ஜீன்ஸ் பேனட் பழசாச்சினு தூக்கி போடாதிங்க நிமிடத்தில் புதுசாக மாற்றாலாம்! எளிமையான வீட்டு குறிப்புகள்.!

- Advertisement -

பொதுவாக நம் வீட்டில் ஆண்களின் வெளுத்துப்போன ஜீன்ஸ் பேண்டுகள் நிறைய இருக்கும். ஜீன்ஸ் பேண்ட்கள் அதிகமாக அழுக்காவதால் நாம் அதனை பிரஸ் வைத்து தேய்த்து எடுத்து வைத்திருப்போம் அந்த ஜீன்ஸ் பேண்டுகளை தூக்கி எறியாமல் துவைத்து முடித்த பிறகு தண்ணீரில் உஜாலா கலந்து ப்ளூ கலர் மற்றும் லேசான ப்ளூ கலர் போன்ற பேண்ட் களை எடுத்தால் அதில் உஜாலாவின் வண்ணம் பிடித்து பார்ப்பதற்கு புது ஜீன்ஸ் பேண்ட்களைப் போல மாறிவிடும்.

-விளம்பரம்-

மற்ற கலர் ஜீன்ஸ் பேண்ட்களை தூக்கி எறியாமல் அடுப்பில் வேலை பார்க்கும் போது சூடு கையில் படாமல் இருக்க ஒரு அழகான எளிமையான கையுறை தைக்கலாம். அதற்கு முதலில் பேண்ட் டின் கால் பகுதியில் சிறு துண்டை வெட்டி எடுத்து விட்டு பிறகு கொஞ்சம் பெரிய துண்டுகளாக மூன்று துண்டுகளை வெட்டி வைத்துக் கொள்ளவும். பிறகு அதனை உள் பக்கமாக திருப்பி தையல் இருக்கும் இடத்தில் வெட்டி கீழே போட்டு விடவும். இதே போல் மூன்று துண்டுகளிலும் செய்து மொத்தம் ஆறு துணிகளாக எடுத்து வைத்துக் கொள்ளவும். இந்த கையுறையை செய்வதற்கு ஐந்து துண்டுகள் மட்டுமே போதுமானது. எனவே முதல் இரண்டு திண்டுகளை அடுக்காக வைத்து மூன்றாவது துண்டை இரண்டு துண்டுகளாக வெட்டி அதன் மேல் வைத்து மற்ற இரண்டு துண்டுகளையும் அதன் மேல் வைக்கவும். பிறகு இரண்டு பெரிய பகுதியையும் ஒரு சிறிய பகுதியையும் ஊசி நூல் வைத்து தைத்து கொள்ளவும். அதனை உள்பக்கமாக திருப்பி வைத்து சுலபமாக கையுரையாக பயன்படுத்தலாம்.

- Advertisement -

நம் வீட்டில் உள்ள தீப்பெட்டிகள் சில நேரங்களில் தண்ணீர் பட்டு நமத்து போயிருந்தால் அதனை சூடான கேஸ் ஸ்டவ் பர்னர் மீது வைத்தால் நன்றாக தீக்குச்சியை வைத்து உரசலாம்.

வீட்டில் வாங்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயத்தில் மேல் பகுதியில் வேர் முளைத்து வந்தால் அதனை தீயில் வாட்டி எடுத்தால் வேர் மறுபடியும் முளைக்காது.

வாழைப்பழம் நீண்ட நாட்களுக்கு கருத்துப் போகாமல் இருக்க மேல் காம்பு உள்ள வாழை பழங்களாக வாங்கி அதன் மேல் மெழுகை உருக்கி சேர்த்துக் கொண்டால் காற்று உட்புகாமல் வாழைப்பழம் பல நாட்களுக்கு நன்றாக இருக்கும்.

-விளம்பரம்-

குக்கரில் சமைக்கும் பொழுது மேல் பகுதியில் தண்ணீர் அதிகம் வடிந்து ஓடாமல் இருக்க குக்கர் மூடியில் உள்பகுதியிலும் வெளிப்பகுதியிலும் ஏதாவது ஒரு சமையல் எண்ணையை தடவி விட வேண்டும்.

இதனையும் படியுங்கள் : இந்த இரண்டு செடிகள் வீட்டில் இருந்தால் போதும் பணம் பற்றிய கவலை இல்லாமல் வாழ்க்கை முழுவதும் நிம்மதியாக வாழலாம்!