கோவை ஸ்பெஷல் தண்ணீர் மட்டன் குழம்பு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!!

- Advertisement -

மட்டன் என்றாலே நாம் அனைவருக்கும் பிடித்த ஒன்று மட்டன் குழம்பு வைத்து சாப்பிட்டால் அதன் சுவை மோகமாக இருக்கும் பிரபலமாக ஹோட்டல்களில் இவர்கள் செய்யக்கூடிய தண்ணீர் மட்டன் குழம்பு இதனை வீட்டில் செய்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தண்ணீர் மட்டன் குழம்பு

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : ஆந்திரா காரசாரமான ஸ்பெஷல் மட்டன் சுக்கா இப்படி செஞ்சி பாருங்க!

- Advertisement -

விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.அதனால் இன்று இந்த தண்ணீர் மட்டன் குழம்பு செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Print
2 from 2 votes

கோவை தண்ணீர் மட்டன் குழம்பு | Kovai Water Mutton Kulambu Receipe in Tamil

மட்டன் என்றாலே நாம் அனைவருக்கும் பிடித்த ஒன்று மட்டன் குழம்பு வைத்து சாப்பிட்டால் அதன் சுவை மோகமாக இருக்கும் பிரபலமாக ஹோட்டல்களில் இவர்கள் செய்யக்கூடிய தண்ணீர் மட்டன் குழம்பு இதனை வீட்டில் செய்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தண்ணீர் மட்டன் குழம்பு விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
Prep Time25 minutes
Active Time15 minutes
Total Time40 minutes
Course: Breakfast, dinner, LUNCH
Cuisine: Indian, TAMIL
Keyword: Kovai Water Mutton Kulambu, தண்ணீர் மட்டன் குழம்பு
Yield: 4 people
Calories: 902kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

  • 500 kg மட்டன்
  • 20 சின்ன வெங்காயம்
  • 7 பூண்டு                          
  • 2 கொத்து கறிவேப்பிலை
  • 7 மிளகாய் வற்றல்
  • 1 பட்டை
  • 3 கிராம்பு
  • 1 tsp மல்லி
  • ½ tsp சீரகம்
  • ½ tsp சோம்பு
  • ½ tsp மிளகு
  • ¼ tsp மஞ்சள் தூள்
  • 2 பெரிய வெங்காயம்
  • ½ tsp கடுகு                            
  • 3 tbsp நல்எண்ணெய்
  • தேவையான அளவு தண்ணீர்                     
  • தேவையான அளவு உப்பு                             

செய்முறை

  • தண்ணீர் மட்டன் குழம்பு செய்ய முதலில் மட்டனை சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பின் கடாயில் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம்,பூண்டு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
  • சின்ன வெங்காயம் சிறிது வதங்கிய பின்னர் அதில் பட்டை,கிராம்பு சேர்க்க வேண்டும். கொத்தமல்லி, சோம்பு, சீரகம், மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
  • மிக்ஸி ஜாரில் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். குக்கரில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
  • அதனை' கழுவி வைத்த மட்டனை அதில் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். அரைத்த விழுதை சிறிது தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  • அதன் பின் அரைத்த விழுதை அதில் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். வேக வைப்பதற்கு தேவையான தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து குக்கரை மூடி வைத்து மட்டனை வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர்மட்டன் வேக வைத்ததும் அதனை சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும். பின் வேக வைத்த மட்டனையும் தண்ணீரையும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து அதில் வெங்காயம், மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
  • வேக வைத்த மட்டனை அதில் சேர்த்து சிறிது நேரம் மிதமான தீயில் வைத்து எடுக்க வேண்டும். இப்பொழுது சுவையான கோவை தண்ணீர் மட்டன் குழம்பு தயார்.

Nutrition

Serving: 600gm | Calories: 902kcal | Carbohydrates: 56g | Protein: 4.6g | Cholesterol: 7.8mg | Sodium: 1092mg | Potassium: 782mg | Sugar: 3.3g | Calcium: 34mg

LEAVE A REPLY

Recipe Rating




Please enter your comment!
Please enter your name here