Advertisement
சட்னி

சுவையான முள்ளங்கி சட்னி செய்வது எப்படி ?

Advertisement

நாம் வீட்டில் எப்பொழுதும் இட்லி, தோசை சப்பாத்தி போன்ற டிபன் உணவுகள் செய்யும் பொழுது பெரும்பாலும் தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி என இந்த இரு வகையிலான சட்னியை மட்டும் நான் திரும்பத் திரும்ப வைத்து சாப்பிடுவோம். இதை தொடர்ந்து சாப்பிட்டு நமக்கே சலித்து போய் இருக்கும். ஆனால் நீங்கள் புதியதாக ஏதேனும் சட்னி செய்ய விருப்பப்பட்டீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த முள்ளங்கி சட்னியை செய்து பாருங்கள்.

இதையும் படியுங்கள் : ஓரு வாரம் ஆனாலும் கெடாத கார சட்னி செய்வது எப்படி ?

Advertisement

பெரும்பாலும் முள்ளங்கியிலிருந்து ஒரு வித வாசனை வரும் இதனாலே பெரும்பாலும் யாரும் முள்ளங்கியை உணவில் சேர்த்துக் கொள்வது கிடையாது. ஆனால் இன்று நாம் இந்த முள்ளங்கியை சட்னி செய்யும்போது எந்த வித வாசனையும்யு வராது அதற்கு மாறாக அட்டகாசமான சுவையுடன் இருக்கும். மேலும் முள்ளங்கியில் அதிகளவிலான நீர் சேர்த்து மற்றும் நார் சத்துக்கள் இருப்பதால் நம் உடலுக்கும் ஆரோக்கியத்தை தரும். அதனால் இன்று சுவையான முள்ளங்கி சட்னி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் பாருங்கள்.

முள்ளங்கி சட்னி | Mullangi Chutney Recipe in tamil

Print Recipe
நீங்கள் புதியதாக ஏதேனும் சட்னி செய்ய விருப்பப்பட்டீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த முள்ளங்கி சட்னியை செய்து பாருங்கள். பெரும்பாலும் முள்ளங்கியிலிருந்து ஒரு வித வாசனை வரும் இதனாலே பெரும்பாலும் யாரும் முள்ளங்கியை உணவில் சேர்த்துக் கொள்வது கிடையாது. ஆனால் இன்று நாம் இந்த முள்ளங்கியை சட்னி செய்யும்போது எந்த வித வாசனையும்யு வராது அதற்கு மாறாக அட்டகாசமான சுவையுடன் இருக்கும். மேலும் முள்ளங்கியில் அதிகளவிலான நீர் சேர்த்து மற்றும் நார் சத்துக்கள் இருப்பதால் நம் உடலுக்கும் ஆரோக்கியத்தை தரும்.
Course Breakfast, dinner
Cuisine TAMIL
Keyword chutney, சட்னி
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 People
Calories 185

