மல்லிகை பூ வாடாமல் வதங்காமல் இருக்க பூக்கடைக்கார அம்மா சொன்ன இரகசியம்!

- Advertisement -

அதிகளவு பெண்கள் விரும்புவது மல்லிகை பூக்களை தான். இந்த விசேஷ நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் பூக்களின் விலை அதிகமாக இருக்கும் அதனால் வீட்டில் உள்ளவர்கள் உடனே கல்யாணத்துக்கும், கோவில்களுக்கும் தலையில் வைத்து செல்ல 2 நாட்களுக்கு முன்பே பூக்களை கட்டி வைத்து விடுவார்கள். ஒரு பூ எவ்வளவு நாட்கள் தாங்கும் என்றால் 2 நாட்கள் என்று அனைவரும் சொல்வீர்கள் ஆனால் கிடையாது பூக்கள் 7 நாட்கள் வரை புதியது போல் வைத்துக்கொள்ள முடியும். இதற்கு நிறைய வழிகள் இருக்கு அதனை இப்போது ஒவ்வொன்றாக தெரிந்துகொள்வோம்.

-விளம்பரம்-

இந்த பிரச்சனை அதிகளவு அனைவரின் வீட்டில் உள்ள பெண்களுக்கும் இருக்கும். ஏன் பெண்ணை மட்டும் சொல்கிறேன் என்றால் பெண்கள் தான் தினமும் கஷ்டப்பட்டு பூக்களை கட்டி அதனை வாடாமல் பத்திரமாக பார்த்துக் கொண்டாலும் சில நாட்களில் பூக்கள் கெட்டு விடுகிறது. ஆகவே பூக்கள் கெட்டுப்போகாமல் இருக்க டிப்ஸ் பற்றி பார்க்கப்போகிறோம்.

- Advertisement -

டிப்ஸ் 1

வாழையிலையில் மல்லிகை பூவினை வைத்தால் இலை கிழித்து விடும் அதனால் பூவினை வதங்காமல் வைத்துக் கொள்ள முடியாது. பூ வதங்காமல் இருக்க ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த பாத்திரத்தை தலைகீழாக வைத்து அந்த பாத்திர அளவிற்கு வாழை இலையை வெட்டிக் கொள்ளுங்கள். இப்பொழுது இந்த வாழையிலையை பாத்திரத்தின் உள் வைத்து பூவை அதன்‌மேல் வைத்து விடுங்கள்.

டிப்ஸ் 2

-விளம்பரம்-

வாழை இலை வாடாமல் இருப்பதற்கு முக்கிய காரணமே அதன் காம்பு தான். அந்த காம்பினை பாத்திரத்தில் இருக்கும் பூவின் மேல் நறுக்கி வைத்து விடுங்கள். பின்னர் அதன் மேல் ஒரு வாழை இலை போட்டு மூடி விடுங்கள். இப்படி செய்தால் பூ 15 நாட்கள் வரை வாடாமல் அப்படியே இருக்கும்.

டிப்ஸ் 3

பூவினை தரையில் போட்டு கட்டாமல் ஒரு தட்டத்தின் மீது போட்டு நூலில் கட்டிக்கொள்ளுங்கள். மொட்டாக இருக்கும்போதே கட்டி தண்ணீர் தெளித்து கவரில் போட்டு முடிச்சி போட்டு அதை அழுத்தினால் உள்ளே இருக்கும் காற்று வந்துவிடும். இப்படி செய்தால் 15 நாட்கள் ஆனாலும் பூ வாடாமலும், கெட்டுப்போகாமலும் இருக்கும்.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : எலியும், பூனையுமாய் இருக்கும் கனவன் மனைவி சண்டை தீர! வீட்டில் இந்த ஒரு குழம்பு வைத்தால் போதும்!

டிப்ஸ் 4

உங்களுடைய வீட்டில் வாழை இலை இல்லை என்றாலும்‌ பண்டிகை காலங்களில் பூ அதிக நாட்கள் இருக்க வேண்டும் என்றாலும் ஒரு வெள்ளைக் காகிதத்தில் பூவை வைத்து நன்றாக சுருட்டி ஒரு மூடி போட்ட பாத்திரத்தில் வைத்து விடுங்கள்.

டிப்ஸ் 5

உதிரி பூக்கள் அதிகமாக இருந்தால் அது வாடாமல் இருப்பதற்கு அதனுடன் காய்ந்த பூக்களை வைத்து விடுங்கள். பின்னர் அதன் மேல் ஒரு ஈரத்துணி போட்டு மூடி போட்டு மூடி விடுங்கள். இப்படி செய்தால் உதிரி பூக்கள் காயாமல் இருக்கும்.