காலை உணவிற்கு ஆரோக்கியமான முட்டை சேமியா செய்து கொடுங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
உப்புமா இந்தியா முழுவதும் செய்யப்படும் ஒரு பிரபலமான உணவு. உப்புமாவில் பல வகை உண்டு. அதில் ரவா உப்புமா, கோதுமை ரவை உப்புமா, அவல் உப்புமா, அரிசி உப்புமா, மற்றும் சேமியா உப்புமா குறிப்பிடத்தக்கவை. அதில் நாம் இங்கு காண இருப்பது முட்டை சேமியா. இதை பெரும்பாலும் காலை நேர டிஃபனாகவோ அல்லத
உப்புமா இந்தியா முழுவதும் செய்யப்படும் ஒரு பிரபலமான உணவு. உப்புமாவில் பல வகை உண்டு. அதில் ரவா உப்புமா, கோதுமை ரவை உப்புமா, அவல் உப்புமா, அரிசி உப்புமா, மற்றும் சேமியா உப்புமா குறிப்பிடத்தக்கவை. அதில் நாம் இங்கு காண இருப்பது முட்டை சேமியா. இதை பெரும்பாலும் காலை நேர டிஃபனாகவோ அல்லது மாலை நேர டிஃபனாகவோ தான் பலரும் சுவைக்கிறார்கள். இவை பெரும்பாலும் சாம்பார் மற்றும் தேங்காய் சட்னியுடன் தான் உண்ணப்படுகிறது.
இதில் நாம் முட்டை சேர்த்து செய்வதால் உடம்பிற்கும் மிகவும் நல்லது. நம்மில் பெரும்பாலோனருக்கு உப்புமா என்றாலே முகம் சுளித்து தான் சாப்பிடுவார்கள். ஆனால் உப்புமாவானது மிகவும் சுலபமாக செய்யக்கூடிய மற்றும் ஆரோக்கியமான வகை ஆகும். பலருக்கும் உப்புமா பிடிக்காததற்கு முக்கிய காரணம் அதன் சுவையே. எனவே அனைவருக்கும் பிடிக்கும் விதத்தில் உப்புமாவை கொஞ்சம் வித்தியாசமான சுவையில் இப்படி சமைத்து கொடுங்கள்.
உப்புமாவை பிடிக்காது என்று கூறியவர்கள் கூட நிச்சயமாக அடிக்கடி செய்து தருமாறு விரும்பி சாப்பிடுவார்கள். இதனை காலையில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அல்லது கணவருக்கு இதை செய்து கொடுத்து அனுப்பலாம். மாலை நேரத்திலும் இதை சூடாக தயாரித்து கொடுக்கலாம். இதை சாப்பிட்ட பிறகு நம் வயிறு முழுமையாக நிரம்பிய உணர்வு கிடைக்கும். இப்போது அனைவருக்கும் பிடிக்கும் வகையில் முட்டை மற்றும் மசாலா சேர்த்து அட்டகாசமான சுவையில் முட்டை சேமியா எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : காலை உணவுக்கு ஏற்ற சுவையான தயிர் சேமியா செய்வது எப்படி?