கணவன் மனைவி என திருமண பந்தத்திற்குள் வரும் ஆண், பெண், இருவரும் முதலில் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு அவர்களுக்கு பிடித்தது என்ன பிடிக்காதது என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். பின்பு கணவன் மனைவி இருவரும் தங்கள் வாழ்வில் நடப்பதை கணவன் மனைவியிடம் மனைவி கணவனிடமும் முதலில் தெரியப்படுத்திக் கொண்டே வாருங்கள். நீங்கள் ஒரு செயலை சேர்ந்து செய்யும்போது இருவரின் கருத்துக்கள் வேறுபட்டதாக இருக்கும் போது யாராவது ஒருவர் அதில் விட்டுக் கொடுத்து செல்லுங்கள், உடன் உள்ளவர் உங்களில் ஒரு பாதி என நினையுங்கள். இதுபோன்று விஷயங்களை கடைப்பிடிப்பவர்களுக்கு கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் வருவே வராது. இருந்தாலும் இதையும் மீறி வரும் சண்டை சச்சரவர்களை எப்படி ஆன்மீகம் ரீதியாக நாம் எதிர் கொள்வது என்பதனை எந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்
அவரைக்காய், மொச்சை
செவ்வாய் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை சரியான முறையில் அமைந்துவிட்டால் போதும் ஒரு குடும்பத்தில் உள்ள கணவன் மனைவிக்குள் எவ்விதமான சண்டை சச்சரவுகள் வராமல் வாழ்க்கை சுமூகமாக செல்லும். ஆனால் செவ்வாய் மற்றும் சுக்கிரன் சேர்க்கை சரியாக அமையவில்லை என்றால் செவ்வாய்க்கிழமைகள் அன்று சுக்கிரனுக்கு உகந்த மொச்சை வைத்து சமைக்க வேண்டும், அதாவது அவரைக்காய் குழம்பு அவர்க்காய் பொரியல், மொச்சை கூட்டு இதுபோன்ற அவரை வைத்தும், மொச்சை வைத்தும் குழம்பு கூட்டு பொரியல் என செய்து சாப்பிட்டு வாருங்கள். இப்படி செய்யும்போது கணவன் மனைவிக்குள் சண்டை, சச்சரவுகள் என்ற வார்த்தைக்கே இடம் இருக்காது.
பிரிந்த கனவன் மனைவி
அதேபோல் கணவன் கணவன் மனைவி இருவரும் பிரிந்து இருக்கிறார்கள் என்றால் அவர்களும் சேர்ந்து வாழ்வதற்காக ஒரு வழி உள்ளது மனைவி கையால் சமைத்துக்கு அவரைக்காய், மொச்ச, துவரம் பருப்பை சமைத்து கணவருக்கு கொடுக்காலம். சமைத்து கொடுக்கமுடியாது என்பவர் இந்த மொச்சை, அவரை, துவரம் பருப்பு போன்ற பொருட்களை அன்யோன்யமாக வாழும் வேறு யாரவது கணவன் மனைவிக்கு நீங்கள் தானமாக கொடுக்கும் பொழுது அவர்கள் வீட்டில் உள்ள மனைவி அந்த உணவை சமைத்து அவர்கள் கணவனுக்கு கொடுக்கும் பொழுது அந்த புண்ணியம் உங்களுக்கு வந்து சேரும் இதன் மூலமாகவும் பிரிந்து இருந்த கணவன் மனைவி கூட சேர்ந்து வாழ்வதற்கு ஒரு வழி பிறக்கும் இந்த பரிகாரத்தை தொடர்ந்து நீங்கள் செய்து வந்தால் நல்ல பலனையே கொடுக்கும்.