Home Uncategorized குக்கரில் சமைக்க கூடாத சில உணவுகள்

குக்கரில் சமைக்க கூடாத சில உணவுகள்

இந்த பரபரப்பான உலகத்தில் பிரஷர் குக்கர் சமையலறையில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. சாதாரண கடாயில் நாம் சமைப்பதை விட குக்கரில் நிமிஷத்தில் சமைத்து முடித்து விடலாம் அதனால் அனைவரும் பிரஷர் குக்கரை பயன்படுத்தி சமைக்கிறார்கள் எல்லாருடைய வீட்டிலும் கண்டிப்பாக இந்த பிரஷர் குக்கர் இருக்கும் ‌. நீராவியின் அழுத்தத்தை பயன்படுத்தி சமைக்கின்ற இந்த பிரஷர் குக்கரில் சமையல் மிகவும் எளிதாகி விடுகிறது.

-விளம்பரம்-

ஆனால் ஆய்வின்படி அனைத்து பொருட்களையும் பிரஷருக்கு குரல் சமைப்பது நல்லது கிடையாது மாவு பொருட்களை குக்கரில் சமைக்கும் போது அக்ரிலாமைடு என்ற தீங்கு விளைவிக்கக்கூடிய ஒரு ரசாயனம் உருவாகும். இது மலட்டுத்தன்மை புற்றுநோய் மற்றும் எண்ணற்ற பிரச்சனைகளை உருவாக்கும். ஒரு சில உணவுகளை நாம் குக்கரில் கண்டிப்பாக சமைக்கவே கூடாது அந்த உணவுப் பொருட்களை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

கீரைகள்

கீரைகளை கடாயில் வைத்து வேக வைப்பது விட குக்கரில் மிகவும் விரைவாக சமைத்து விடலாம். அதனால் கீரைகளை சமைப்பதற்கு நாம் குக்கரை பயன்படுத்துவோம் ஆனால் கீரைகள் குக்கரில் சமைக்கும் போது மிருதுவானதாக மாறிவிடும் அது நம் உடம்பிற்கு நல்லது கிடையாது எனவே கீரைகளை குக்கரில் சமைக்க கூடாது.

இனிப்புகள்

பழங்களை வைத்து செய்யக்கூடிய இனிப்புகள், மற்ற இனிப்பு பொருட்கள் ஆன கேசரி பாயாசம் போன்றவை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் செய்யக்கூடாது. பேக்கிங் சம்பந்தமான உணவு பொருட்களையும் இதில் செய்யக் கூடாது.

பிரட் சம்பந்தமான உணவுகள்

பிரட் தூள்களை பயன்படுத்தி சமைக்க கூடிய உணவுகள் பிஸ்கட்டுகள் கேக்குகள் போன்றவற்றை குக்கரில் சமைத்தால் மிகவும் மிருதுவாக மாறிவிடும் எனவே இது போன்ற உணவுகளை பிரஷருக்கு ஒரு சமைக்காமல் இருப்பது நல்லது சாதாரண கடாயில் இது போன்றவைகளை செய்வது நல்லது.

-விளம்பரம்-

பழங்கள்

பிறந்த குழந்தைக்கு சாப்பாடு கொடுக்க துவங்கியதிலிருந்து அந்த குழந்தைகளுக்கு பழங்களை குக்கரில் வைத்து மிகவும் மென்மையாக கொடுப்போம் ஆனால் அதன் மென்மை தன்மை படத்தின் சத்துக்களையும் சுவையையும் இழக்க செய்யும் எனவே பலத்தின் அனைத்து சத்துக்களும் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும் என்றால் அப்படியே கொடுப்பது நல்லது

பால்

பால் மற்றும் பால் சம்பந்தமான பொருட்களான தயிர் மோர்‌ பன்னீர் போன்றவைகளை குக்கரில் சமைக்க கூடாது அது அதனுடைய தன்மையையும் சுவையையும் இழக்க செய்யும்.

பாஸ்தா

பொழுதெல்லாம் குழந்தைகள் பாஸ்தா மேகி போன்ற விரைவு உணவுகளை ஏன் விரும்புகிறார்கள் இதனை சாதாரணமாகவே நாம் சாப்பிடுவது உடம்பிற்கு நல்லது கிடையாது அதிலும் குக்கரில் சமைத்து சாப்பிடுவது இதனுடைய சீரான தன்மையை இழக்க செய்து உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எனவே பாஸ்தாவை செய்யும் பொழுது கடாயை பயன்படுத்தி சமைப்பது நல்லது.

-விளம்பரம்-

கடல் உணவுகள்

மீன்களில் நிறைய சத்துக்கள் உள்ளது அதனை பிரஷர் குக்கரில் சமைப்பதால் அதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அனைத்தும் அழிந்து விடும் எனவே மீன் மற்றும் கடல் சம்பந்தமான உணவுகளான இறால் கடம்பா நண்டு போன்றவைகளை குக்கரில் சமைக்க கூடாது.

இதனையும் படியுங்கள் : வீட்டில் சிறுதானியம் இருந்தால் போதும் பிரமாதமாக இப்படி சிறுதானிய லட்டு செய்யலாம் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க!