காரசாரமான மட்டன் கைமா குழம்பு ஒரு தடவை இப்படி செய்து பாருங்க!

- Advertisement -

காரசாரமா மட்டன் கைமா குழம்பு இப்படி செய்து பாருங்க. காரசாரமான மட்டன் கைமா குழம்பு எப்படி செய்வது என்பது தான் ரெசிப்பி. வெள்ளை சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட அத்தனை ருசியாக இருக்கும். இந்த ஒரு குழம்பு

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : செட்டிநாடு மட்டன் ரோஸ்ட் இனி இப்படி செய்து பாருங்கள்!

- Advertisement -

வைத்துவிட்டால் போதும் சண்டே அன்று இப்படி ஒரு சாப்பாட்டை வீட்டில் இருப்பவர்கள் விரும்பி சாப்பிட்டு விடுவார்கள். வாங்க நேரத்தை கடத்தாமல் நாவில் எச்சில் ஊற வைக்கும் இந்த ரெசிபியை நாம் தெரிந்து கொள்வோம்.

Print
No ratings yet

மட்டன் கைமா குழம்பு | Mutton Kaima Kulambu Recipe in Tamil

காரசாரமா மட்டன் கைமா குழம்பு இப்படி செய்து பாருங்க. காரசாரமான மட்டன் கைமா குழம்பு எப்படி செய்வது என்பது தான் ரெசிப்பி. வெள்ளை சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட அத்தனை ருசியாக இருக்கும். இந்த ஒரு குழம்பு வைத்துவிட்டால் போதும் சண்டே அன்று இப்படி ஒரு சாப்பாட்டை வீட்டில் இருப்பவர்கள் விரும்பி சாப்பிட்டு விடுவார்கள். வாங்க நேரத்தை கடத்தாமல் நாவில் எச்சில் ஊற வைக்கும் இந்த ரெசிபியை நாம் தெரிந்து கொள்வோம்.
Prep Time10 minutes
Active Time30 minutes
Total Time40 minutes
Course: dinner, LUNCH
Cuisine: Indian, TAMIL
Keyword: mutton, மட்டன்
Yield: 4 People
Calories: 3265kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 250 கிராம் மட்டன் கைமா
  • 2 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 2 தக்காளி பொடியாக நறுக்கியது
  • 1/2 Tsp மஞ்சள் தூள்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 Tsp சீரகம்
  • 1 Tsp மல்லித்தூள்
  • 1 சிட்டிகை மிளகுதூள்
  • 2  Tsp மிளகாய் தூள்
  • 1 Tsp கரம் மசாலா
  • 3 Tsp இஞ்சி பூண்டு விழுது
  • 1 கொத்து கருவேப்பிலை 
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் மட்டன் கைமாவை நீரில் நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதில் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், 1 டீஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி, 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
  • பிறகு அதில் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
  • பின் வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு மணம் வரும் வரை வதக்கி, பின் அதில் தக்காளி, ஊற வைத்த கைமா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும்.
  • அடுத்து அதில் மிளகாய் தூள், மிளகுத் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து கிளறி, 1 கப் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 15-20 நிமிடம் வேசு வைக்க வேண்டும்.
  • பின் மூடியை திறந்து பார்த்து, குழம்பு போதாதெனில் மேலும் சிறிது தண்ணீர் ஊற்றி, 3-4 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், மட்டன் கைமா குழம்பு ரெடி.

Nutrition

Serving: 550G | Calories: 3265kcal | Protein: 21g | Fat: 2g | Saturated Fat: 0.2g | Cholesterol: 4mg | Potassium: 614mg | Sugar: 0.5g

LEAVE A REPLY

Recipe Rating




Please enter your comment!
Please enter your name here