குரு பகவானுக்கு மிகவும் பிடித்த ராசிக்காரர்கள் இவர்கள் தான்!!

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், தன்னம்பிக்கை, தைரியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.மனித வாழ்விற்கு தேவையான அனைத்து விதமான செல்வங்களையும் தருபவர் என்பதால், எந்த கிரகத்திற்கும்

By ·

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், தன்னம்பிக்கை, தைரியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.மனித வாழ்விற்கு தேவையான அனைத்து விதமான செல்வங்களையும் தருபவர் என்பதால், எந்த கிரகத்திற்கும் இல்லாத தனிச் சிறப்பு குருவிற்கும், குருவின் பார்வைக்கும் உண்டு. ஒரு ஜாதகத்தில் எத்தனை தோஷங்கள் இருந்தாலும், குரு பார்வை இருந்தால் கெடுபலன்கள் குறைந்து நற்பலன்கள் மிகும். எனவேதான் ஜோதிட சாஸ்திரம் ‘குரு பார்க்க கோடி நன்மை’ என்று கூறுகிறது. ஒருவரின் ஒழுக்கம், பக்தி, புனித யாத்திரை, மற்றவர்களுக்கு ஞானத்தை போதிக்கும் தன்மை ஆகியவற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் குருவின் நிலையை பார்த்தாலே போதும். ஒருவரின் ஜாதகத்தில் குருவின் நிலை சிறப்பாக இருந்தால் அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்தால் நிறைந்திருக்கும் என்பது ஜோதிடத்தில் கூறப்படுகிறது. அத்தகைய குரு பகவானுக்கு பிடித்த சில ராசிகள் உள்ளன யார் அவர்கள் என்பது குறித்து இந்த ஆன்மிகப் பதிவில் காணலாம்.

கடகம் 

கடக ராசியை சந்திரன் ஆள்கிறார், மேலும் இந்த ராசியில் குரு உச்சமாக கருதப்படுகிறது. இதனால் தான் கடக ராசியில் பிறந்தவர்களுக்கு குருவின் சிறப்பு ஆசிகள் உண்டு என்று கூறப்படுகிறது. புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் முன்னேற்றம், குடும்ப நிம்மதி மற்றும் செல்வத்தை பெறுவர். அதுமட்டுமல்லாமல் குரு பகவானின் ஆசியால் செல்வம், சமூக மரியாதை, மற்றும் வாழ்க்கை மேன்மை போன்ற பல நன்மைகளை பெறுகிறார்கள். 

தனுசு 

தனுசு ராசியின் அதிபதி பகவான் ஆவார். இதனால் தனுசு ராசிக்காரர்கள் குரு பகவானுடைய சிறப்பு ஆசீர்வாதங்களைப் பெறுவார். தனுசு ராசிக்காரர்கள் குருவின் அருளால் நம்பிக்கையுடன் செயல்படுபவர்கள் தோல்வியில் கூட பயம் கொள்ளாமல் முயற்சி தொடர்பவர்கள். தனுசு ராசிக்காரர்கள் வியாபாரம், தொழில் மற்றும் நிதி நிலை முன்னேற்றத்தில் சிறந்த பலன்களை பெறுவர். புதிய முதலீடுகளால் உங்களுக்கு இரட்டிப்பான லாபம் கிடைக்கும். திருமண வாழ்க்கை நிம்மதியாகவும், சமூக மரியாதை அதிகமாகவும் இருக்கும். எப்போதும் உங்களுக்கு வறுமை என்ற சூழ்நிலை வராத அளவிற்குப் பார்த்துக் கொள்வார்.

சிம்மம் 

சிம்ம ராசியின் அதிபதி சூரியன், சூரியனுக்கும் குருவுக்கும் இடையே இயற்கையான சேர்க்கை உள்ளது. இதன் காரணமாக, சிம்ம ராசிக்காரர்கள் மீது குரு பகவானின் சிறப்பு ஆசீர்வாதங்கள் நிலைத்திருக்கும். தன்னம்பிக்கை மற்றும் தலைவர் தன்மையுடன் கூடிய இவர்கள் குரு பகவானின் ஆசீர்வாதத்தால் கல்வி மற்றும் தொழிலில் முன்னேற்றம் அடைவர். குரு பகவானின் அருளால் குடும்பத்தில் நிம்மதி  மகிழ்ச்சி மற்றும் மன அமைதி என அனைத்து வாழ்வதுறைகளிலும் நேர் பாதை கிடைக்கிறது. நல்ல பொருள் மற்றும் இன்பத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும்.

மீனம் 

குரு, தனுசு மற்றும் மீனம் ஆகிய இரண்டு ராசிகளையும் ஆளும் கிரகம். அத்தகைய சூழ்நிலையில், குரு பகவானின் ஆசிகள் எப்போதுமே மீன ராசிக்காரர்களுக்கு இருக்கும். கருணை, தியாகம், மற்றும் இலக்கிய கலை சார்ந்த துறைகளில் திறமையுடன் வாழ்வார். வாழ்நாள் முழுவதும் குருவின் அருள் கிடைக்கும். அனைத்தையும் தங்களுக்குச் சாதகமாகச் செய்யக்கூடிய சூழ்நிலையில் குரு பகவான் அமைத்துத் தருகிறார். இவர்கள் உள்ளத்தில் இருக்கும் பொறுமையான மற்றும் அமைதியான தன்மை, குரு பகவானின் அருளைப் பெற மிக முக்கியமான காரணமாகும். வேலை தொடர்பான பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும்.

இதனையும் படியுங்கள் : 50 ஆண்டுக்குப் பிறகு நிகழும் குரு, புதன், சூரியன் சேர்க்கை இனி இந்த ராசிகளுக்கு ராஜயோகம் தான்!!

Recipes AMP · Quick view
View full