அருமையான செட்டிநாடு பெப்பர் மட்டன் ரோஸ்ட் ரெசிபி. பொதுவாக சிக்கன் உடலுக்கு சூடு என்பதால் பெரும்பாலோனோர் விரும்பி உண்ணும் அசைவ உணவாக மட்டன் உள்ளது. வார இறுதி நாட்களில் நமது அனைவரது வீட்டிலும் மாமிசம் உண்பது வழக்கம். எவ்வளவு நாள் தான் ஒரே மாதிரி மட்டன் குருமா, குழம்பு செய்து
இதையும் படியுங்கள் : காரசாரமான சுவையில் கோவை தண்ணீர் மட்டன் குழம்பு இப்படி செஞ்சி பாருங்க!
சாப்பிடுவீர்கள். கொஞ்சம் வித்தியாசமாக மட்டன் செட்டிநாடு ஸ்டைலில் இப்படி ஒரு கிரேவியை பாருங்கள். அசத்தலான ருசி கிடைக்கும் வாங்க நேரத்தை கடத்தாமல் இந்த அருமையான செட்டிநாடு ஸ்டைல் ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.
செட்டிநாடு மட்டன் ரோஸ்ட் | Chettinad Mutton Roast Recipe in Tamil
அருமையான செட்டிநாடு பெப்பர் மட்டன் ரோஸ்ட் ரெசிபி. பொதுவாக சிக்கன் உடலுக்கு சூடு என்பதால் பெரும்பாலோனோர் விரும்பி உண்ணும் அசைவ உணவாக மட்டன் உள்ளது. வார இறுதி நாட்களில் நமது அனைவரது வீட்டிலும் மாமிசம் உண்பது வழக்கம். எவ்வளவு நாள் தான் ஒரே மாதிரி மட்டன் குருமா, குழம்பு செய்து சாப்பிடுவீர்கள். கொஞ்சம் வித்தியாசமாக மட்டன் செட்டிநாடு ஸ்டைலில் இப்படி ஒரு கிரேவியை செய்து பாருங்கள். அசத்தலான ருசி கிடைக்கும் வாங்க நேரத்தை கடத்தாமல் அந்த அருமையான செட்டிநாடு ஸ்டைல் ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.
Yield: 4 People
Calories: 426kcal
Equipment
- 1 குக்கர்
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
வறுத்து அரைக்க
- 2 Tsp மிளகு
- 2 Tsp சோம்பு
மட்டன் ரோஸ்ட் செய்ய
- 1/2 KG மட்டன்
- 2 பெரிய வெங்காயம் நறுக்கியது
- 3 பச்சை மிளகாய் நறுக்கியது
- 3 Tbsp தேங்காய் எண்ணெய்
- 1 தக்காளி நறுக்கியது
- 1 Tbsp இஞ்சி பூண்டு விழுது
- 1 Tbsp கரம் மசாலா
- 1 கொத்து கருவேப்பிலை
- கொத்தமல்லி சிறிது
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் மட்டனை நீரில் நன்கு கழுவி, பின் குக்கரில் போட்டு, அத்துடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மூடி5-6 விசில் விட்டு, குறைவான தீயில் 10 நிமிடம் வேக வைத்து இறக்கி, விசில் போனதும் குக்கரை திறந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர் சோம்பு மற்றும் மிளகை ஒரு வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து, குளிர வைத்து பின் மிக்ஸியில் போட்டு பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை 1 நிமிடம் வதக்கவும்.
- பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி, உப்பு சேர்த்து, வேக வைத்துள்ள மட்டனை அப்படியே வாணலியில் போட்டு, தீயை அதிகரித்து, மட்டன் நன்கு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
- பிறகு அதில் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். அடுத்து அதில் நாம் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து சிறிது நேரம் வதக்கி பின் கொத்தமல்லித் தூவி கிளறி இறக்கினால், செட்டிநாடு பெப்பர் மட்டன் ரோஸ்ட் ரெடி.
Nutrition
Serving: 800G | Calories: 426kcal | Protein: 32g | Saturated Fat: 0.5g | Cholesterol: 1mg | Potassium: 721mg | Sugar: 0.5g | Calcium: 0.1mg