சுட சுட சாதத்துடன் போட்டு சாப்பிட ருசியான காளான் குழம்பு இப்படி செஞ்சி பாருங்கள்!
காளான் குழந்தைகளுக்கு வலிமையை தரும் ஒரு உணவு ஆகும். காளான் குழம்பு மிகவும் ருசியான சமைப்பதற்கு எளிமையான ஒன்று. எளிதாக கிடைக்கும் ஒரு பொருளாக காளான் உள்ளதால் இதனை அடிக்கடி சமைத்து ருசிக்க முடியும். சப்பாத்தி, தோசை மற்றும் சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். வீட்டில் உள்ளவர்களுக்கு ஆரோக
காளான் குழந்தைகளுக்கு வலிமையை தரும் ஒரு உணவு ஆகும். காளான் குழம்பு மிகவும் ருசியான சமைப்பதற்கு எளிமையான ஒன்று. எளிதாக கிடைக்கும் ஒரு பொருளாக காளான் உள்ளதால் இதனை அடிக்கடி சமைத்து ருசிக்க முடியும். சப்பாத்தி, தோசை மற்றும் சாதத்துடன் கலந்து சாப்பிடலாம்.
வீட்டில் உள்ளவர்களுக்கு ஆரோக்கியமுள்ள உணவுகளை சமைத்து கொடுப்பது என்பது மிகப்பெரிய பரீட்ச்சையாகவே இருக்கும். ஏனெனில் குழந்தைகளும் சரி, வீட்டில் உள்ள மற்றவர்களும் சரி, ஆரோக்கியமான காய்கறிகளை தவிர்ப்பதையே வழக்கமாக கொண்டிருப்பார்கள். எனவே சத்தான உணவுகள் அவர்களுக்கு போதுமான ஊட்டச்சத்தை கொடுப்பதில்லை. எனவே குழந்தைகள் விரும்பும் விதத்திலும், சுவையிலும் சத்தான உணவு வகைகளை செய்து கொடுப்பது என்பது மிகவும் அவசியமாகிறது. அவ்வாறு ஊட்டச்சத்து நிறைந்த காளான் குழம்பை எவ்வாறு கறிக்குழம்பின் சுவையில் சமைப்பது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
அசைவம் என்றாலே அனைவருக்கும் அலாதி பிரியம் தான். ஏனென்றால் இவற்றில் சேர்க்கப்படும் மசாலாக்களின் சுவை ஒருவித நறுமணத்தை ஏற்படுத்துகிறது. இந்த வாசனை வந்து விட்டாலே வீட்டில் உள்ள குழந்தைகள் அம்மா இன்று என்ன சிக்கன் குழம்பா? மட்டன் குழம்பா? என்று கேட்க ஆரம்பித்து விடுவார்கள். அதிலும் பக்கத்து வீட்டுக்காரர்கள் கூட இன்று என்ன கறி குழம்பா? என்று கேட்பார்கள்.
அந்த அளவிற்கு இவற்றில் சேர்க்கப்படும் மசாலாக்கள் மிகவும் அருமையான நறுமணத்தை கொடுக்கின்றன. அவ்வாறு மசாலா சுவையில் இப்படி காளான் சேர்த்து ஒருமுறை குழம்பு செய்து பாருங்கள், வாசனை மட்டுமல்ல சாப்பிடவும் அசைவம் சாப்பிடுவது போல் தான் இருக்கும். எனவே குழந்தைகள் இதனை விருப்பமாக சாப்பிடுவார்கள். வாருங்கள் இந்த காளான் குழம்பை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.