைந்து கொண்டே இருப்பதற்கு நாம் செய்யும் தவறுகள்

நம் வீட்டில் நாம் செய்யக்கூடிய ஒரு சிறிய தவறுகள் கூட நம் வீட்டில் வருமானத்தை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. மகாலட்சுமி தேவியாருக்கு பிடிக்காத சில விஷயங்களை நம் வீட்டில் செய்தால் மகாலட்சுமி தேவியார் நம் வீட்டில் தங்க மாட்டார். எனவே மகாலட்சுமி தேவியாருக்கு பிடிக்காத விஷயங்கள் நாம்

By Ramya · 18/8/2024

நம் வீட்டில் நாம் செய்யக்கூடிய ஒரு சிறிய தவறுகள் கூட நம் வீட்டில் வருமானத்தை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. மகாலட்சுமி தேவியாருக்கு பிடிக்காத சில விஷயங்களை நம் வீட்டில் செய்தால் மகாலட்சுமி தேவியார் நம் வீட்டில் தங்க மாட்டார். எனவே மகாலட்சுமி தேவியாருக்கு பிடிக்காத விஷயங்கள் நாம் என்னென்ன செய்கிறோம் என்னென்ன தவறுகள் செய்தால் நம் வீட்டிற்கு மகாலட்சுமி தேவியார் வரமாட்டார் நம் வீட்டில் செல்வம் குறையும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

கழுவாத பாத்திரங்கள்

வீட்டில் நாம் ஒரு சில நேரங்களில் டீ காபி குடித்த டம்ளர்கள் சாப்பாடு சாப்பிட்ட தட்டுகள் ஸ்னாக்ஸ் சாப்பிட்டு தட்டுக்கள் அனைத்தையும் கழுவாமல் அப்படியே மறந்து வைத்து விடுவோம். அப்படி நாம் செய்யும் அந்த சிறு தவறுகளால் நம் வீட்டில் மகாலட்சுமி தேவியார் தங்க மாட்டார் வீட்டை எப்பொழுதும் நாம் சுத்தமாக வைத்துக் கொண்டால் தான் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும். எனவே இனிமேல் பாத்திரங்களை கழுவாமல் அந்தந்த இடத்தில் அப்படியே வைக்க வேண்டாம்.

தலைக்கு குளிக்க வேண்டிய முறைகள்

ஆண்களும் பெண்களும் ஒரு சில கிழமைகளில் தலைக்கு குளித்து பூஜை செய்து தெய்வத்தை வழிபட வேண்டும் என்று சாஸ்திரங்களில் சொல்லப்படுகிறது அந்த வகையில் ஆண்கள் புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் தலை குளித்து பூஜை செய்ய வேண்டும் என்றும் பெண்கள் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தலை குளித்து பூஜை செய்ய வேண்டும் என்றும் ஒரு சில ஆன்மீக நூல்களில் உள்ளது ஆனால் இந்த நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில் ஆண் பெண் இருவரும் தலைக்கு குளித்து பூஜை செய்வது நல்லது கிடையாது இப்படி செய்தால் கூட வீட்டிலும் அவர்களிடத்திலும் செல்வம் நிலைக்காமல் போகலாம்

தண்ணீரை வீணாக்குதல்

வீட்டில் நான் தண்ணீரை மிகவும் பார்த்து தான் செலவு செய்ய வேண்டும் வீணாக செலவு செய்யக்கூடாது தண்ணீரை எவ்வளவு சிக்கனமாக நாம் வைத்துக் கொள்கிறோமோ அதே போல் வீட்டில் பணமும் சிக்கனமாக இருக்கும் வீட்டில் ஒரு சொட்டு தண்ணீர் கூட வீணாக சிந்தக்கூடாது. ஜன்னல் ,வீட்டின் சுவர் போன்ற இடங்களில் ஈரப்பதம் இருக்கவே கூடாது அப்படி இருந்தால் அந்த இடத்தில் துர் தேவதைகள் வாசம் செய்வதாக கூறப்படுகிறது. இதனால் மகாலட்சுமி தேவியார் வீட்டில் தங்காமல் வெளியே போய் விடுவாராம் எனவே வீடு செல்வமும் குறைந்துவிடும்.

அக்னியை மதித்தல்

நம் வீட்டில் தனமும் தானியமும் பெருகுவதற்கு சமையல் அறையை மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் அப்பொழுதுதான் சமையலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் நம் வீட்டில் குறையாமல் இருக்கும். ஒரு சிலர் சமைத்து பாத்திரங்களை ஆங்காங்கே அப்படியே போட்டு வைத்திருப்பார்கள் அப்படி இருக்கவே கூடாது. காலையில் எழுந்து முகத்தை கழுவி விட்டு சமையல் அறையக்கு வந்து அடுப்பை சுத்தமாக கழுவி அரிசி மாவினால் கோலம் போட்டு மஞ்சள் குங்குமம் வைத்து பின்னர் தான் அக்னியை பற்ற வைக்க வேண்டும் முகம் கழுவாமல் அக்னியை பற்ற வைத்தால் வீட்டில் மகாலட்சுமி தேவியார் தங்க மாட்டார்

அமாவாசை திதி

அமாவாசை திதி என்பது நம் முன்னோர்களுக்காக நாம் கொடுக்க வேண்டிய ஒன்று அதனால் அமாவாசை திதி என்று வாசலை கூட்டி பெருக்கி கோலம் போடக்கூடாது. அப்படி செய்தால் நம் வீட்டில் செல்வங்கள் குறைந்து விடும் என்று கூறப்படுகிறது மேலும் அனைவரிடமும் அன்பாக நட்புடன் நடந்து கொள்ள வேண்டும் இன்முகத்துடன் அனைவரிடமும் நடந்து கொண்டால் நம் வீட்டில் மகாலட்சுமி தேவியார் தங்குவதற்கு மிகவும் ஆசைப்படுவார்.

Recipes AMP · Quick view
View full