வீடே மணக்க மணக்க ருசியான காளான் தேங்காய் பால் கிரேவி இப்படி செஞ்சி பாருங்க! இட்லி, தோசை சாதத்து கூட சாப்பிட பக்காவாக இருக்கும்!
நாம் வழக்கமாக சாப்பிடாத உணவு பொருள்களில் ஒன்று தான் காளான். காளான் குழந்தைகளுக்கு வலிமையை தரும் ஒரு உணவு ஆகும். காளான் இரும்பு மற்றும் செம்பு சத்துக்களையும் அதிகம் கொண்டது. காளான் குழம்பு மிகவும் ருசியான சமைப்பதற்கு எளிமையான ஒன்று. எளிதாக கிடைக்கும் ஒரு பொருளாக காளான் உள்ளதால் இத
நாம் வழக்கமாக சாப்பிடாத உணவு பொருள்களில் ஒன்று தான் காளான். காளான் குழந்தைகளுக்கு வலிமையை தரும் ஒரு உணவு ஆகும். காளான் இரும்பு மற்றும் செம்பு சத்துக்களையும் அதிகம் கொண்டது. காளான் குழம்பு மிகவும் ருசியான சமைப்பதற்கு எளிமையான ஒன்று. எளிதாக கிடைக்கும் ஒரு பொருளாக காளான் உள்ளதால் இதனை அடிக்கடி சமைத்து ருசிக்க முடியும். சைவ பிரியர்கள் பலரும் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் காளானும் ஒன்று. சிலருக்கு அசைவ உணவுகள் பிடிக்காது. இருந்தாலும் அசைவ உணவில் இருக்கும் சுவையும் மனமும் சைவ உணவில் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த வகையில் காளான் சமைத்து சாப்பிடுங்கள், காளான் உடலுக்கும் நல்ல மருத்துவ பயனளிக்கிறது, குழந்தைகள் விரும்பும் விதத்திலும், சுவையிலும் சத்தான உணவு வகைகளை செய்து கொடுப்பது என்பது மிகவும் அவசியமாகிறது.
அதேபோல் மிகவும் சுவையாகவும் ருசியாகவும் அசைவ உணவுகளுக்கு நிகராகவும் இருக்கும். காளான் வைத்து சுவையான மசாலா, கிரேவி, 65, மஞ்சூரியன் என்று பல விதங்களில் சேமித்து சாப்பிடலாம். அந்த வகையில் இன்று நாம் சூப்பரான சுவையில் காளான் வைத்து தேங்காய் பால் கிரேவி ரெசிபியை காண உள்ளோம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும். இந்த காளான் தேங்காய் பால் கிரேவி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதனுடன் சப்பாத்தி மட்டும் இல்லாமல் சாதத்துக்கு மற்றும் தயிர் சாதத்துக்கு தொட்டுக்கொள்ள அற்புதமாக இருக்கும். ஒரு முறை செய்து பாருங்கள் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இதனையும் படியுங்கள் : மதிய உணவுக்கு ருசியான காளான் புலாவ் ஒரு தரம் இப்மடி செஞ்சி பாருங்க! ஒரு பருக்கை சோறு கூட மிஞ்சாது!