Advertisement
சைவம்

மதிய உணவுக்கு ஏற்ற சுவையான முள்ளங்கி பொரியல் கூட்டு செய்வது எப்படி ?

Advertisement

என்னதான் மதிய உணவுகளுக்கு குழம்பு, சோறு, கிரேவி என சாப்பிடுவதற்கு தயார் செய்து விட்டாலும் சோறுடன் வைத்து சாப்பிடுவதற்கு கூட்டு, பொரியல் மற்றும் அவியல் என் ஏதாவது கூட்டு ஒன்று வைத்திருந்தால் தான் நாம் சாப்பாடை சாப்பிடவே செய்வோம் இல்லையென்றால் அரைகுறையாக சாப்பிட்டுவிட்டு எழுந்து விடுவோம். அதுவும் குழந்தைகள் என்றால் சுத்தமாக கூட்டு இல்லாமல் சாப்பிட மாட்டார்கள்.

இதையும் படியுங்கள் : மணமணக்கும் கல்யாணவீட்டு வத்தல் குழம்பு செய்வது எப்படி ?

Advertisement

நீங்களும் அடுத்த நாளைக்கு என்ன கூட்டு செய்வது என்று சிந்தித்துக் கொண்டே இருப்பதற்கு பதிலாக வாரத்தில் ஒரு நாள் இது போன்று இந்த முள்ளங்கி பொரியல் கூட்டு செய்து பாருங்கள் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும் நீங்கள் வைத்த ஒரு தட்டு சோறும் காலி ஆகிவிடும் அந்த அளவிற்கு அசத்தலான சுவையில் இந்த முள்ளங்கி பொரியல் கூட்டு இருக்கும். ஆகையால் இன்று இந்த முள்ளங்கி பொரியல் கூட்டு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

முள்ளங்கி பொரியல் கூட்டு | Mullangi Poriyal Kottu Recipe in Tamil

Print Recipe
குழம்பு, சோறு, கிரேவி என சாப்பிடுவதற்கு தயார் செய்து விட்டாலும் சோறுடன் வைத்து சாப்பிடுவதற்கு கூட்டு, பொரியல் மற்றும் அவியல் என் ஏதாவது கூட்டு ஒன்று வைத்திருந்தால் தான் நாம் சாப்பாடை சாப்பிடவே செய்வோம் இல்லையென்றால் அரைகுறையாக சாப்பிட்டுவிட்டு எழுந்து விடுவோம். அதுவும் குழந்தைகள் என்றால் சுத்தமாக கூட்டு இல்லாமல் சாப்பிட மாட்டார்கள் நீங்களும் அடுத்த நாளைக்கு என்ன கூட்டு செய்வது என்று சிந்தித்துக் கொண்டே இருப்பதற்கு பதிலாக வாரத்தில் ஒரு நாள் இது போன்று இந்த முள்ளங்கி பொரியல் கூட்டு செய்து பாருங்கள் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும் நீங்கள் வைத்த ஒரு தட்டு சோறும் காலி ஆகிவிடும்.
Course Koottu, LUNCH
Cuisine Indian, TAMIL
Advertisement
Keyword mullangi, முள்ளங்கி
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Servings 3 People
Calories 134

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Ingredients

தேங்காய் அரைப்பதற்கு

  • ½ கப் தேங்காய் துண்டுகள்
  • 4 பச்சை மிளகாய்
  • 1 துண்டு இஞ்சி
  • 1 கொத்து கருவேப்பிலை

கூட்டு செய்ய

  • 2 பெரிய முள்ளங்கி சிறியாக நறுக்கியது
  • 3 மேசை கரண்டி எண்ணெய்
  • 1 tbsp கடுகு உளுந்த பருப்பு
  • 1 tbsp கடலை பருப்பு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 2 வர மிளகாய்
  • 12 சின்ன வெங்காயம் நறுக்கியது
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • 1 சிட்டிகை பெருங்காய தூள்
  • ½ டம்பளர் தண்ணீர்
  • உப்பு தேவையான அளவு
  • அரைத்த தேங்காய்

Instructions

  • நாம் எடுத்துக் கொண்ட இரண்டு பெரிய முள்ளங்கியின் மேற்புற தோல்களை
    Advertisement
    சீவி விட்டு சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் அரைக்கப் தேங்காய் துண்டுகள், 4 பச்சை மிளகாய், ஒரு துண்டு இஞ்சி மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து திருதிருவேன தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளுங்கள்.
  • அதன் பின்பு கடாயை அடுப்பில் வைத்து மூன்று மேசை கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு காய்ந்ததும் ஒரு டீஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  • பின் கடுகு பொரிந்து வந்தவுடன் ஒரு டீஸ்பூன் அளவு கடலைப்பருப்பு சேர்த்து வறுக்கவும், பின்பு ஒரு கொத்து கருவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கிய 12 சின்ன வெங்காயம், இரண்டு வரமிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.
  • பின்பு சின்ன வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கி வந்தவுடன் இதனுடன் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், மற்றும் ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் சேர்த்து கிளறி விடவும. பின் நாம் நறுக்கி வைத்திருக்கும் முள்ளங்கியை சேர்த்து ஒரு இரண்டு நிமிடங்கள் நன்றாக வதக்கி விட்டு.
  • அதன் பின் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கடாயை மூடி வைத்து ஒரு எட்டு நிமிடங்கள் நன்றாக வேக வைக்கவும்.
  • பின் முள்ளங்கி நன்றாக வெந்து வந்ததும் மிக்ஸியில் அரைத்த தேங்காயை கடாயில் சேர்த்து வதங்கி விடுங்கள் அவ்வளவுதான் சுவையான முள்ளங்கி பொரியல் கூட்டு இனிதே தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 150gram | Calories: 134kcal | Carbohydrates: 3g | Protein: 19g | Fat: 0.8g | Saturated Fat: 1.6g | Cholesterol: 1mg | Sodium: 13mg | Potassium: 187mg | Fiber: 2g | Sugar: 2.1g
Advertisement
Prem Kumar

Recent Posts

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

2 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

4 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

12 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

14 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago