முருங்கைப்பூ பூத்து குலுங்கும் பருவம் இது, இரும்பு சத்துக்கள் நிறைந்த முருங்கைப்பூவில் பொரியல் செய்து சாப்பிடுங்கள்!!!
முருங்கைபூவில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளடங்கியுள்ளது. முருங்கையின் பூ, காய், இலை என அனைத்துமே அதிக மருத்துவ தன்மை கொண்டது. இது நாம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். இந்த முருங்கைபூவில் சில பொருட்களையும் சேர்த்து ஒரு பொரியல் செய்தால் அதில் நமக்கு எவ்வளவு சத்து கிடைக்கும்
முருங்கைபூவில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளடங்கியுள்ளது. முருங்கையின் பூ, காய், இலை என அனைத்துமே அதிக மருத்துவ தன்மை கொண்டது. இது நாம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். இந்த முருங்கைபூவில் சில பொருட்களையும் சேர்த்து ஒரு பொரியல் செய்தால் அதில் நமக்கு எவ்வளவு சத்து கிடைக்கும், என்றுசொல்லவே முடியாது. அந்த அளவிற்கு ஆரோக்கியமான ஒரு பொரியல் ரெசிபியை இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம்.. உங்க வீட்ல இருக்கிறவங்க எல்லாருக்கும் வாரத்தில் ஒரு முறையாவது இந்த பொரியலை செய்து கொடுங்க.
முருங்கை காயும் இலையும் அடிக்கடி நாம் உணவில் சேர்த்துக் கொள்வோம். ஆனால் முருங்கை பூவை பெரும்பாலும் யாரும் அதிகம் எடுப்பதில்லை. இந்த முருங்கை பூவிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. முருங்கைப் பூவை தொடர்ந்து உண்பதால் நரம்பு தளர்ச்சி, ஞாபகம் மறதி, மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் உபாதைகள் கண் தொடர்பான பிரச்சனைகள் நீரிழிவு போன்ற பல்வேறு வியாதிகளுக்கு சிறந்த மருந்தாக உள்ளது.
முருங்கை பூவிலும் பொரியல் செய்து விட முடியும். முருங்கை மரம் முழுவதும் ஏராளமான சத்துக்களை உள்ளடக்கியுள்ளது. முருங்கைக்கீரை முதல் அதன் காம்பு வரை, முருங்கைக்காய், முருங்கைப்பூ என்று ஒவ்வொன்றுமே மனிதனின் ஆரோக்கியத்திற்கு தேவையான அத்தனை சத்துக்களையும் கொண்டு நம் கண் முன்னே சாதாரணமாக நிற்கிறது. அத்தகைய முருங்கைப்பூவில் பொரியல் எப்படி செய்வது என்பதை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.