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 3  tbsp எண்ணெய்
  • 1 tbsp கடலை பருப்பு
  • 1 tbsp உளுந்த பருப்பு
  • கருவேப்பிலை சிறிது
  • 4 வரமிளகாய்
  • 1 துண்டு புளி
  • 1 துண்டு இஞ்சி
  • 10 சின்ன வெங்காயம் தோல் உரித்தது
  • 5 பல் பூண்டு
  • 3 முள்ளங்கி சிறியது
  • 1 கப் தேய்காய் நறுங்கவும்
  • 1 கொத்து கொத்தமல்லீ
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும், எண்ணெய் நன்கு காய்ந்ததும் இதனுடனன ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு மற்றும் ஒரு டீஸ்பூன் உளுந்தம் பருப்பு சேர்த்து சிவக்கும் வரை நன்றாக வறுத்துக் கொள்ளுங்கள்.
  • அதன் பின்பு சிறிது கருவேப்பிலை, 5 வர மிளகாய் மற்றும் ஒரு துண்டு புளி சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். வர மிளகாய் நன்றாக வறுப்பட்டு வந்ததும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து குளிர வைத்துக் கொள்ளுங்கள்.
    Advertisement
  • பின்பு மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும், இதனுடன் ஐந்து பல் பூண்டு மற்றும் பத்து சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பின் வெங்காயம் ஓரளவு வெந்தவுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் முன்று முள்ளங்கியை சேர்த்து கிளறிவிட்டு வதக்கி கொள்ளுங்கள்.
  • வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்தவுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் ஒரு கப் தேங்காய் மற்றும் ஒரு கைப்பிடி கொத்தமல்லி சேர்த்து நன்றாக கிளறிவிட்டு வதக்கவும்.
  • பின் அனைத்து பொருட்களும் நன்றாக வதங்கியதும், இதையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து இதனுடன் ஒரு துண்டு இஞ்சி, தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மை போல அரைத்துக் கொள்ளுங்கள்.
  • பின்பு சட்னியை ஒரு பவுளில் மாற்றி விட்டு கடாயை மறுபடியும் அடுப்பில் வைத்து இரண்டு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில கடுகு, உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளிக்கவுய், அந்த தாளிப்பையும் சட்னியுடன் சேர்த்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் சுவையான முள்ளங்கி சட்னி தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 4people | Calories: 185kcal | Carbohydrates: 34g | Protein: 16g | Saturated Fat: 1.4g | Sodium: 38mg | Potassium: 258.45mg | Fiber: 38g | Sugar: 3.7g | Calcium: 12mg

English Overview : mullangi chutney is one of the most important dishes in india. mullangi chutney recipe or mullangi chutney seivathu eppadi or mullangi chutney in Tamil are a few important terms to describe this recipe in the tamil language

Advertisement
Prem Kumar

Recent Posts

கொண்டைக்கடலையை வைத்து ஒரு ருசியான தோசை, தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க!

எப்பவும் அரிசி மாவில் தோசை சுட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? வெள்ளை கொண்டைக் கடலையை வைத்து, இந்த தோசையை…

6 மணி நேரங்கள் ago

18 ஆண்டுகளுக்குப் பின் உருவாகியுள்ள அங்காரக யோகத்தால் மிக கவனமாக இருக்க வேண்டிய மூன்று ராசிக்காரர்கள்

வேத ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும்போது நல்ல நிகழ்வுகளும் சில தீய நிகழ்வுகளும்…

8 மணி நேரங்கள் ago

எல்லா வகையான சாதத்திற்கும் சாப்பிட ருசியான இந்த பேபி கார்ன் மஞ்சூரியனை உங்கள் வீட்டிலும் ஒரு முறை செய்து பாருங்க!

பேபி கார்ன் இப்போது பரவலாக அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. பொதுவாக பேபி கார்ன் வைத்து பஜ்ஜி, கிரேவி, கார்ன் 65…

9 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் பால் பணியாரம் இப்படி ஒரு தரம் வீட்டிலே செய்து பாருங்க!

சதா இட்லி, தோசை ஒரே மாதிரி யான உணவை சாப்பிட்டு அலுத்துப் போனவர்களுக்கு பணியாரம் போல விதவிதமான உணவுகளை செய்து…

12 மணி நேரங்கள் ago

காரசாரமான சிக்கன் லெக் ஃப்ரை இப்படி ஒரு தடவ செஞ்சு பாருங்க எல்லாமே டக்குன்னு காலியாகிவிடும்

சிக்கன் அப்படின்னா யாருக்கு தான் பிடிக்காது சிக்கன் எழுதிக் கொடுத்தாலே ஒரு சில பேருக்கு நாக்குல இருந்து எச்சில் வடியும்…

13 மணி நேரங்கள் ago

பீர்க்கங்காய் மசாலா கறி

இன்று மதியம் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? இதுவரை வீட்டில் செய்திராத ஒரு குழம்பை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள்…

14 மணி நேரங்கள் ago