காலை உணவிற்கு ஆரோக்கியமான பாசிப்பருப்பு இட்லி இப்படி செய்து பாருங்கள்!!

தென்னிந்தியா முழுவதும் பிரபலமான ஒரு பாரம்பரிய மற்றும் ஆரோக்கியமான காலை உணவு இட்லி. இட்லி தென்னிந்தியாவில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் பிரபலமான காலை உணவுத் தேர்வாகும். அது மட்டுமல்லாமல் சிறுவர்கள் முதல் வயது முதிந்தோர் வரை விரும்பி உண்ணும் உணவாகவும் இட்லி உள்ளது. அந்த வகையில்

By Prem Kumar · 16/11/2025

தென்னிந்தியா முழுவதும் பிரபலமான ஒரு பாரம்பரிய மற்றும் ஆரோக்கியமான காலை உணவு இட்லி. இட்லி தென்னிந்தியாவில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் பிரபலமான காலை உணவுத் தேர்வாகும். அது மட்டுமல்லாமல் சிறுவர்கள் முதல் வயது முதிந்தோர் வரை விரும்பி உண்ணும் உணவாகவும் இட்லி உள்ளது. அந்த வகையில் இன்று காலையும் உங்கள் வீட்டில் இட்லி செய்ய போகிறீர்களா? எப்போதும் ஒரே மாதிரியா இல்லாமல் காலை வேளையில் அலுவலகத்திற்கு செல்லும் நேரத்தில், உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையிலும், சற்று வித்தியாசமானதாகவும் சமைக்க வேண்டுமென்று நினைக்கிறீர்களா? அப்படியானால் வீட்டில் பாசிப்பருப்பு இருந்தால் எளிதில் சூப்பரா வித்தியாசமான சுவையில் ஒரு இட்லி செய்யலாம்.

புரதம் நிறைந்த பாசிப்பருப்பில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு நல்லது. பாசிப்பருப்பில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவும். கருவின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை வழங்குவதால் கர்ப்பிணி பெண்களுக்கு பாசிப்பருப்பு ஒரு சிறந்த ஊட்டச்சத்து மிக்க உணவாகும். வயிற்றுப்புண்ணை போக்கக்கூடிய பாசிப்பருப்பை சமையலில் கூட்டு, பொரியலில் சேர்த்து கொடுத்தால் சாப்பிட மாட்டார்கள் அதனால் இப்படி இட்லியாக செய்து கொடுங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த இட்லி பஞ்சு போல் மிருதுவாக இருப்பதோடு, செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான பாசிப்பருப்பு இட்லி எப்படி செய்வதென்று பார்ப்போம்.

இதனையும் படியுங்கள் : காலை உணவிற்கு பாசிப்பருப்பு அடை ஒரு தடவை இப்படி செஞ்சு பாருங்க அவ்வளவு சூப்பரா இருக்கும்!!

Recipes AMP · Quick view
View full