இதுவரை மோர், ரசம் என தனித்தனியாக சாப்பிட்ருப்பிங்க ஆனால் மோர் ரசம் சாப்பிட்டது உண்டா? இல்லை என்றால் ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்கள் அவ்வளவு ருசியாக இருக்கும்!!

ரசம் சாப்பிட்டு இருப்பீங்க, மோர் சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் இது இரண்டையும் சேர்த்து மோர் ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். ஒரு விருந்தென்றால் எப்படி வடை, பாயாசம் கண்டிப்பாக இருக்குமோ, அதே போல தான் இந்த மோரும் ரசமும். சாதாரணமாக ரசம் சாதம் சாப்பிட்ட பிறகு, மோர் சாதம் சாப்பிட

By Prem Kumar · 14/5/2024

ரசம் சாப்பிட்டு இருப்பீங்க, மோர் சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் இது இரண்டையும் சேர்த்து மோர் ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். ஒரு விருந்தென்றால் எப்படி வடை, பாயாசம் கண்டிப்பாக இருக்குமோ, அதே போல தான் இந்த மோரும் ரசமும். சாதாரணமாக ரசம் சாதம் சாப்பிட்ட பிறகு, மோர் சாதம் சாப்பிடுவது வழக்கம். ஆனால் இதை மோர் ரசம் என்று கூறுவார்கள். மோரிலேயே ரசத்திற்கு சேர்க்க வேண்டிய பொருட்களை சேர்த்து தாளித்து செய்யப்படுவது தான் இந்த மோர் ரசம்! ரொம்ப சுவையாக இருக்கக் கூடிய இந்த மோர் ரசத்தை செய்வதற்கு நேரமும் அதிகம் எடுக்கப் போவதில்லை.

இன்றைய அவசர உலகில் நமக்கு சமைப்பதற்கு கூட நேரம் இல்லாத நாட்கள் இருக்கத்தான் செய்கிறது. அப்படி அவசரத்திற்கு ஒரு சாதம் மட்டும் வைத்து விட்டு இப்படி ஒரு சிம்பிள் ரசம் வைத்தால் கூட போதும். கால் மணி நேரத்தில் செய்து விடலாம். ருசியும் அருமையாக இருக்கும். ரசத்தில் பல வகை உண்டு மிளகு ரசம், பூண்டு ரசம், தக்காளி ரசம், பருப்பு ரசம் இப்படி ரசமே பல வகைகளில் உண்டு.

இந்த மோரை வைத்து ரசம் வைப்பதிலும் ஒரு பலன் உண்டு நிறைய பேருக்கு புளி ஒத்துக் கொள்ளாது என்ன தான் ரசம் உடலுக்கு நல்லது என்றாலும் அதில் புளி சேர்த்து செய்வதால் சிலரால் அதை சாப்பிட முடியாது. அப்படியானவர்கள் இந்த முறையில் ரசம் வைத்து சாப்பிடலாம் சுவையும் பிரமாதமாகவே இருக்கும்.

இதனையும் படியுங்கள் : ருசியான செட்டிநாடு பூண்டு ரசம் இப்படி ஒரு தரம் செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

Recipes AMP · Quick view
View full